wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

BAHASA TAMIL UPSR (PEMAHAMAN 036) SET 2

Total questions: 20

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

நாம் நேர்மையுடன் இருந்தால் எந்தக் காரியத்தையும் பயமின்றி துணிவுடன் செய்யலாம்.


மேற்காணும் கூற்றைக் குறிக்கும் புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

A. அச்சம் தவிர்

b)

B. ஆண்மை தவறேல்

c)

C. ஆறுவது சினம்

d)

D. ஏறுபோல் நட

2.

திருமணத்தின் போது மணமகள் அணிந்திருந்த தங்க நகைகள் ............................ என மின்னின.

a)

A. பளீர்பளீர்

b)

B. தகதக

c)

C. சரசர

d)

D. தடதட

3.

சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்வு செய்க.


ஒரு தந்தை தன் மூன்று மகன்களும் அடிக்கடி சண்டையிடுவதைக் கண்டு வருந்தினார். ஆளுக்கொரு குச்சியைக் கொடுத்து உடைக்குமாறு பணித்தார். அவர்கள் அதனை எளிதாக உடைத்து விட்டனர்.பின்னர் அக்குச்சிகளை ஒரே கட்டாக கட்டி உடைக்குமாறு பணித்தார்.அவர்களால் அக்கட்டை உடைக்க முடியவில்லை.

a)

இளங்கன்று பயமறியாது

b)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்

c)

ஒற்றுமையே பலம்

d)

ஆத்திரகாரனுக்குப் புத்தி மட்டு.

4.

கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஏற்ற குறளைத் தெரிவு செய்க.


ஒரு பிறப்பில் ஒருவர் கற்றுக்கொள்ளும் நல்லறிவு அவருக்குத் தொடர்ந்து வரக்கூடிய ஏழு பிறவிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.

a)

A. தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று

b)

B. புகழ்பட வாழாதார் தந்தோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்.

c)

C. கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

d)

D. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

5.

கீழ்க்காணும் செய்யுளை எழுதியவர் யார் ?


தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்

வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர்- திங்கள்

கறையிருளை நீக்கக் கருதா துலகில்

நிறையிருளை நீக்குமே னின்று

a)

A. ஔவையார்

b)

B. சிவபிரகாச சுவாமி

c)

C. குமரகுருபர சுவாமிகள்

d)

D. அதிவீர ராம பண்டியர்

6.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்ட்ட மக்களுக்குப் பல நாடுகளில் உள்ள நல்லுள்ளங்கள் _________________.

a)

A. பெயர் பொறித்தனர்

b)

B. ஈவிரக்கம்

c)

C. கை கூடினர்

d)

D. கை கொடுத்தனர்

7.

செய்யுளுக்குப் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு.


நெஞ்சசாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

a)

A. நிலையற்றது என்று தெரிந்தும் அதை நிலைநிறுத்தத முயலக்ககூடாது.

b)

B. மனசாட்சிக்கு விரோதமாகக் பொய் சொல்லக்கூடாது.

c)

C. தன்னை நம்பி வந்தவரை ஒரு போதும் கொடுக்கக்கூடாது

d)

D. பயம் இல்லாமல் தனியாகப் பயணம் செய்யக்கூடாது.

8.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

A. அல்லும் பகலும் – எந்த காலத்திலும்

b)

B. அன்றும் இன்றும் – எல்லா நேரத்திலும்

c)

C. மூலை முடுக்கு – எவ்விடத்திலும்

d)

D . தான தர்மம் – கொடுத்தலும் வாங்குதலும்

9.

தந்தைமேல் சுமத்தப்பட்ட பழியை எப்படியாவது

துடைக்க வேண்டும் என்று தமிழ்வாணன் உறுதியாக இருந்தான்.


மேற்காணும் சூழலுக்கு பொருத்தமான கொன்றை வேந்தன் யாது?

a)

A. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

b)

B. சூதும் வாதும் வேதனை செய்யும்.

c)

C. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

d)

D. ஏவா மக்கள் மூவா மருந்து.

10.

நெல்லுக்குக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்

புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் தொல்லுலகில்

.....................................................................................................

.....................................................................................................


