WorksheetsI.சரியான விடையைத் தேர்வு செய்யவும். (பத்தாம் வகுப்பு) 80
Total questions: 63
Worksheet time: 32mins
1.முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
அ)ஜெர்மனி,ஆஸ்திரிய - ஹங்கேரி உதுமானியர்
ஆ)ஜெர்மனி,ஆஸ்திரிய-ஹங்கேரி,ரஷ்யா
இ)ஸ்பெயின்,
போர்ச்சுகல், இத்தாலி
ஈ)ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி
2.பத்தொன்பதாம் நூற்றாண்டு முடிவடையுந் தருவாயில் கிழக்கு ஆசியாவில் உதயமான வலிமை வாய்ந்த நாடு எது?
அ)சீனா
ஆ)ஜப்பான்
இ)கொரியா
ஈ)மங்கோலியா
3."ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்ச கட்டம்" எனக் கூறியவர் யார்?
அ)லெனின்
ஆ)மார்க்ஸ்
இ)சன் யாட் சென்
ஈ)மா சே துங்
4.மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகின்றது?
அ)ஆகாயப் போர்முறை
ஆ)பதுங்குக் குழிப்போர் முறை
இ)நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
ஈ)கடற்படைப் போர்முறை
5.பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச் செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
அ)பிரிட்டன்
ஆ)பிரான்ஸ்
இ)டச்சு
ஈ)அமெரிக்க ஐக்கிய நாடுகள்
6.பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
அ)ஜெர்மனி
ஆ)ரஷ்யா
இ)இத்தாலி
ஈ)பிரான்ஸ்
7.இத்தாலி யாருடன் லேட்டரன் உடன்படிக்கையைச் செய்து கொண்டது?
அ)ஜெர்மனி
ஆ)ரஷ்யா
இ)போப்
ஈ)ஸ்பெயின்
8.யாருடைய ஆக்கிரமிப்போடு மெக்சிகோ நாகரிகம் நிலை குலைந்து போயிற்று?
அ)ஹெர்மன் கோர்ட்ஸ்
ஆ)பிரான்சிஸ்கோ பிசாரோ
இதெளசெயின்ட் லாவெர்ட்யூர்
ஈ)முதலாம் பெட்ரோ
9.பெரு நாட்டை யார் தங்களுடைய பகுதிகளில் ஒன்றாக ஆக்கிக்கொண்டனர்?
அ)ஆங்கிலேயர்
ஆ)ஸ்பானியர்
இ)ரஷ்யர்
ஈ)பிரெஞ்சுக்காரர்
10.லத்தீன் அமெரிக்காவுடன் "நல்ல அண்டை வீட்டுக்காரன்" எனும் கொள்கையைக் கடைப்பிடித்த அமெரிக்கக் குடியரசுத் தலைவர் யார்?
அ)ரூஸ்வெல்ட்
ஆ)ட்ரூமன்
இ)உட்ரோவில்சன்
ஈ)ஐசனோவர்
11.உலகத்தின் எந்தப்பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
அ)ஐரோப்பா
ஆ)லத்தீன் அமெரிக்கா
இ)இந்தியா
ஈ)சீனா
12.ஜப்பான் சரணடைவதாக எப்போது முறைப்படி கையெழுத்திட்டது?
அ)செப்டம்பர் 2, 1945
ஆ)அக்டோபர் 2, 1945
இ)ஆகஸ்ட் 15, 1945
ஈ)அக்டோபர் 12, 1945
13.பன்னாட்டுச் சங்கம் உருவாக்கப்படுவதில் முன்முயற்சி எடுத்தவர் யார்?
அ)ரூஸ்வெல்ட்
ஆ)சேம்பெர்லின்
இ)உட்ரோ வில்சன்
ஈ)பால்டுவின்
14.ஜப்பானியக் கப்பற்படை அமெரிக்க கப்பற்படையால் எங்கே தோற்கடிக்கப்பட்டது?
அ)க்வாடல்கெனால் போர்
ஆ)மிட்வே போர்
இ)லெனின்கிரேடு போர்
ஈ)எல்அலா மெய்ன்போர்
15.அமெரிக்கா தனது முதல் அணுகுண்டை எங்கே வீசியது?
அ)கவாசாகி
ஆ) இன்னோசிமா
இ)ஹிரோஷிமா
ஈ)நாகசாகி
16.ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?
அ)ரஷ்யர்கள்
ஆ)அரேபியர்கள்
இ)துருக்கியர்கள்
ஈ)யூதர்கள்
17.ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கையில் கையெழுத்திட்ட பிரிட்டன் பிரதமர் யார்?
