wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு

Total questions: 37

Worksheet time: 6mins

Name
Class
Date
1.
1. கொக்குக்கு நீண்ட ___________ உண்டு. 
a)
அழகு
b)
அலகு
2.
நயந்தாரா மிகவும் _______________. 
a)
அழகானவர்
b)
அலகானவர்
3.
நீ கேட்ட கேள்விக்கு எனக்குப் பதில் ____________த் தெரியவில்லை. 
a)
அழிக்க
b)
அளிக்க
4.
காட்டடை __________ வீடுகள் கட்டினார்கள். 
a)
அழித்து
b)
அளித்து
5.
காற்றில் ___________ அசைந்தன. 
a)
இலைகள்
b)
இழைகள்
6.
காவல் அதிகாரிகள் தீவிரவாதியை ___________ பார்த்தனர். 
a)
உழவு
b)
உளவு
7.
உழவர் __________த் தொழில் செய்கிறார். 
a)
உளவு
b)
உழவு
8.
வானொலியின் ________ அளவைக் குறைத்து வை. 
a)
ஒளி
b)
ஒலி
9.
என் தம்பி நடந்ததை _________ மறைவின்றி விளக்கினான். 
a)
ஒளிவு
b)
ஒழிவு
10.
நான் வீடமைப்பு வளர்ச்சிக் _________ வீட்டில் வசிக்கிறேன்.  
a)
கலக
b)
கழக
11.
அந்தக் ______________ பலர் மாண்டனர். 
a)
கலகத்தில்
b)
கழகத்தில்
12.
அம்மா தண்ணீரைக் ____________ ஊற்றி வைத்தார். 
a)
கலத்தில்
b)
களத்தில்
13.
போர்க்__________ போர் நடைபெற்றது. 
a)
களத்தில்
b)
கலத்தில்
14.

அகில் _________________ தெரியாமல் பேருந்திலேயே

அமர்ந்துவிட்டான். அச்சமயம் அவனைத் தேடி அவனுடைய பெற்றோர் காவலரிடம் புகார் செய்தனர்.

a)

வலி

b)

வழி

15.

மீரா தன் பெற்றோருடன் வெளியூர் சென்றிருந்தாள். அதை

அறிந்த திருடன் வீடு புகுந்து _________________ அடித்தான்.

a)

கொல்லை

b)

கொள்ளை

16.

பிரியா தன் தோழியுடன் நீண்ட நேரம் விளையாடியதால் தாகம் எடுத்தது. அவள் அருகிலிருந்த கடையில் குளிர்

________________ வாங்கினாள்.

a)

பாணம்

b)

பானம்

17.

நேற்று ஏற்பட்டத் தீ விபத்தில் ஒரு வீடு __________.

a)

எரிந்தது

b)

எறிந்தது

18.

__________ தாங்க முடியாமல், குமார் பெட்டியைக் கீழே போட்டான். அந்தப் பெட்டி தரையில் விழுந்தது.

a)

கனம்

b)

கணம்

19.

கண்ணன் புது வீட்டுக்குக் குடிபுகுந்தான். அப்பா அவனுக்கு ஒரு தனி ________________ கொடுத்தார்.

a)

அறையை

b)

அரையை

20.

தரை குப்பையாக இருந்தது. மாணவர்கள் குப்பைகளை _________________ குப்பைத்தொட்டியில் போட்டார்கள்.

a)

அல்லி

b)

அள்ளி

21.

கமலா அவளுடைய தோழிக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதை ஓர் _______________ வைத்து அனுப்பினாள்.

a)

உறையில்

b)

உரையில்

22.

குமரன் தன் நண்பர்களுடன் காற்பந்து விளையாடியபோது, கால் தவறிக் கீழே விழுந்தான். அப்போது அவனுடைய வலது __________________ காயம் ஏற்பட்டது.

a)

தோலில்

b)

தோளில்

23.

மாமா சுவரில் மாட்டுவதற்காக ஓர் அழகான படத்தை வாங்கி வந்தார். அதை மாட்டுவதற்காக அவர் ___________________ ஒன்றைத் தேடினார்.

a)

ஆணி

b)

ஆனி

24.

சுமதியின் வீட்டில் கிளி ஒன்று இருந்தது. அதன் ________________ வளைந்து இருக்கும்.

a)

அலகு

b)

அழகு

25.

நாம் பல விதமான நூல்களைப் படித்து _________________ கொள்ள வேண்டும். அப்போது தான், நம் பொது அறிவை வளர்த்துக் கொள்ள முடியும் என்று ஆசிரியர் கூறினார்.

a)

அறிந்து

b)

அரிந்து

26.

நான் என் வீட்டுச் சுவரில் புதிதாக புகைப்படம் மாட்ட ____________________ அடித்தேன்.

a)

ஆணி

b)

ஆனி

27.

மாணவர்கள் ______________________ சீருடை அணிந்து வந்தனர்.

a)

பள்ளிக்கு

b)

பல்லிக்கு

28.

வெயில் காலத்தில் ____________________ தண்ணீர் அளவு குறைந்து கொண்டே இருந்தது

a)

ஏரியில்

b)

ஏறியில்

29.

வேகமாக ஓடி வந்த யானை சேற்றுக் ______________ விழுந்தது.

a)

குழியில்

b)

குளியில்

30.

தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதம் _______________ மாதம்.

a)

ஆணி

b)

ஆனி

31.

உன்னுடைய அடையாள அட்டையின் கடைசி __________ என்ன?

a)

என்

b)

எண்

32.

ஆரோக்கியமான வாழ்வை வாழ தினம் அதிக பழங்களை ___________________.

a)

உண்

b)

உன்

33.

மாலா தன் தோட்டித்தில் மலர்ந்த பூக்களைப் __________________.

a)

பரித்தாள்

b)

பறித்தாள்

34.

என் பிறந்தநாளுக்காக அம்மா வீட்டில் ஆட்டுக்__________ சமைத்திருந்தார்.

a)

கரி

b)

கறி

35.

குரங்கு மரத்தில் ______________ பழத்தைப் பறித்தது

a)

ஏறி

b)

ஏரி

36.

__________ வீட்டுப்பாடங்களை தவறாமல் செய்வது உன்னுடைய பொறுப்பு.

a)

உன்

b)

உண்

37.

கீழே விழுந்த ராமு __________________ துடித்தான்

a)

வலியால்

b)

வழியால்