NEW
Font size
WorksheetsYetcham /Adaimolli
Total questions: 8
Worksheet time: 6mins
திட்டத்தைச் செயல்படுத்தும் போது________________சவால்களை
எதிர்கொள்பவர்களுக்கு வெற்றி கிட்டும்.
விளையும்
வளரும்
எழும்
எழுப்பும்
மாறன் தாம் _____________________பரிசுகளைக் கண்டு பெருமை அடைந்தான்.
வாங்கிய
வென்ற
கொடுத்த
விரும்பிய
பண்டிகைக் காலங்களில் பணக்காரர்கள் ____________ செலவு செய்வார்கள்.
ஆடம்பரமான
இயல்பாக
ஆடம்பர
அக்கறையாக
நான் உள்ளத்தைக் கவரும் ____________________ நினைக்கும்போது மகிழ்ச்சியடைகிறேன்.
எண்ணங்களை
எண்ணங்களில்
எண்ணங்களின்
எண்ணங்களால்
பள்ளித் ____________________ கலந்துகொண்ட மாணவர்கள் மறக்கமுடியாத அனுபவத்தைப் பெற்றனர்.
திறப்பு விழாவை
திறப்பு விழாவில்
திறப்பு விழாவிற்கு
திறப்பு விழாவிலிருந்து
வயலில் உழுது வேலை பார்க்கும் ____________________ வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பவை சூரியனும் நிலமும் ஆகும்.
உழவனில்
உழவனை
உழவனின்
உழவனுக்கு
____________________ தோன்றிய வள்ளல்களும் மன்னர்களும் தமிழ்மொழியின் சிறப்பினை மறவாது அதை வாழும் மொழியாகவே வளர்த்து வந்தனர்
பண்டைக்காலத்தை
பண்டைக்காலத்தில்
பண்டைக்காலத்தின்
பண்டைக்காலத்திற்கு
நகைச்சுவை கலந்த நடிப்போடு குமரன் மேடையில் நடித்ததைப் பார்த்த குமரனின் தம்பி, “____________________!” என்று கூச்சலிட்டான்
அண்ணா
அண்ணனை
அண்ணனுக்கு
அண்ணனிலிருந்து
