NEW
Font size
Worksheetsஅகல் விளக்கு (அத்தியாயம் 5-15 வரை)
Total questions: 20
Worksheet time: 10mins
வேலு நண்பனின் ஊருக்குப் போகிறான்.அங்குள்ள இயற்கை அழகை கண்டு ரசிக்கிறான். ஊரின் பெயர் என்ன?
வாலாசாப்பேட்டை
பெருங்காஞ்சி
ஈரோடு
சென்னை
வேலு சந்திரனின் தங்கையைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறான். அவள் யார்?
இமாவதி
மணிமேகலை
கயற்கண்ணி
கற்பகம்
வேலுவும் சந்திரனும் இவ்வாறு ஊரில் பொழுதைக் கழித்தனர்.
இரவில் நிலாவை ரசிப்பது
கிணற்றில் குளிப்பது, ,தாழை ஓடையில் விளையாடுவது
இரவில் நிலாவை ரசிப்பது, பலவகை உணவை ரசித்து உண்பது.
கிணற்றில் குளிப்பது, ,தாழை ஓடையில் விளையாடுவது,இரவில் நிலவை ரசிப்பது
தேர்வில் வெற்றிப்பெற்று தொடர்ந்து படிப்பதற்கு அறிவுரைக் கேட்க வேலுவும் சந்திரனும் யாரை அணுகினர் ?
சாமண்ணாவை
பள்ளி தலைமை ஆசிரியரை
பாக்கியம் அம்மையாரை
பாக்கியம் அம்மையாரின் தம்பியை
எந்தப்பாடத்தைச் சிறப்புப் பாடமாக தேர்ந்தெடுத்தனர்?
கணிதம்
தமிழ் மொழி
ஆங்கிலம்
அறிவியல்
சந்திரனும் வேலுவும் வானில் முழு நிலவைப் பார்த்து இரசிக்கின்றனர். நிலவில் உள்ள களங்கம் போல் சந்திரனின் உள்ளத்திலும் சிறு களங்கம் இருப்பதை வேலு எண்ணிப்பார்க்கிறான். அக்களங்கம் எவை?
இமாவதியின் காதல் , பாக்கியம் அம்மையாரிடம் கொண்ட சந்தேகம்
சிறைக்கைதியின் மனைவியோடு வாழ்தல், வள்ளியை கொடுமை படுத்துதல்
வெந்நீரைக் கீழே ஊற்றி ஏமாற்றச் சொல்லுதல்/ பெண்களுக்குக் காசு கொடுத்து பாடச் சொல்லுதல்
இமாவதியின் காதல்,வள்ளியை கொடுமை படுத்துதல்
சந்திரன் தனிமை வேண்டி எங்குச் சென்று படிக்கிறான்?
வேலுவின் வீட்டிலும் பாக்கியம் அம்மையாரின் வீட்டிலும்
பள்ளியிலும் அரசமரத்தடியிலும்
இமாவதி வீட்டிலும் அரசமரத்தடியிலும்
வேலுவின் வீட்டிலும் ,அரசமரத்தடியிலும்
கற்பகம் தொடர்ந்து படிக்க அழுது அடம் பிடிக்கிறாள்.அப்பாவின் சம்மதமும் பெறுகிறாள். ஏன் ?
வேலுவின் மீது அவள் கொண்ட ஈர்ப்பு
எதிர்கால லட்சியத்தை அடைய
அண்ணனைப் போல படிக்க
பெண் கல்வி அவசியம் என்பதால்
இவர்களுள் யார் வேலுவின் அத்தை மகள்?
கற்பகம்
இமாவதி
கயற்கண்ணி
மணிமேகலை
அரையாண்டு தேர்வுக்குப் பிறகு வேலு எல்லா பாடங்களிலும் 50 புள்ளிக்கு மேல் வாங்கவில்லை. ஏன் ?
அவனின் சோம்பல் குணம்
அவனுக்குச் சந்திரன் சொல்லிக் கொடுக்கவில்லை
அவனுக்குச் சிரங்கு நோயும் நிமோனியாக் காய்ச்சலும் வந்தது
அவன் ஊர்த்திருவிழாவில் கலந்து கொண்டதால்
வைகாசி மாத இறுதியில் தேர்வு முடிவுகள் வெளிவருகின்றன.சந்திரனின் தந்தை மேற்படிப்பிற்காக கல்லூரிக்கு அனுப்புகிறார். அக்கல்லூரி எங்கிருக்கிறது?
