WorksheetsClass 10 TM Numbers and Sequences
Total questions: 15
Worksheet time: 8mins
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தின் படி, a மற்றும் b என்ற மிகை முழுக்களுக்கு, தனித்த மிகை முழுக்கள் q மற்றும் r, a = bq + r என்றவாறு அமையுமானால், இங்கு r ஆனது
1 < r < b
0 < r < b
0 ≤ r < b
0 < r ≤ b
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள்
0, 1, 8
1, 4, 8
0, 1, 3
1, 3, 5
65 மற்றும் 117-யின் மீ.பொ.வ-வை 65m - 117 என்ற வடிவில் எழுதும்போது m-யின் மதிப்பு
4
2
1
3
1729 -ஐ பகாக் காரணிப்படுத்தும் போது, அந்தப் பகா எண்களின் அடுக்குகளின் கூடுதல்
1
2
3
4
1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்
2025
5220
5025
2520
74k≡ ______ (மட்டு100)
1
2
3
4
F1 = 1, F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது
3
5
8
11
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4 எனில், பின்வரும் எண்களில் எது இந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் அமையும்?
4551
10091
7881
13531
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் 6வது உறுப்பின் 6 மடங்கும் 7வது உறுப்பின் 7 மடங்கும் சமம் எனில், அக்கூட்டுத் தொடர்வரிசையின் 13-வது உறுப்பு
0
6
7
13
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில், அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல்
16 m
62 m
31 m
231 m
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?
6
7
8
9
A = 265 மற்றும் B = 264+263+262+...+20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?
B ஆனது A ஐ விட 264 அதிகம்
A மற்றும் B சமம்
B ஆனது A-ஐ விட 1 அதிகம்
A ஆனது B-ஐ விட 1 அதிகம்
163, 81, 121, 181, ... என்ற தொடர்வரிசையின் அடுத்த உறுப்பு
241
271
32
811
t1, t2, t3, ... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில் t6, t12, t18, ... என்பது
ஒரு பெருக்குத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்குத் தொடர்வரிசையுமல்ல
ஒரு மாறிலித் தொடர் வரிசை
(13 + 23 + 33 + ... + 153) - (1 + 2 + 3 + ... + 15) யின் மதிப்பு
14400
14200
14280
14520
