Worksheets10-SCIENCE-ONEMARKS-PHYSICS-TM
Total questions: 47
Worksheet time: 24mins
கீழ்கண்டவற்றுள் நிலைமம் எதனைச்சார்ந்தது
பொருளின் எடை
பொளின் ஈர்ப்பு முடுக்கம்
பொருளின் நிறை
அ மற்றும் ஆ
கணத்தாக்குகீழ்கண்டவற்றுள்எதற்குச்சமமானது
உந்தமாற்று வீதம்
விசைமற்றும் காலமாற்றவீதம்
உந்தமாற்றம்
நிறைவீத மாற்றம்
கணத்தாக்குகீழ்கண்டவற்றுள்எதற்குச்சமமானது
உந்தமாற்று வீதம்
விசைமற்றும் காலமாற்றவீதம்
உந்தமாற்றம்
நிறைவீத மாற்றம்
கீழ்கண்டவற்றுள் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது?
ஓய்வுநிலையில் உள்ள பொருளில்
இயக்கநிலையில் உள்ள பொருளில்
அ மற்றும் ஆ
சமநிறையுடைய பொருள்களில் மட்டும்
உந்தமதிப்பைy அச்சிலும் காலத்தினைx அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
கணத்தாக்குவிசை
முடுக்கம்
விசை
விசை மாற்ற வீதம்
புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு ms-2ஆகும். இது கீழ்காண் அலகுகளில்எதற்கு சமமாகும்.
cms-1
NKg-1
N m2 kg-1
cm2s-2
ஒரு கிலோகிராம் எடைஎன்பது _________ ற்கு சமமாகும்
9.8 டைன்
9.8 x 104N
98 x 104
980 டைன்
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்டகோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.
4M
2M
M/4
M
நிறைமதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில்50% சுருங்கினால் புவியில் பொருட்களின் எடையானது?
50% குறையும்
50% அதிகரிக்கும்
25% குறையும்
300% அதிகரிக்கும்.
ராக்கெட் ஏவுதலில்_______________ விதி/கள்பயன்படுத்தப்படுகிறது.
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் பொது ஈர்ப்பியல்விதி
நேர்கோட்டு உந்தமாறாக்கோட்பாடு
அ மற்றும் இ
A,B,C,D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல்
எண்கள் முறையே 1.31, 1.43, 1.33,2.4 எனில்,
இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமமாக
உள்ள பொருள் எது?
அ) A
ஆ) B
இ) C
ஈ) D
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான
மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட
வேண்டிய தொலைவு
அ) f
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f
ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
3. மின் விளக்கு ஒன்று குவிலென்சு ஒன்றின்
முதன்மைக் குவியத்தில் வைக்கப்பட்டுள்ளது. மின்
விளக்கு ஒளியூட்டப்படும் போது, குவி லென்சானது
அ) விரிக்கும் கற்றைகளை உருவாக்கும்
ஆ) குவிக்கும் கற்றைகளை உருவாக்கும்
இ) இணைக் கற்றைகளை உருவாக்கும்
ஈ) நிறக் கற்றைகளை உருவாக்கும்
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும்
___________ மதிப்புடையது.
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) நேர்க்குறி (அ) எதிர்க்குறி
இ) சுழி
ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை
முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால்,
பொருள் வைக்கப்பட்டு இடம் _________
அ) முதன்மைக் குவியம்
ஆ) ஈறிலாத் தொலைவு
இ) 2f
ஈ) f க்கும் 2f க்கும் இடையில்
ஒரு லென்சின் திறன் 4D எனில் அதன் குவியத்
தொலைவு
அ) 4 மீ
ஆ) -40 மீ
இ) -0.25 மீ
ஈ) – 2.5 மீ
கிட்டப்பார்வை குறைபாடு உடைய கண்ணில்,
பொருளின் பிம்பமானது _______ தோன்றுவிக்கப்படுகிறது.
அ) விழித் திரைக்குப் பின்புறம்
ஆ) விழித்திரையின் மீது
இ) விழித் திரைக்கு முன்பாக
ஈ) குருட்டுத் தானத்தில்
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி
செய்ய உதவுவது
அ) குவி லென்சு
ஆ) குழி லென்சு
இ) குவி ஆடி
ஈ) இரு குவிய லென்சு
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப்
படிப்பதற்கு உகந்த லென்சு எது?