செய்யுளில் விடுபட்ட வரிகளின் பொருள் யாது?

a)

இவ்வுலகில் வாழும் நல்லவர் ஒருவருக்காகப் பெய்யும் மழை அனைத்து உயிரினங்களுக்கும் பாகுபாடின்றி நன்மை அளிக்கிறது.

b)

செயலில் வெற்றியடைய உறுதியான எண்ணம் கொண்ட ஒருவர் வேறு எதையும் கருதார்.

c)

நல்லவர் கெட்டவர் என்று வேறுபாடு காட்டாமல்அனைவருக்கும் நடுநிலையில் நின்று அருள் புரிபவன் இறைவன்

d)

மேலான குணமுடையவர் ,தம் நலம் கருதாமல் பிறர் நலத்துக்கே பாடுபடுவர்.

11.

சரியான உயிர்மெய்க் குறில் எழுத்துகளைத் தேர்ந்தெடு .

a)

A. ப, து, வி.

b)

B. நு, ஔ, நெ.

c)

C. வ, யோ,நை

d)

D. ழு, தை,வௌ.

12.

யு.பி.எஸ்.ஆர். தேர்வில் சிறந்த தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் பிரதரிடமிருந்து காசோலை பெற்றனர்.


கருமையாக்கப்பட்ட சொல்லில் சேர்க்கப்பட்ட வேற்றுமை எந்த வகையை சார்ந்தது?

a)

A. நான்காம் வேற்றுமை

b)

B. ஐந்தாம் வேற்றுமை

c)

C. ஆறாம் வேற்றுமை

d)

D. ஏழாம் வேற்றுமை

13.

மெல்லின எழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

A. ஞானம்

b)

B. கல்வி

c)

C. வள்ளலார்

d)

D. ஜலம்

14.

தவறான பெயர்ச்சொல்லைத் தெரிவு செய்க.

a)

A. கருமை - பண்புப்பெயர்

b)

B. ஏற்றுமதி - தொழிற்பெயர்

c)

C. விரல் - சினைப்பெயர்

d)

D. விதைத்தான் – பொருட்பெயர்

15.

சிவராமன் கமலா தம்பதியினருக்கு வாணி ராணி எனும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.


மேற்காணும் வாக்கியத்தில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட இலக்கண கூறு யாது?

a)

A. பால்

b)

B. எண்

c)

C . வினைமுற்று

d)

D. வினையெச்சம்

16.

நாடகம் சிறப்பாக அமைய வேண்டுமானால் ------- ஆழமான கருத்துகள்___ சிந்தனையைத் தூண்டும் காட்சிகள் இடம்பெற வேண்டும்.


வாக்கியத்தில் இடம்பெற வேண்டிய நிறுத்தக்குறிகள் யாது?

a)

A. , / !

b)

B. , / ,

c)

C. . / ,

d)

D. . / !

17.

கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்வினை வாக்கியத்திற்குப் பொருத்தமான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.


தையல்காரர் தைத்த ஆடையை அமலா அணிந்தாள்.

a)

A. தைத்த ஆடையை அமலா தையல்காரருக்கு அணிவித்தாள்.

b)

B. தையல்காரரால் தைக்கப்பட்ட ஆடை அமலாவால் அணியப்பட்டது.

c)

C. அமலாவின் ஆடையை தையல்காரர் தைத்தார்.

d)

D. அமலா தையல்காரரின் தைத்த ஆடையை அணிந்தாள்.

18.

சேர்த்தெழுதுக.


நல்ல + தமிழ் =

a)

A. நற்றமிழ்

b)

B. நல்தமிழ்

c)

C. நல்ல தமிழ்

d)

D. நந்தமிழ்

19.

சரியான விழைவு வாக்கியத்தைத் தேர்ந்தெடு.

a)

A. ஆஹா! என்ன அழகு!

b)

B. புத்தர் அன்பைப் போதித்தார்.

c)

C. நீடுழி வாழ்க !

d)

D. அவனா இப்படி செய்தான்?

20.

அழகான குழந்தையைத் தூக்கிச சென்ற தாய் மழை பெய்ததால் வேகமாக நடந்ததாள்.


மேற்காணும் வாக்கியத்தில் பெயரடையைக் குறிக்கும் சொல் யாது?

a)

A. அழகான குழந்தையை

b)

B. தூக்கிச சென்ற

c)

C. மழை பெய்ததால்

d)

D. வேகமாக நடந்ததாள்.