பழமொழி படிவம் 3

பழமொழி படிவம் 3

9th Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

tamil

tamil

KG - University

10 Qs

தமிழ்

தமிழ்

9th Grade

10 Qs

பழமொழி படிவம் 3

பழமொழி படிவம் 3

Assessment

Quiz

Other

9th Grade

Medium

Created by

Ranjini Mahaivam

Used 10+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள பழமொழிக்கு ஏற்ற மிகப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.


ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

எந்த விதமான நாட்டியம் ஆடினாலும் ஆட்டத்தில் தவறு நடக்காமல் சிறப்பாக ஆடுவதில் கவனமாக இருக்க வேண்டும்.

எந்த விதமான காரியங்களைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே கருத்தைச் செலுத்த வேண்டும்.

எந்த விதமான காரியங்களைச் செய்தாலும் அவற்றைச் சரியாகச் செய்தால் சிறந்த வெற்றியினைப் பெறலாம்.

எந்த விதமான காரியங்களைச் செய்தாலும் முதலில் சரியான முறையில் திட்டங்களைத் தீட்டி செயல் படுத்த வேண்டும்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்கு ஏற்ற மிகப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


டாக்டர் மு.வ. வின் தனிப் பண்புகள்

ஒன்றனை இழந்தாலோ அல்லது தொலைத்து விட்டாலோ அதற்காகக்

கவலைப்பட்டது இல்லை. காரணம், அதனால் பயன் இல்லை என்பது இவரது

கருத்து. வீணாக வருந்தும் நேரத்தை வேறு ஆக்க வேலைக்குப் பயன்படுத்த

வேண்டும் என்பதே இவரது கொள்கை.

தன் கையே தனக்கு உதவி

அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது

தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கீழ்க்காணும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க


முழுகவனத்துடனும் பொறுமையுடனும் இடைவிடாது செய்துவரும் ஒரு செயல் கடினமானதாக இருந்தாலும் அஃது எளிதாகிவிடும்.

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

கண்டதைக் கற்க பண்டிதன் ஆவான்

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோடிட்ட இடத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


_________________ என்பதற்கேற்ப மணி பூப்பந்து விளையாட்டில் அதிகம் ஈடுபட்டாலும், இவ்வாண்டு எழுதவிருக்கும் பி.தி.3 தேர்வில் சிறந்த புள்ளிகளைப் பெற வேண்டுமென்று கவனமாகப் படித்தான்.

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள சூழலுக்குப் பொருத்தமான பழமொழி யாது ?


ஆசிரியர் : நீங்கள் எவ்வளவுதான் விளையாட்டில் உங்களை ஈடுபடுத்திக்

கொண்டாலும் உங்கள் கவனம் கண்டிப்பாக

எதிர்வரும் தேர்வில் இருக்க வேண்டும்.


செல்வன் : சரிங்க ஐயா!

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


நடந்து முடிந்த ஒரு காரியத்தை அல்லது கைவிட்டுப் போன ஒரு பொருளை

நினைத்து வருந்திப் பயனில்லை.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

தன் கையே தனக்கு உதவி.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது.

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான இணையைத் தேர்ந்தெடுக.

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது - நடந்து முடிந்த ஒரு காரியத்தை அல்லது கைவிட்டுப்போன ஒரு பொருளை

நினைத்து வருந்திப் பயனில்லை

எறும்பு ஊரக் கல்லும் தேயும்- தொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் நாளடைவில் மிகவும் கடினமாகி விடும்.

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு - எச்செயலைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே கவனம் செலுத்த வேண்டாம்.

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கொடுக்கப்பட்டுள்ள பழமொழிக்கு ஏற்ற மிகப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.


அற்ப அறிவு ஆபத்துக்கிடம்.

நமக்குப் அறிவு இருத்தல் அவசியம். குறைவான அறிவு ஆபத்துக்கு

வழிவகுத்துவிடும்.

நமக்குப் போதிய அறிவு இருத்தல் அவசியம். குறைவான அறிவு ஆபத்துக்கு

வழிவகுத்துவிடும்.

நமக்குப் போதிய அறிவு இருத்தல் அவசியம். அறிவு ஆபத்துக்கு வழிவகுத்துவிடும்.