wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொகைநிலைத் தொடர் மதிப்பீடு

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

a)

3

b)

4

c)

5

d)

6

2.

சேர்த்து எழுதுக.

சிவப்பு + சேலை =

a)

சிவச்சேலை

b)

சிவப்புச்சேலை

c)

சிவப்புசேலை

d)

சிவப்பஞ்சேலை

3.

சேர்த்து எழுதுக.

மல்லிகையினது + பூ =

a)

மல்லிகைபூ

b)

மல்லிபூ

c)

மல்லிகையினது பூ

d)

மல்லிப்பூ

4.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களுள் வினைத்தொகை உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அம்மா செய்த ஊறுகாய் மிகவும் சுவையாய் இருந்தது.

b)

வெயில் காலங்களில் இளநீர் பருகுவது உடலுக்கு நல்லது.

c)

அந்த சிறுவன் செந்தமிழில் மிகவும் சரளமாய் பேசினான்.

d)

பிறரிடம் பேசும் போது நாம் இன்சொல்லை பயன்படுத்துவது அவசியம்.

5.

"இரக்க மனம் படைத்த அந்த ஆடவரை அனைவரும் பாராட்டினர்."

மேற்கண்ட வாக்கியத்தில் பண்புத்தொகையைக் கண்டுபிடிக.

a)

இரக்க மனம் - மையீற்றுப் பண்புத்தொகை

b)

அந்த ஆடவர் - பொதுப் பண்புத்தொகை

c)

இரக்க மனம் - பொதுப் பண்புத்தொகை

d)

அனைவரும் பாராட்டினர் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

6.

கீழ்காண்பனவற்றுள் 6ஆம் வேற்றுமை தொகைக்குப் பொருத்தமான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

முருகன் சட்டை அப்பாவுக்கு பெரிதாக இருந்தது.

b)

என்னுடைய பென்சிலை இராமு திருடி விட்டான்.

c)

கூலி வேலை செய்து பால குடும்பத்தைக் காப்பாற்றினான்.

d)

நேற்று இரவு மனோ பால் பருகிய பின் உறங்கினான்.

7.

{ தமிழ் + திறன் ; தமிழ் + அது + திறன் }

இவற்றுள் எது வலிமிகும்? ஏன்?

a)

தமிழ்த்திறன். ஆறாம் வேற்றுமை தொகையாக இருப்பின் வலிமிகும்.

b)

தமிழ்த்திறன். ஆறாம் வேற்றுமை தொடராக இருப்பின் வலிமிகும்.

c)

தமிழினதுத்திறன். ஆறாம் வேற்றுமை தொகையாக இருப்பின் வலிமிகும்.

d)

தமிழினதுத்திறன். ஆறாம் வேற்றுமை தொடராக இருப்பின் வலிமிகும்.

8.

அம்மா பொருள் வாங்க (i) கடைக்குச் சென்றார். அங்கு அன்னநடை (ii) போட்டபடியே ஒரு பெண் வந்தார். அவர் கையில் ஓர் ஊறுகாய் (iii) புட்டியை எடுத்து வந்தார். அந்த ஊறுகாயின் பெயர் இராமன் சீதை (iv).

கீழ்காணும் செய்தியில் கோடிடப்பட்டுளவனவற்றுள் உவமைத் தொகையை தெரிவு செய்க.

a)

I

b)

II

c)

III

d)

IV

9.

இவற்றுள் எவைச் சரியான தொகை வகையைச் சேர்ந்தவை?

a)

ஊறுகாய், சுடுகாடு, இளநீர், குடிநீர் - வினைத்தொகை

b)

அம்மா அப்பா, ஊண் உணவு, பூ பழம் - உம்மைத்தொகை

c)

சாரைப்பாம்பு, மலேசிய நாடு, கருப்புப்பேனா - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

d)

வட்டமுகம், இரக்கமனம், செந்தமிழ் – பொதுப் பண்புத்தொகை.

10.

இவற்றுள் எது வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை?

a)

சாரைப்பாம்பு

b)

சிவப்புச்சேலை

c)

துணிக்கட்டு

d)

கடல் மீன்