WorksheetsP5 ஒலி வேறுபாடு
Total questions: 7
Worksheet time: 7mins
Name
Class
Date
1.
சாலை ஓரமாக சென்ற மாட்டை , லாரி மோதியது. காயம் அடைந்த மாடு ___________ தாங்க முடியாமல் துடித்தது.
a)
வலி
b)
வழி
2.
அன்று எனக்குப் பிறந்த நாள். அதனால், அம்மா எனக்குப் பிடித்தக் _________ குழம்பைச் சமைத்தார்.
a)
கோலி
b)
கோழி
3.
கலைநிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும்_________ மணி நேரம்தான் இருக்கிறது. அதனால், நாங்கள் விரைவாக நிகழ்ச்சிக்குத் தயாரானோம்.
a)
அரை
b)
அறை
4.
அப்பா நாய்க்குட்டிக்கு உணவு வாங்கி வந்தார். அதைப் பார்த்ததும் நாய்க்குட்டி_____________ கொண்டு வாலை ஆட்டியது.
a)
குரைத்து
b)
குறைத்து
5.
தேவி மல்லிகை பூ சூடினாள். மல்லிகைப் பூவின் _________ வீடெங்கும் பரவியது.
a)
மனம்
b)
மணம்
6.
மாலதி தன் தோழிக்கு ஒரு கடிதம் எழுதினாள். பின் அதை ஓர் __________போட்டாள்.
a)
உறையில்
b)
உரையில்
7.
நேற்று தொடர்ந்து மழை பெய்ததால், பல இடங்களில் பெரு __________ஏற்பட்டது.
a)
வெள்ளம்
b)
வெல்லம்
100 %
