NEW
Font size
S
M
L
XL
WorksheetsUPSR Sains (தொகுதி 4) - உமா பதிப்பகம்
Total questions: 10
Worksheet time: 50mins
Name
Class
Date
1.
குப்பைகளை ஆற்றுக்குள் நீண்ட நாள்களாகக் கொட்டிக் கொண்டிருந்தால் என்ன ஏற்படும்?
I. இயற்கை அழகு பாதிப்படையும்.
II. தூசு மண்டலம் அதிகரிக்கும்.
III. அமில மழை பெய்யும்.
IV. நீர்த் தூய்மைக்கேடு அதிகரிக்கும்.
a)
I,II
b)
I, III
c)
I, IV
d)
II, IV
2.
அறிவியல் அறையில் கடைப்பிடிக்கக் கூடாதது எது?
a)
ஆசிரியர் அனுமதியுடன் அறிவியல் அறைக்குள் செல்லுதல்.
b)
விபத்துகள் ஏற்பட்டால் ஆசிரியரிடம் கூறாமல் மறைத்தல்.
c)
ஆசிரியர் கட்டளையின்படி பரிசோதனைகளைச் செய்தல்.
d)
அறிவியல் உபகரணங்களை முறையாக அடுக்கி வைத்தல்.
3.
ஒளிச்சேர்க்கை செய்யும்போது தாவரங்களுக்குத் தேவைப்படும் வளி எது?
a)
உயிர்வளி
b)
நைட்ரோஜன் வளி
c)
ஹைட்ரோஜன் வளி
d)
கரிவளி
4.
உணவுச் செரிமானத்தில் எந்த உறுப்புக்குத் தொடர்பு கிடையாது?
a)
சிறுகுடல்
b)
பெருங்குடல்
c)
நுரையீரல்
d)
மலவாய்
5.
மனிதர்கள் ஆரோக்கியமாக இருக்க செய்யவேண்டிய முக்கியச் செயல்கள் யாவை?
I. போதிய அளவு உறக்கம் கொள்ளுதல்.
II. உடல் தேவைக்கேற்ப நீர் அருந்துதல்.
III. நண்பர்களுடன் இணைந்து உடற்பயிற்சி செய்தல்.
IV. சமச்சீர் அற்ற உணவுகளை உட்கொள்ளுதல்.
a)
I, II,III
b)
I, II, IV
c)
I, III, IV
d)
II, III, IV
6.
பின்வரும் விலங்குகளுள், எது குரங்கைப் போலச் சுவாசிக்கக் கூடியது?
a)
நண்டு
b)
டால்பின்
c)
நத்தை
d)
கரப்பான் பூச்சி
7.
செவுளைக் கொண்டு சுவாசிக்கும் விலங்கு எது?
a)
தவளை
b)
திமிங்கிலம்
c)
தலைப்பிரட்டை
d)
வெட்டுக்கிளி
8.
இரும்புப் பொருள்கள் துரு பிடிக்க காரணிகள் யாவை?
a)
நீரும் காற்றும்
b)
நீரும் ஒளியும்
c)
வெப்பமும் நீரும்
d)
வெப்பமும் ஒளியும்
9.
கீழ்க்காணும் விலங்குகளுள் எவை கொல்லுயிர் – பலியுயிர் தொடர்பைக் கொண்டுள்ளன?
a)
சுறா – ரெமோரா
b)
எருது – மைனா
c)
நாய் – உண்ணிப் பேன்
d)
பூனை – எலி
10.
விண்மீன் குழுமத்தில் மிகச் சிறியது எது?
a)
வேடன்
b)
படகு
c)
தென் சிலுவை
d)
தேள்
Reset
