NEW
Font size
Worksheetsஒலி வேறுபாடு ( P6 Unit 5, Book B)
Total questions: 20
Worksheet time: 10mins
கல்வி அமைச்சர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு _____________ நிகழ்த்தினார். அவர் ஆசிரியப்பணி அறப்பணி எனக்கூறி ஆசிரியர்களைப் பாராட்டினார்.
உறை
உரை
நெருப்பு மூட்டிச் சோளத்தை வாட்டுவதற்கு __________தேவைப்பட்டது. எனவே, அத்தை கடைக்குச் சென்று அதை வாங்கி வந்தார்.
கரி
கறி
வீட்டு __________ மீது ஏறிய பூனை கீழே இறங்க முடியாமல் தவிப்பதை அப்பா பார்த்தார். அவர் ஏணியில் ஏறி அதை இறக்கிவிட்டார்.
கூறை
கூரை
பிறர் நலன் கருதி வாழ்வதே _______ வாழ்க்கை ஆகும். ஆகவே, நாம் இல்லாதவர்களுக்கும் இயலாதவர்களுக்கும் உதவ வேண்டும்.
சீறிய
சீரிய
குமரன் பழங்களை வெட்டச் சிறிய கத்தியைப் பயன்படுத்தினான். அப்போது, கவனக்குறைவினால் கத்தியின் ___________ முனை அவனுடைய விரலில் கீறிக்காயம் ஏற்பட்டது.
கூரிய
கூறிய
விடுமுறையில் அமுதா ‘மணிமேகலை’ காப்பியத்தைப் படித்தாள். அதில் ஏழை எளியவருக்கு __________ இட்டு வாழ்ந்த பெண்ணின் கதை சித்தரிக்கப்பட்டிருந்தது.
அன்னம்
அண்ணம்
பல மணி நேரம் வெயிலில் தோட்ட வேலை செய்தவர் _______ போனார். அதனால், அவர் சற்று நேரம் மரநிழலில் அமர்ந்து ஓய்வெடுத்தார்.
களைத்து
கலைத்து
கமலா தொலைந்துபோன தன் மூக்குத்தியை வீட்டின் மூலை முடுக்குகளில் தேடினாள். திடீரென்று ஓர் எலி துள்ளிக் குதித்து ஓடியதைக் கண்ட அவள் அதிர்ச்சியில் ஒரு ___________ உறைந்து போனாள்.
கணம்
கனம்
உலகிலுள்ள சில தொன்மையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. இதனை ________________ ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் உறுதிபடுத்துகின்றன.
அகல்
அகழ்
காட்டிற்குச் சென்ற சாரணர்களில் ஒருவர் ________ தவறி எங்கோ சென்றுவிட்டார். அவரை ஆசிரியர் தேடிக்கண்டுபிடித்தார்.
வலி
வழி
கத்தியைத் தீட்டுவதற்கு ____________ தேவைப்பட்டது. அதனால், அப்பா அதை அலமாரியில் தேடி எடுத்தார்.
அரம்
அறம்
பிறர் நலன் கருதி உதவுவதே ____________ ஆகும். ஆகவே, நாம் நம்மாலான உதவிகளைப் பிறருக்குச் செய்ய வேண்டும்.
அரம்
அறம்
பள்ளி முகாமில் இரவு நேர நடவடிக்கைக்குத் தீ மூட்ட அடுப்புக் _________ தேவைப்பட்டது. அதனால், மாணவர் தலைவர் கரித்துண்டுகளை எடுத்து வைத்தார்.
கரி
கறி
மணப்பெண் _________புடவை அணிந்து மணமேடைக்கு வந்தார். அவர் பார்க்க மிகவும் அழகாக இருந்தார்.
கூரை
கூறை
நான் வளர்க்கும் பூனை அதன் _______________ நகங்களால் என்னைக் கீறிவிட்டது. அதனால், நான் அதனுடைய நகங்களை வெட்டினேன்.
கூரிய
கூறிய
சீதா நோயாளிகளை அக்கறையோடும் பரிவோடும் கவனிப்பவர். அவருடைய ___________ சேவைக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது.
சீறிய
சீரிய
வீட்டுக் _________________ மீது குரங்கு ஒன்று உட்கார்ந்திருந்தது. மாமா அதை அங்கிருந்து விரட்ட முயன்றார்.
கூறை
கூரை
பண்டிகை நாளன்று வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருந்தார்கள். அம்மாவும் பாட்டியும் கோழிக் __________சமைத்து அவர்களுக்குப் பரிமாறினார்கள்.
கரி
கறி
ஆசிரியர் ____________ ஆலோசனையின்படி நான் ஓட்டப்பந்தயத்திற்குப் பயிற்சி செய்தேன். அதனால், ஓட்டப்பந்தயத்தில் நான் வெற்றி பெற்றேன்.
கூரிய
கூறிய
விலங்குக் காட்சியில் _____________ புலியைக் கண்டு பிள்ளைகள் பயந்தார்கள். உடனே, விலங்குக்காப்பாளர் புலியை அடக்கினார்.
சீறிய
சீரிய