அ) 5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவிலென்சு
ஆ) 5 செமீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
இ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
ஈ) 10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
ஒரு முப்பட்டகத்தின் வழியே செல்லும், நீலம்,
பச்சை மற்றும் சிவப்பு நிறங்களின் அலை
நீளங்கள் V B , V G , V R எனில் பின்வருவனவற்றுள்
எச்சமன்பாடு சரியானது?
அ) V B = V G = V R
ஆ) V B > V G >V R
இ) V B < V G < V R
ஈ) V B < V G > V R
பொது வாயு மாறிலியின் மதிப்பு
அ) 3.81 J மோல் –1 K –1
ஆ) 8.03 J மோல் –1 K –1
இ) 1.38 J மோல் –1 K –1
ஈ) 8.31 J மோல் –1 K –1
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது
குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம்
அ) நேர்க்குறி
ஆ) எதிர்க்குறி
இ) சுழி
ஈ) இவற்றில் எதுவுமில்லை
23. ஒரு பொருளை வெப்பப்படுத்துபோது அல்லது குளிர்விக்கும்போது ஏற்படும் நீள்வெப்ப விரிவு எந்த அச்சு வழியாக நடைபெறும்?
அ) X அல்லது –X
ஆ) Y அல்லது –Y
இ) (அ) மற்றும் (ஆ)
ஈ) (அ) அல்லது (ஆ)
4. மூலக்கூறுகளின் சராசரி வெப்பநிலை என்பது _________ ஆகும்.
அ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையே உள்ள வேறுபாடு
ஆ) இயக்க ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலின் கூடுதல்
இ) மொத்த ஆற்றல் மற்றும் நிலை ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
ஈ) இயக்க ஆற்றல் மற்றும் மொத்த ஆற்றலுக்கிடையேயான வேறுபாடு
26. கீழ்கண்டவற்றுள் எது சரியானது?
a) மின்னூட்டம் பாயும் வீதம் மின்திறன்.
(b) மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
(c) மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
d) மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
27. மின்தடையின்SI அலகு
a) மோ
b) ஜூல்
c) ஓம்
d) ஓம் மீட்டர்
ஒரு எளிய மின்சுற்றில் சாவியை மூடியவுடன் மின்விளக்கு ஒளிர்வது ஏன்?
(a) சாவி மின்சாரத்தை தயாரிக்கிறது
(b) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதையை மூடி விடுகிறது.
(c) சாவி மூடியிருக்கும் போது மின்சுற்றின் சுற்றுப்பாதை திறக்கிறது
(d) மின்விளக்கு மின்னேற்றமடையும்.
கிலோவாட்மணி என்பது எதனுடைய அலகு ?
a) மின்தடைஎண்
b) மின்கடத்து திறன்
c) மின்ஆற்றல்
d) மின்திறன்
ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்
அ. அலையின் திசையில் அதிர்வுறும்.
ஆ. அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை.
இ. அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்
ஈ. அதிர்வுறுவதில்லை.
வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம்
அ. 330 மீவி-1
ஆ. 660 மீவி-1
இ. 156 மீவி-1
ஈ. 990 மீவி-1
மனிதனால் உணரக்கூடிய செவியுணர் ஒலியின் அதிர்வெண்
அ. 50 kHz
ஆ. 20 kHz
இ. 15000 kHz
ஈ. 10000 kHz
காற்றில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. அதன் வெப்பநிலை இரட்டிப்பாக்கப்பட்டு, அழுத்தம் பாதியாகக் குறைக்கப்பட்டால் ஒலியின் திசைவேகம் காண்க.
அ. 330 மீவி-1
ஆ. 165 மீவி-1
இ. 330 × √2 மீவி-1
ஈ. 320 × √2 மீவி-1
1.25 × 104 Hz அதிர்வெண்உடைய ஒலியானது 344 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன் அலை நீளம்?
அ. 27.52 மீ
ஆ. 275.2 மீ
இ. 0.02752 மீ
ஈ. 2.752 மீ
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதேஊடகத்தில் பரவும்போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்
அ. வேகம்
ஆ. அதிர்வெண்
இ. அலைநீளம்
ஈ. எதுவுமில்லை
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீவி-1 எனில் எதிரொலி கேட்கஒலி மூலத்திறகும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையேதேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?