அ)சேம்பர்லின்
ஆ)வின்ஸ்டன் சர்ச்சில்
இ)லாயிட் ஜார்ஜ்
ஈ)ஸ்டேன்லி பால்ட்வின்
18.எப்போது ஐக்கிய நாடுகள் சபையின் பட்டய சாசனம் கையெழுத்தானது?
அ)ஜூன் 26, 1942
ஆ)ஜூன் 26, 1945
இ)ஜனவரி 1, 1942
ஈ)ஜனவரி 1, 1945
19.எந்த அமெரிக்கக் குடியரசுத்தலைவர் பொதுவுடைமைக் கொள்கையைக் கட்டுக்குள் அடக்க ஒரு கொள்கை வரைவை முன்வைத்தார் ?
அ)உட்ரோ வில்சன்
ஆ)ட்ரூமென்
இ)தியோடர் ரூஸ்வெல்ட்
ஈ)பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
20.சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?
அ)செப்டம்பர் 1959
ஆ)செப்டம்பர் 1949
இ)செப்டம்பர் 1954
ஈ)செப்டம்பர் 1944
21.அமெரிக்க ஐக்கிய நாடும் அதன் ஐரோப்பிய நேச நாடுகளும் சேர்ந்து சோவியத் நாட்டின் ஆக்கிரமிப்பைத் தவிர்க்க ஏற்படுத்திய அமைப்பின் பெயர் ---------ஆகும்?
அ)சீட்டோ
ஆ)நேட்டோ
இ)சென்டோ
ஈ)வார்சா ஒப்பந்தம்
22.பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் செயற்குழுவிற்கு 1969 இல் தலைவராகப் பதவி ஏற்றவர் யார்?
அ)ஹபிஸ் அல் ஆஸாத்
ஆ)யாசர் அராபத்
இ)நாசர்
ஈ)சதாம் உசேன்
23.வடக்கு மற்றும் தெற்கு வியட்நாம் எந்த ஆண்டு ஒன்று சேர்க்கப்பட்டது?
அ)1975
ஆ)1976
இ)1973
ஈ)1974
24.எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
அ)1979
ஆ)1989
இ)1990
ஈ)1991
25.எந்த ஆண்டில் உடன்கட்டை ஏறுதல் (சதி)ஒழிக்கப்பட்டது?
அ)1827
ஆ)1829
இ)1826
ஈ)1927
26.தயானந்த சரஸ்வதியால் நிறுவப்பெற்ற சமாஜத்தின் பெயர் யாது?
அ)ஆரிய சமாஜம்
ஆ)பிரம்ம சமாஜம்
இ)பிரார்த்தனை சமாஜம்
ஈ)ஆதி பிரம்ம சமாஜம்
27.யாருடைய பணியும் இயக்கமும் 1856 ஆம் ஆண்டு விதவைமறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது ?
அ)ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ஆ)இராஜாராம் மோகன்ராய்
இ)அன்னிபெசன்ட்
ஈ)ஜோதிபா பூலே
28."ராஸ்ட் கோப்தார் "யாருடைய முழக்கம்?
அ)பார்சி இயக்கம்
ஆ)அலிகார் இயக்கம்
இ)இராமகிருஷ்ணர்
ஈ)திராவிட மகாஜன சபை
29.நாம்தாரி இயக்கத்தை உருவாக்கியவர் யார்?
அ)பாபா தயாள் தாஸ்
ஆ)பாபா ராம்சிங்
இ)குருநானக்
ஈ)ஜோதிபா பூலே
30.விதவை மறுமணச் சங்கத்தை ஏற்படுத்தியவர் யார்?
அ)M.G.ரானடே
ஆ)தேவேந்திரநாத் தாகூர்
இ)ஜோதிபா பூலே
ஈ)அய்யன்காளி
31."சத்யார்த்தபிரகாஷ்"எனும் நூலின் ஆசிரியர் யார்?
அ)தயானந்த சரஸ்வதி
ஆ)அயோத்தி தாசர்
இ)அன்னிபெசன்ட்
ஈ)சுவாமி சாரதாநந்தா
32.கிழக்கிந்திய கம்பெனியின் நாடுபிடிக்கும் ஆசையை எதிர்த்து நின்ற முதல் பாளையக்காரர் யார்?
அ)மருது சகோதரர்கள்
ஆ)பூலித்தேவர்
இ)வேலுநாச்சியார்
ஈ)வீரபாண்டிய கட்டபொம்மன்
33.சந்தா சாகிப்பின் மூன்று முகவர்களோடும் நெருங்கிய நட்பினை ஏற்படுத்திக் கொண்டவர் யார்?
