NEW
Font size
WorksheetsBTP 3023
Total questions: 10
Worksheet time: 4mins
தொகாநிலைத்தொடர் என்றால் என்ன ?
ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் இயங்கும் போது , இடையில் சொல்லோ உருபோ
மறைந்து வருதல் தொகாநிலைத்தொடர்.
ஒன்றுக்கு மேற்பட்ட சொற்கள் ஒரு சொல் போல் இயங்கும் போது , இடையில் உருபு மட்டும் மறைந்து வருதல் தொகாநிலைத்தொடர்.
சொற்றொடரில் உருபுகளோ சொற்களோ மறையாமல் வெளிப்படையாக இருந்து
பொருள் தருமாயின் தொகாநிலைத்தொடராகும்.
சொற்றொடரில் உருபு மட்டும் மறையாமல் வெளிப்படையாக இருந்து பொருள் தருமாயின் தொகாநிலைத்தொடராகும்.
தொகாநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?
6
7
8
9
கீழ்காண்பவற்றுள் எது எழுவாய்த்தொடர் அல்ல என்பதை அடையாளம் காண்க ?
ராமு பேசினான்.
மருத்துவமனைக்குச் சென்றான்
கோழி கூவியது
தேவி உறங்கினாள்.
' ஐயா + உண்ணுங்கள்' என்பது
பெயரச்சத்தொடர்
வினையெச்சத்தொடர்
வேற்றுமைத்தொடர்
விளித்தொடர்
' வந்தார் ஆசிரியர்' எனும் சொல்லின் தொகாநிலைத்தொடரில் வகையைத் தெரிவு செய்க.
வினைமுற்றுத்தொடர்
எழுவாய்த்தொடர்
பெயரச்சத்தொடர்
வினையெச்சத்தொடர்
கீழ்காண்பவற்றுள் வேற்றுமைத்தொடர் தொகாநிலைத்தொடரைத் தெரிவு செய்க.
வீடு வந்தான்.
புலி பாய்ந்தது.
புத்தகத்தைப் படித்தான்.
கல்லா மக்கள்
கீழ்காண்பவற்றுள் எது இடைச்சொற்றொடர் தொகாநிலைத்தொடர்.
மற்று என்னகுறை
சாலச் சிறந்தது
பாம்பு பாம்பு
அம்மா வாருங்கள்
கீழ்காண்பவற்றுள் எது சரியாக வலிமிகுந்துள்ளது.
அம்மா + சொன்னார் = அம்மாச் சொன்னார்
பூரணி + பேசு = பூரணிப் பேசு
பறவை + பறந்தது = பறவை பறந்தது
கவிதா + பேசினாள் = கவிதாப் பேசினாள்
கீழ்காண்பவற்றுள் தொகாநிலைத்தொடரைத் தெரிவு செய்க.
அமுதன் இன்று பள்ளிக்குச் சென்றான்.
இன்று தஞ்ஞொங் மாலிம் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.
அப்பெண்ணின் கயல்விழி ராமுவின் மனதைக் கவர்ந்தது.
மங்கை கட்டுரை எழுதினாள்.
1. கீழ்காண்பவற்றுள் உரிச்சொற்றொடர் தொகாநிலைத்தொடரை அடையாளம் காண்க.
I. கோவிலுக்குச் சென்றான்.
II. கடிமலர்
III. சாலச்சிறந்தது
IV. கொல்லெனச் சிரித்தாள்.
I , II
II , III
III , IV
I , IV