ஈரோடு
வாலாசாப்பேட்டை
சென்னை
பெருங்காஞ்சி
விடுமுறையில் சந்திரனைக் காண ஊருக்குப்போகிறான். சந்திரன் அங்கில்லை. கற்பகம் இருக்கிறாள் மகிழ்கிறான். கிளம்பும் வழியில் குடிசை ஒன்றில் ஒரு கிழவனும் கிழவியும் சந்திரனைப் பற்றிப் பேசுகின்றனர். அப்பேச்சு வேலுவிற்கு வருத்தமளிக்கிறது. அப்பேச்சின்சாரம் என்ன?
சந்திரனின் குலப்பெருமை
சந்திரனின் கல்வி
சந்திரனின் தவறானப் போக்கு
சந்திரனின் கர்வம்
வழியில் வேலு விஷம் நிறைந்த அரளிச் செடியையும் முள் நிறைந்த தாழை இலைகளையும் மணம் மிகுந்த துளசிச் செடியையும் கண்டு சந்திரனோடு ஒப்பிடுகிறான். இதில் எது சந்திரனுக்குப் பொருந்தும்.
அரளிச் செடி
முள் நிறைந்த தாழை இலைகள்
துளசி
அரளிச் செடியும், முள் நிறைந்த தாழை இலைகளும்
வேலு ஏன் தந்தையின் மளிகைக்கடையைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்கிறான் ?
அப்பாவின் கட்டளை
மகனின் பொறுப்பு
அப்பாவுக்கு முதுகில் கட்டி
அம்மா வற்புறுத்தியதால்
கல்லூரியில் வேலுவுக்கும் சந்திரனுக்கும் நட்பில் விரிசல் ஏற்படுகிறது? கீழ்க்காண்பனவற்றுள் எது சரி?
இமாவதி சந்திரன் காதலுக்கு வேலு தடையாக இருந்ததால்
சந்திரனுக்கு வேலுவின் அறிவுரை எரிச்சலை ஏற்படுத்தியதால்
புற நடவடிக்கையில் ஈடுபாடும் படிப்பில் சந்திரன் கவனமின்றியும் இருந்ததால்
புகைப்பிடிக்கும் நண்பர்களுடனும் நாடகம் கச்சேரி என சந்திரன் இருந்ததால்
+ரிஷியின் பெயரை வாழ்த்தி எழுதுதல்
+அதனைப் பலருக்கு அனுப்புனால் புண்ணியம்
+பாடப்பத்தகம் படிக்காமல் குறிப்புப் புத்தகம் மட்டும் படித்தால் போதும்
+இஷ்ட சித்திகுளிகை கையில் அணிந்தால் காரியம் கைக்கூடும். இதைக் கூறுபவர் யார்?
வேலு
சந்திரன்
சாந்தலிங்கம்
மாலன்
சாந்தலிங்கத்துக்கும் சந்திரனுக்கும் ஏன் வாய்ச்சண்டை எற்படுகிறது?
மலக்கூடத்தைக் கழுவாததால்
வெளியே மலம் கழித்ததால்
சிறு நீர் கழித்து விட்டு நீர்ப்பாய்ச்சாததால்
கண்ட இடங்களின் சந்திரன் எச்சில் உமிழ்ந்ததால்
வேலு ஏன் சந்திரனுக்கு ஆறுதல் கூறுகிறான் ?
கல்லூரித் தேர்வில் சிறந்த முறையில் வெற்றிப்பெறாததால்
ஆங்கிலம் கணக்கில் குறைந்த புள்ளிகள் பெற்றதால்
இமாவதி இன்னொருவனை மணந்து கொள்வதால்
திருமணப்பத்திரிக்கையைப் பார்த்ததும் ஒருதலையாக காதலித்து ஏமார்ந்த சந்திரன் அழுததால்
அத்தியாயம் 13 இல் சந்திரன் கல்லூரியை விட்டு காணாமல் போகிறான். எங்கே போனான்?
நீலகிரி தேயிலைத் தோட்டத்திற்கு
ஈரோட்டிற்கு
வாலாசா பேட்டைக்கு
பெருங்காஞ்சிக்கு
இமாவதியுடனான நட்பில் சந்திரன் செய்த தவறென்ன?
சந்திரன் தன் காதலை முதலில் தெரிவிக்காதது.
சந்திரன் காதலுக்கும் சகோதரத்துவ அன்புக்கும் உள்ள வித்தியாசத்தை அறியாதது
பத்திரிக்கையைப் பெற்றபொழுது சொல்லாதது
இமாவதி அம்மாவிடம் பேசாதது