அ. 17 மீ
ஆ. 20 மீ
இ. 25 மீ
ஈ. 50 மீ
மனிதனால்உருவாக்கப்பட்டகதிரியக்கம் _____________ எனக்கருதப்படுகிறது.
அ) தூண்டப்பட்டகதிரியக்கம்
ஆ) தன்னிச்சையான கதிரியக்கம்
இ) யற்கைக் கதிரியக்கம்
ஈ) அ மற்றும் இ
கதிரியக்கத்தின்அலகு _____________
அ) ராண்ட்ஜன்
ஆ) கியூரி
இ) பெக்கொரல்
ஈ) இவை அனைத்தும்
செயற்கைக்கதிரியக்கத்தினைக்கண்டறிந்தவர்
அ) பெக்கொரல்
ஆ) ஐரின்கியூரி
இ) ராண்ட்ஜன்
ஈ) நீல்ஸ் போர்
கீழ்க்கண்டஎந்த வினையில் சேய் உட்கருவின் நிறைஎண் மாறாமல் இருக்கும்
(i) α - சிதைவு (ii) β - சிதைவு
(iii) γ - சிதைவு (iv) நியூட்ரான்சிதைவு
அ) (i) மட்டும் சரி
ஆ) (ii) மற்றும் (iii) சரி
இ) (i) மற்றும் (iv) சரி
ஈ) (ii) மற்றும் (iv) சரி
புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் கதிரியக்க ஐசோடோப்பு _____________
அ) ரேடியோ அயோடின்
ஆ) ரேடியோ கார்பன்
இ) ரேடியோ கோபால்ட்
ஈ ) ரேடியோ நிக்கல்
காமாக்கதிர்கள்அபாயகரமானது காரணம் அவை
அ) கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும்
ஆ) திசுக்களைப் பாதிக்கும்
இ) மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும்
ஈ) அதிகமான வெப்பத்தை உருவாக்கும்
காமா கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க _____________ உறைகள் பயன்படுகின்றன.
அ) காரீய ஆக்சைடு
ஆ) இரும்பு
இ) காரீயம்
ஈ) அலுமினியம்
கீழ்கண்டஎந்த கூற்று / கூற்றுகள் சரியானவை?
(i) α துகள்கள்என்பவை ஃபோட்டான்கள்
(ii) காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன்குறைவு
(iii) α துகள்களின்அயனியாக்கும் திறன்அதிகம்
(iv) காமாக் கதிர்களின்ஊடுருவுத்திறன்அதிகம்
அ) (i) மற்றும் (ii) சரி
ஆ) (ii) மற்றும் (iii) சரி
இ) (iv) மட்டும் சரி
ஈ) (iii) மற்றும் (iv) சரி
புரோட்டான்- புரோட்டான் தொடர்வினைக்கு எடுத்துக்காட்டு
அ) அணுக்கரு பிளவு
ஆ) ஆல்பாச் சிதைவு
இ) அணுக்கரு இணைவு
ஈ) பீட்டாச் சிதைவு
அணுக்கரு சிதைவு வினையில்
6X12 α சிதைவு ZY1 எனில்A மற்றும் Z ன்மதிப்பு
அ) 8, 6
ஆ) 8, 4
இ) 4, 8
ஈ) கொடுக்கப்பட்டதரவுகளிலிருந்து காண இயலாது
காமினி அணுக்கரு உலைஅமைந்துள்ள இடம்
அ) கல்பாக்கம்
ஆ) கூடங்குளம்
இ) மும்பை
ஈ) இராஜஸ்தான்
கீழ்கண்டஎந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை?
(i) அணுக்கரு உலைமற்றும் அணுகுண்டு ஆகியவற்றில் தொடர்வினைநிகழும்
(ii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினை நிகழும்
(iii) அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தப்படாத தொடர்வினைநிகழும்
(iv) அணுகுண்டு வெடித்தலில் தொடர்வினை நிகழாது
அ) (i) மட்டும் சரி
ஆ) (i) மற்றும் (ii) சரி
இ) (iv) மட்டும் சரி
ஈ) (iii) மற்றும் (iv) சரி
