

கணினி அடிப்படைகள் (Computer Basics)
Flashcard
•
Computers
•
9th - 12th Grade
•
Hard
roki roki
FREE Resource
Student preview

9 questions
Show all answers
1.
FLASHCARD QUESTION
Front
கணினி என்றால் என்ன?
Back
கணினி என்பது ஒரு மின்னணு சாதனம் (Electronic Device) ஆகும். இது நாம் கொடுக்கும் தரவுகளைப் (Data) பெற்று, அவற்றைச் செயலாற்றி (Process), நமக்குத் தேவையான தகவல்களாக (Information) தருகிறது.
2.
FLASHCARD QUESTION
Front
கணினி இயங்கும் முறை (IPO Cycle) என்ன?
Back
கணினி மூன்று முக்கிய படிகளில் இயங்குகிறது: 1. உள்ளீடு (Input): தகவல்களைக் கணினிக்குள் செலுத்துதல். 2. முறைவழியாக்கம் (Processing): உள்ளீடு செய்யப்பட்ட தரவுகளைச் செயன்முறைப்படுத்தல். 3. வெளியீடு (Output): முடிவுகளை நமக்குத் திரையில் காட்டுதல் அல்லது அச்சிட்டுத் தருதல்.
3.
FLASHCARD QUESTION
Front
கணினியின் முக்கிய பாகங்கள் என்ன?
Back
கணினியை இரண்டு முக்கிய பிரிவுகளாகப் பிரிக்கலாம்: (அ) வன்பொருள் (Hardware): கணினியில் நாம் கண்களால் பார்க்கவும், கைகளால் தொட்டு உணரவும் கூடிய பாகங்கள். (ஆ) மென்பொருள் (Software): கணினியில் குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய உதவும் நிரல்கள்.
4.
FLASHCARD QUESTION
Front
வன்பொருள் (Hardware) என்றால் என்ன?
Back
கணினியில் நாம் கண்களால் பார்க்கவும், கைகளால் தொட்டு உணரவும் கூடிய பாகங்கள். எடுத்துக்காட்டு: விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse), திரை (Monitor), சி.பி.யு (CPU).
5.
FLASHCARD QUESTION
Front
மென்பொருள் (Software) என்றால் என்ன?
Back
கணினியில் குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய உதவும் நிரல்கள் (Programs). இதை நம்மால் தொட்டு உணர முடியாது. எடுத்துக்காட்டு: Windows, MS Word, Paint, Games.
6.
FLASHCARD QUESTION
Front
உள்ளீட்டு சாதனங்கள் (Input Devices) என்ன?
Back
விசைப்பலகை (Keyboard), சுட்டி (Mouse), ஒலிவாங்கி (Microphone).
7.
FLASHCARD QUESTION
Front
வெளியீட்டு சாதனங்கள் (Output Devices) என்ன?
Back
திரை (Monitor), அச்சுப்பொறி (Printer), ஒலி பெருக்கி (Speaker).
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?