wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பிரச்சனைக் கணக்குகள் (பணம்) ஆ 4

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

கமலி 9 நாள்களில் RM 54.90 சேமித்தாள். அவள் ஒரு நாளில் சேமித்தப் பணம் எவ்வளவு?

a)

RM 54

b)

RM 6.90

c)

RM 6.10

2.

மதுமிதா ஜூலை மாதம் RM 340 பணத்தையும் ஆகஸ்ட் மாதம் RM549.50 பணத்தையும் சேமித்தாள். அந்த இரு மாதங்களில் அவள் சேமித்தப் பணம் எவ்வளவு?

a)

RM 809.40

b)

RM 789.60

c)

RM 889.50

3.

திருமதி கண்மணி 8 புட்டி திராட்சை சுவைபானம் வாங்கினார். ஒவ்வொரு புட்டியின் விலை RM 16.90 ஆகும். திருமதி கண்மணி கடைக்காரரிடம் செலுத்த வேண்டிய தொகை எவ்வளவு?

a)

RM 412.30

b)

RM 135.20

c)

RM 125.20

4.

சாந்தி RM 547.50 -ஐ தன் தாத்தாவிடமிருந்து பெற்றாள். அவள் அந்தப் பணத்தை 4 சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்டாள். சாந்திக்கு எவ்வளவு பணம் கிடைத்தது?

a)

RM 136.75

b)

RM 136.85

c)

RM 109.50

5.

பழனி RM 89.90 மதிப்பு கொண்ட ஒரு பை, RM 108.50 மதிப்புமிக்க காலணி மற்றும் காற்சட்டை போன்ற பொருள்களை வாங்கினான். மூன்று பொருள்களின் மொத்த விலை RM 234.30 ஆகும். பழனி வாங்கிய ஒரு காற்சட்டையின் விலையைக் கணக்கிடுக.

a)

RM 35.90

b)

RM 42.50

c)

RM 55.30

6.

நியூரோன் கடை வியாபாரி 24 மறைகாணிகளை RM 31 200க்கு வாங்கினார். இலக்ரொன் கடை வியாபாரி அதே போன்ற 30 மறைகாணிகளை வாங்கினார். இலக்ரொன் கடை வியாபாரி எவ்வளவு பணம் செலுத்தி அந்த மறைகாணிகளை வாங்கியிருப்பார்?

a)

RM 38 500

b)

RM 39 000

c)

RM 39 500

d)

RM 39 550

7.

திருமதி இலட்சுமி பொருளகக் கணக்கில் RMI3 467.70 இருந்தது. திரு. சேதுவின் பொருளகக் கணக்கில் திருமதி இலட்சுமியைவிட RM3 847.50 அதிகம் இருந்தது. இருவரின் பொருளகக் கணக்கிலும் மொத்தம் எவ்வளவு பணம் இருந்தது?

a)

RM 30 782.90

b)

RM 30 788.90

c)

RM 30 789.90

d)

RM 30 800

8.

ஒரு மிதிவண்டியின் விலை RM387.50 ஆகும். ஜடா

நிறுவனம் 40 மிதிவண்டிகளை வாங்கியது. அந்த நிறுவனம் மிதிவண்டிகளுக்கான கட்டணத்தை இரண்டு தவணைகளில் செலுத்தியது. அந்த நிறுவனம் ஒரு தவணையில் எவ்வளவு பணத்தைச் செலுத்தியது?

a)

RM 7 700

b)

RM 7 710

c)

RM 7 720

d)

RM 7 750

9.

அண்மையில் தலைநகரில் நடைபெற்ற சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு மாநாட்டில் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்து கொண்டனர். அவர்களின் சொந்த நாட்டின் நாணயங்களின் சரியான பட்டியலைத் தேர்ந்தெடுக. 

a)

ஆஸ்திரேலியா டாலர், வோன், ரூபாய், பவுன் ஸ்டெர்லிங், அமேரிக்க டாலர்

b)

ஆஸ்திரேலியா டாலர், யென், ரூபாய், பவுன் ஸ்டெர்லிங், அமேரிக்க டாலர்

c)

ஆஸ்திரேலியா டாலர், யென், ரூபாய், பவுன் ஸ்டெர்லிங், யூ

10.

திரு. முனியாண்டியின் பொருளகக் கணக்கில் RM42012.30 இருந்தது. அவர் அந்தப் பணத்திலிருந்து RM7 400ஐ எடுத்து, மீன்தொட்டி ஒன்றை வாங்கினார். பின் மேலும், RM5 000ஐ தம் மனைவியின் பொருளகக் கணக்கிற்கு மாற்றம் செய்தார். அவர் வங்கியில் இருக்கும் மீதப் பணத்தைக் கணக்கிடுக.

a)

RM 29 600.30

b)

RM 29 602.30

c)

RM 29 612.30

d)

RM 29 613.30