wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இனிக்கும் இலக்கணம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

2.

இவற்றுள் எது தமிழ் இலக்கண வகையில் சேராது?

a)

எழுத்து

b)

சொல்

c)

புணர்ச்சி

d)

பொருள்

3.

யாரிடம் என்பது என்ன வகை?

a)

அகவினா

b)

புறவினா

c)

அகச்சுட்டு

d)

புறச்சுட்டு

4.

முதலெழுத்து என்பன யாவை?

a)

12 உயிரெழுத்து

b)

18 மெய்யெழுத்து

c)

உயிரெழுத்தும் மெய்யெழுத்தும்

d)

உயிரெழுத்து, மெய்யெழுத்து, ஆய்தவெழுத்து

5.

சார்பெழுத்து வகையில் சேராதது?

a)

மெய்யெழுத்து

b)

உயிர்மெய்யெழுத்து

c)

ஆய்தவெழுத்து

d)

குற்றியலுகரம்

6.

குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

4

c)

6

d)

8

7.

எது குற்றியலுகரச் சொல் அல்ல?

a)

அழகு

b)

அணு

c)

அம்பு

d)

செய்து

8.

எஃது உரிச்சொல் அன்று?

a)

அரு

b)

உறு

c)

சால

d)

நனி

9.

முதல் + இடம் = முதலிடம்

இஃது என்ன வகை புணர்ச்சி?

a)

இயல்பு

b)

தோன்றல்

c)

திரிதல்

d)

விகாரம்

10.

தவறானதைத் தெரிவு செய்க.

a)

அடங்கா காளை

b)

காணாக் கடவுள்

c)

சேராச் செல்வம்

d)

இரங்காத தெய்வம்

11.

சரியானதைத் தெரிவு செய்க

a)

கண்டுக்கொண்டேன்

b)

செய்துக்காட்டினான்

c)

பாட்டுப்பாடினான்

d)

மென்றுத்தின்றான்

12.

செய்யுளின் உறுப்புகள் எத்தனை?

a)

2

b)

4

c)

6

d)

8

13.

'கருமை' என்பது என்ன வகைச்சொல்?

a)

பொருட்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

சினைப்பெயர்

d)

நிறப்பெயர்

14.

எண்கழஞ்சு =

a)

எண் + கழஞ்சு

b)

எட்டு + கழஞ்சு

c)

எண்ணு + கழஞ்சு

d)

எண்ணல் + கழஞ்சு

15.

நான்கு + யானை =

a)

நால்யானை

b)

நான்யானை

c)

நான்கானை

d)

நான்குயானை

16.

மாதுளங்காய் =

a)

மாதுளம் + காய்

b)

மாதுளை + காய்

c)

மாதுளங் + காய்

d)

மாதுள் + காய்

17.

மூன்றாம் வேற்றுமை உருபுகள்...

a)

ஆல், ஒடு, ஓடு, உடன்

b)

ஆல், ஒடு, ஓடு, இல்

c)

ஆல், ஒடு, ஓடு, இன்

d)

ஆல், ஒடு, ஓடு, இருந்து

18.

'இல்' இடம்பெறும் இரண்டு வேற்றுமை உருபுகள் யாவை?

a)

மூன்று, ஐந்து

b)

மூன்று, ஆறு

c)

ஐந்து, ஆறு

d)

ஐந்து, ஏழு

19.

'புலவருடைய மைந்தன்' என்ற தொடரிலுள்ள வேற்றுமை உருபு என்ன?

a)

மூன்றாம் வேற்றுமை உருபு

b)

நான்காம் வேற்றுமை உருபு

c)

ஐந்தாம் வேற்றுமை உருபு

d)

ஆறாம் வேற்றுமை உருபு

20.

அலைகடல் என்பது என்ன வகைச்சொல்?

a)

பண்புத்தொகை

b)

வினைத்தொகை

c)

உவமைத்தொகை

d)

உம்மைத்தொகை

Similar Resources on Wayground