அ)வேலுநாச்சியார்
ஆ)கட்டபொம்மன்
இ)பூலித்தேவர்
ஈ)ஊமைத்துரை
34.சிவசுப்ரமணியனார் எங்கு தூக்கிலிடப்பட்டார்?
அ)கயத்தாறு
ஆ)நாகலாபுரம்
இ)விருப்பாட்சி
ஈ)பாஞ்சாலங்குறிச்சி
35.திருச்சிராப்பள்ளி சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டவர் யார்?
அ)மருது சகோதரர்கள்
ஆ)பூலித்தேவர்
இ)வீரபாண்டிய கட்டபொம்மன்
ஈ)கோபால நாயக்கர்
36.வேலூர் புரட்சி எப்போது வெடித்தது?
அ)1805 மே 24
ஆ)1805 ஜூலை 10
இ)1806 ஜூலை 10
ஈ)1806 செப்டம்பர் 10
37.வேலூர் கோட்டையில் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகப்படுத்தக் காரணமாயிருந்த தலைமை தளபதி யார்?
அ)கர்னல் பேன்கோர்ட்
ஆ)மேஜர் ஆர்ம்ஸ்ட்ராங்
இ)சர் ஜான் கிரடாக்
ஈ)கர்னல் அக்னியூ
38.வேலூர் புரட்சிக்குப் பின் திப்புசுல்தானின் மகன்கள் எங்கு அனுப்பப்பட்டார்கள்?
அ)கல்கத்தா
ஆ)மும்பை
இ)டெல்லி
ஈ)மைசூர்
39. 1818 ஆம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஹாஜி ஷரியத்துல்லா கீழ்க்கண்டவற்றில் எதனைத் தொடங்கினார்?
அ)வஹாபி கிளர்ச்சி
ஆ) ஃ பராசி இயக்கம்
இ)பழங்குடியினர் எழுச்சி
ஈ)கோல் கிளர்ச்சி
40."நிலம் கடவுளுக்குச் சொந்தம்" என்று அறிவித்ததுடன் நிலத்தின் மீது வரிவிதிப்பதோ வாடகை வசூலிப்பதோ இறைச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறியவர் யார்?
அ)டிடு மீர்
ஆ)சித்து
இ)டுடு மியான்
ஈ)ஷரியத்துல்லா
41.நிரந்தரக் குடியிருப்பின் கீழ் ஜமீன்களை உருவாக்கும் திட்டத்தின்படி தங்கள் சொந்த நிலத்தை விட்டு விரட்டப்பட்டவர்கள் யார்?
அ)சாந்தலர்கள்
ஆ)டிடு மீர்
இ)முண்டா
ஈ)கோல்
42.கீழ்க்காண்போரில் தீவிர தேசியவாதி யார்?
அ)தாதாபாய் நௌரோஜி
ஆ)நீதிபதி கோவிந்த் ரானடே
இ)பிபின் சந்திர பால்
ஈ) ரொமேஷ் சந்திரா
43.வங்கப்பிரிவினை எந்த நாளில் நடைமுறைக்கு வந்தது?
அ)1905 ஜூன் 19
ஆ)1906 ஜூலை 18
இ)1907 ஆகஸ்ட் 19
ஈ)1905 அக்டோபர் 16
44.சோட்டா நாக்பூர் குத்தகைச் சட்டம் எந்தப் பின்னணியில் நிறைவேற்றப்பட்டது?
அ)கோல் கிளர்ச்சி
ஆ)இண்டிகோ கிளர்ச்சி
இ)முண்டா கிளர்ச்சி
ஈ)தக்காண கலவரங்கள்
45. 1916 ஆம் ஆண்டு ஏப்ரலில் தன்னாட்சி இயக்கத்தை முதலில் தொடங்கியவர் யார்?
அ)அன்னிபெசன்ட் அம்மையார்
ஆ)பிபின் சந்திர பால்
இ)லாலா லஜபதி ராய்
ஈ)திலகர்
46.நீல் தர்ப்பன் நாடகம் மூலமாக இண்டிகோ பயிரிடும் விவசாயிகளின் இன்னல்கள் குறித்து ஆங்கிலேயரின் கவனத்துக்கு கொண்டு சென்றவர் யார்?
அ)தீனபந்து மித்ரா
ஆ)ரொமேஷ் சந்திர தத்
இ)தாதாபாய் நௌரோஜி
ஈ)பிர்சா முண்டா
47.அமிர்தசரஸில் ரௌலட் சட்ட எதிர்ப்பு போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர் யார்?
