Worksheets7 ஆம் வகுப்பு தமிழ் முதல் பருவம் இயல் இரண்டு
Total questions: 23
Worksheet time: 5mins
வாழை, கன்றை ........................
ஈன்றது
வழங்கியது
கொடுத்தது
தந்தது
'காடெல்லாம் ' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
காடு+டெல்லாம்
காடு+எல்லாம்
கா+டெல்லாம்
கான்+எல்லாம்
'கிழங்கு+எடுக்கும்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
கிழங்குஎடுக்கும்
கிழங்கெடுக்கும்
கிழங்குடுக்கும்
கிழங்கொடுக்கும்
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது
பச்சை இலை
கோலிக்குண்டு
பச்சைக்காய்
செங்காய்
'சுட்டபழங்கள்' என்று குறிப்பிடப்படுபவை
ஒட்டிய பழங்கள்
சூடான பழங்கள்
வேகவைத்த பழங்கள்
சுடப்பட்ட பழங்கள்
'பெயரறியா' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
பெயர+றியா
பெயர்+ரறியா
பெயர்+அறியா
பெயர+அறியா
'மனமில்லை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
மன+மில்லை
மனமி+இல்லை
மனம்+மில்லை
மனம்+இல்லை
நேற்று+இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
நேற்றுஇரவு
நேற்றிரவு
நேற்றுரவு
நேற்இரவு
ஆசிய யானைகளில் ஆண்-பெண் யானைகளை வேறுபடுத்துவது
காது
தந்தம்
கண்
கால்நகம்
தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்....
வேடந்தாங்கல்
கோடியக்கரை
முண்டந்துறை
கூந்தங்குளம்
'காட்டாறு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
காடு+ஆறு
காட்டு+ஆறு
காட்+ஆறு
காட்+டாறு
'அனைத்துண்ணி' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அனைத்து+துண்ணி
அணை+உண்ணி
அணைத்+துண்ணி
அனைத்து+உண்ணி
'நேரம்+ஆகி' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
நேரமாகி
நேராகி
நேரம்ஆகி
நேர்ஆகி
'வேட்டை+ஆடிய' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
வேட்டைஆடிய
வேட்டையாடிய
வேட்டாடிய
வேடாடிய
'வேட்கை' என்னும் சொல்லில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு
அரை
ஒன்று
ஒன்றரை
இரண்டு
மகரக் குறுக்கம் இடம் பெறாத சொல்..............
போன்ம்
மரும்ண்
பழம் விழுந்தது
பணம் கிடைத்தது
சொல்லின் முதலில் மட்டுமே இடம் பெறுவது
ஐகாரக்குறுக்கம்
ஒளகாரக் குறுக்கம்
மகரக் குறுக்கம்
ஆய்தக்குறுக்கம்
வாய்மை எனப்படுவது...................
அன்பாகப் பேசுதல்
தீங்குதராத சொற்களைப் பேசுதல்
தமிழில் பேசுதல்
சத்தமாகப் பேசுதல்
................செல்வம் சான்றோரால் ஆராயப்படும்
மன்னன்
பொறாமை இல்லாதவன்
பொறாமை உள்ளவன்
செல்வந்தன்
'பொருட்செல்வம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
பொரு+செல்வம்
பொருட்+செல்வம்
பொருள்+செல்வம்
பொரும்+செல்வம்
'யாதெனின்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
யா+எனின்
யாது+தெனின்
யா+தெனின்
யாது+எனின்
தன்+நெஞ்சு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
தன்நெஞ்சு
தன்னெஞ்சு
தானெஞ்சு
தனெஞ்சு
தீது+உண்டோ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
தீதுண்டோ
தீதுஉண்டோ
தீதிண்டோ
தீயுண்டோ
