Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அகல்விளக்கு

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

அகல்விளக்கு நாவல் பெற்ற பரிசு யாது?

a)

நோபல் பரிசு

b)

சாகித்திய அகாடெமி பரிசு

c)

தமிழக அரசாங்கத்தின் பரிசு

d)

தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பரிசு

2.

பின்வருவனவற்றுள் எது டாக்டர் மு.வரதராசன் எழுதிய நாவல் அல்ல?

a)

பெற்ற மனம்

b)

வாடா மலர்

c)

அல்லி

d)

குறிஞ்சி மலர்

3.

அகல்விளக்கு நாவலின் நோக்குநிலை யாது?

a)

அகநோக்குநிலை

b)

படர்க்கை நோக்குநிலை

c)

புறநோக்குநிலை

d)

பின்நோக்குநிலை

4.

அகல்விளக்கு நாவலின் பெண் கதைப்பாத்திரங்கள் யாவர்?

a)

கண்ணம்மா

b)

கயற்கண்ணி

c)

கருணாகிரி

d)

கமலாம்பாள்

5.

அகல்விளக்கு நாவலின் காலப்பின்னணி யாது?

a)

இந்தி எதிர்ப்புப் போராட்ட காலக்கட்டம்

b)

தமிழ்க்கல்வி போராட்ட காலக்கட்டம்

c)

இந்திய சுதந்திரப் போராட்ட காலக்கட்டம்

d)

தமிழக மறுமலர்ச்சி போராட்ட காலக்கட்டம்

6.

வேலய்யன் ஏன் தன் தந்தையின் மளிகை கடையைப் பார்த்துக் கொண்டான்?

a)

தந்தை கோயம்புத்தூருக்குச் சென்றிருந்ததால்

b)

தந்தை நோய்வாய்ப்பட்டிருந்ததால்

c)

தந்தை திருமண ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்ததால்

d)

தந்தை மணிமேகலைக்கு மாப்பிள்ளை பார்க்கச் சென்றிருந்ததால்

7.

சந்திரன் எங்கே ஒளிந்து வாழ்ந்தான்?

a)

நீலகிரிமலை

b)

சென்னை

c)

சோழசிங்கப்புரம்

d)

கோயம்புத்தூர்

8.

பின்வரும் கூற்றுக்குப் பொருத்தமான உத்திமுறை யாது? 'சந்திரனின் தந்தையார் சாமண்ணா, பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்தவர்.'

a)

பின்நோக்கு உத்தி

b)

உரையாடல் உத்தி

c)

கதைகூறல் உத்தி

d)

தனிமொழி உத்தி

9.

பின்வரும் கூற்றில் இடம்பெறுபவர் யாவர்? “நான் படத்தின் அழகில் மயங்கிக் கெட்டுப் போகிற ஆள் அல்ல. அதெல்லாம் உண்மை அழகு அல்ல. மேற்பூச்சும் அலங்காரமுமே அதிகம். அவற்றை நம்புகிற பேர்வழி நான் அல்ல. நடிப்பு மட்டும் உண்மையான கலை. அதைத்தான் பாராட்ட வேண்டும்.”

a)

வேலய்யன், சந்திரன்

b)

வேலய்யன், மாலன்

c)

வேலய்யன், கயற்கண்ணி

d)

வேயய்யன், பச்சைமலை

10.

பின்வரும் கூற்று எத்தகைய சமுதாயப் பின்னணியைக் காட்டுகிறது? “வெறி பிடித்துத் தப்புச் செய்தாலும் திருந்தக் கூடாதா? படித்த பிள்ளைக்கு நல்ல புத்தகம் கிடைக்கவில்லையா? நல்லவர்களின் பழக்கம் கிடைக்கவில்லையா?”

a)

தொண்டுமனப்பான்மை கொண்ட சமுதாயம்

b)

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுதாயம்

c)

எளிய வாழ்க்கை வாழ விரும்பும் சமுதாயம்

d)

ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் சமுதாயம்

11.

அகல்விளக்கு நாவலின் மொழிநடையைத் தெரிவு செய்க.

a)

வருணனை

b)

உரையாடல்

c)

நிரட்சி

d)

தனிமொழி

12.

அகல்விளக்கு நாவலின் துணைக்கருப்பொருள் யாது?

a)

ஆண்பெண் உறவில் சுதந்திரம் தேவை

b)

கொள்கை வகுத்து வாழ்வதே சிறப்பு

c)

எளிய வாழ்க்கை முன்னேற்றத்தைச் சீரழிக்கும்

d)

உயர்வான கல்வி மட்டுமே வாழ்கையைச் செம்மைப்படுத்தும்

13.

அகல்விளக்கு நாவலின் இடப்பின்னணியைத் தெரிவு செய்க.

a)

தலைமையாசிரியரின் வீடு

b)

மாலனின் வீடு

c)

மணிமேகலையின் வீடு

d)

கல்வியதிகாரியின் வீடு

14.

சொக்கானின் சமுதாயப் பின்னணி யாது?

a)

மேல்மட்ட வர்க்கம்

b)

நடுத்தர வர்க்கம்

c)

கீழ்த்தட்டு வர்க்கம்

15.

அகல்விளக்கு நாவலின் கருப்பொருள் யாது?

a)

நல்லொழுக்கமே நிறைவான வாழ்க்கைக்கு அடித்தளம்

b)

நல்லொழுக்கமே மாந்தனின் உயர் பண்பாடாகும்

c)

நல்லொழுக்கமும் மனக்கட்டுப்பாடும் நல்வாழ்வுக்கு அடித்தளம்

d)

நல்லொழுக்கமும் அறிவும் மாந்தனின் சிறப்பு

16.

மாலன் செய்த தொழில் என்ன?

a)

உணவுக்கடை

b)

நெல் ஆலை

c)

துணி வியாபாரம்

d)

புத்தகக் கடை

17.

மாலன் ஏன் இரண்டு ஆண்டுகளாக வேலய்யனைத் தொடர்பு கொள்ளவில்லை?

a)

கற்பகத்தைப் பிரிந்து வாழ்ந்ததால்

b)

வியாபாரத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டிருந்ததால்

c)

வேலய்யனுடன் வாக்குவாதம் ஏற்பட்டதால்

d)

வேலய்யனிடம் கடன் பெற்றிருந்ததால்

18.

எந்தக் கதைப்பாத்திரத்தின் பண்புநலன் தவறானது?

a)

சாந்தலிங்கம் - பிடிவாதக்காரன்

b)

மாலன் - நேர்மையானவன்

c)

மணிமேகலை - ஆடம்பர ஆசைமிக்கவள்

d)

நகரமன்றத் தலைவர் - பிறருக்கு உதவுபவர்

19.

அகல்விளக்கு நாவலின் உச்சம் யாது?

a)

மாலனும் கற்பகமும் ஒன்று சேருதல்

b)

சந்திரனின் மனைவி தற்கொலை செய்து கொள்ளுதல்

c)

சந்திரனை வேலய்யன் தொழுநோயாளியாகக் காணுதல்

d)

சந்திரன் வேலய்யனின் வீட்டில் மரணம் அடைதல்

20.

சந்திரனுக்கு இறுதி காரியங்களைச் செய்ய வேலய்யனுக்கு உதவியது யார்?

a)

இமாவதி

b)

நகரமன்றத்தலைவர்

c)

சொக்கான்

d)

பச்சைமலை