அ)மோதிலால் நேரு
ஆ)சை ஃபுதீன் கிச்லு
இ)முகமது அலி
ஈ)ராஜ்குமார் சுக்லா
48.இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது?
அ)பம்பாய்
ஆ)மதராஸ்
இ)லக்னோ
ஈ)நாக்பூர்
49.விடுதலை நாளாக கீழ்க்கண்டவற்றில் எந்த நாள் அறிவிக்கப்பட்டது?
அ)1930 ஜனவரி 26
ஆ) 1929 டிசம்பர் 26
இ)1946 ஜூன் 16
ஈ) 1947 ஜனவரி 15
50.முதலாவது வனங்கள் சட்டம் எந்த ஆண்டில் இயற்றப்பட்டது?
அ)1858
ஆ)1911
இ)1865
ஈ)1936
51.1933 ஜனவரி 8 எந்த நாளாக அனுசரிக்கப்பட்டது?
அ)கோவில் நுழைவு நாள்
ஆ)மீட்பு நாள் (டெலிவரன்ஸ் டே )
இ)நேரடி நடவடிக்கை நாள்
ஈ)சுதந்திரப் பெருநாள்
52.மாகாண தன்னாட்சியை அறிமுகம் செய்த சட்டம் எது?
அ)1858 ஆம் ஆண்டு சட்டம்
ஆ)இந்திய கவுன்சில் சட்டம் 1909
இ)இந்திய அரசுச் சட்டம் 1919
ஈ)இந்திய அரசுச் சட்டம் 1935
53.சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் யார்?
அ) T.M நாயர்
ஆ) P.ரங்கையா
இ) G. சுப்பிரமணியம்
ஈ) G.A நடேசன்
54.இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு / அமர்வு எங்கே நடைபெற்றது?
அ)மெரினா
ஆ)மைலாப்பூர்
இ)புனித ஜார்ஜ் கோட்டை
ஈ)ஆயிரம் விளக்கு
55."அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது" எனக் கூறியவர் யார்?
அ)அன்னிபெசன்ட்
ஆ) M.வீரராகவாச்சாரி
இ) B.P வாடியா
ஈ) G.S.அருண்டேல்
56.கீழ்க்காண்பவர்களுள் சுயராஜ்ஜியவாதி யார்?
அ)S.சத்தியமூர்த்தி
ஆ)கஸ்தூரிரங்கர்
இ) P.சுப்பராயன்
ஈ)பெரியார் ஈ.வெ.ரா
57.சென்னைக்கருகேயுள்ள உதயவனத்தில் சத்யாகிரக முகாமை அமைத்தவர் யார்?
அ)K.காமராஜ்
ஆ)C.இராஜாஜி
இ)C.சந்தானம்
T.பிரகாசம்
58.இந்தி எதிர்ப்பு மாநாடு எங்கே நடத்தப்பெற்றது ?
அ)ஈரோடு
ஆ)சென்னை
இ)சேலம்
ஈ)மதுரை
59. 1709 இல் தரங்கம்பாடியில் ஒரு முழுமையான அச்சகத்தை நிறுவினார்?
அ)கால்டுவெல்
ஆ) F.W .எல்லிஸ்
இ)சீகன்பால்கு
ஈ) மீனாட்சி சுந்தரனார்
60. 1893 இல் ஆதி திராவிட மகாஜன சபையை ______ நிறுவினார்?
அ) இரட்டைமலை சீனிவாசன்
ஆ) B.R.அம்பேத்கார்
இ) ராஜாஜி
ஈ) எம் . சி . ராஜா
61.இந்தியாவின் நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் _____ இல் உருவாக்கப்பட்டது?
அ) 1918
ஆ 1917
இ) 1916
ஈ) 1914
62. அரசு அதிகாரிகளைத் தேர்வுசெய்ய ______ நீதிக் கட்சியால் நிறுவப்பெற்றது?
அ)பணியாளர் தேர்வு வாரியம்
ஆ)பொதுப் பணி ஆணையம்
இ)மாநிலப் பணியாளர் ஆளெடுப்பு வாரியம்
ஈ)பணியாளர் தேர்வாணையம்
63.சென்னை மாகாணத்தில், ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து முதன் முறையாகச் சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
அ)எம் . சி . ராஜா
ஆ)இரட்டை மலை சீனிவாசன்
இ)டி. எம். நாயர்
ஈ)பி. வரதராஜூலு
