NEW
Font size
Worksheetsநிறுத்தற்குறிகள்
Total questions: 20
Worksheet time: 10mins
வினாக்குறி பொருந்திவராத வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அன்பு மிக்க தோழியே வருக
அண்ணா நீங்கள் நன்றாக கதை கூறுவீர்களாமே
உனக்கா அக்காள் பாடங்களைச் சொல்லித் தருகிறார்
மு.வரதராசனார் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளாரா
சரியான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.
தம்பி O இங்கே வா
⋅
,
;
?
கீழ்காண்பனவற்றிற்குப் பொருத்தமான நிறுத்தக்குறிகளைத் தெரிவு செய்க.
கலைவாணி தமிழ் மொழி வாரத்தில் நடைபெற்றப் பேச்சுப் போட்டியில் பங்கெடுத்துக் கொண்டாள் O தன் திறமைகளை வெளிப்படுத்த விடாமுயற்சியுடன் பயிற்சிகளைச் செய்தாள் O பேச்சுப் போட்டியில் முதல் நிலையில் வாகை சூடினாள் O
⋅ ; ⋅
. , ⋅
. ! ⋅
; ; ⋅
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் உணர்ச்சி வாக்கியத்தைத் தெரிவு செய்க.
i ஆஹா! எத்துணைப் பெரிய மாளிகை.
ii மாலா, நேற்று ஏன் நீ வீட்டுப்பாடத்தை முடிக்கவில்லை.
iii ஐயோ! பாவம் அந்தப் பூனை.
iv மாணவர்களே, நீங்கள் அனைவரும் வரிசையில் நில்லுங்கள்.
i, ii
i, iii
iii, iv
ii, iv
கீழ்காண்பனவற்றுள் தவறான நிறுத்தற்குறிகளைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க
ஆஹா! எத்துணை சிறப்புமிக்க கோயில் இது.
குமரனா யூ.பி.எஸ்.ஆர் தேர்வில் 8 'ஏ' க்கள் பெற்றான்!
மாலதி தினமும் காலையில் நடைப்பயிற்சி செய்வாள்.
வனிதா ஆரஞ்சி, திராட்சி, வாழை போன்றவற்றை விரும்பி சாப்பிடுவாள்.
பின்வருவனவற்றுள் நிறுத்தற்குறிகளைச் சரியாகப் பயன்படுத்திய வாக்கியத்தைத் தெரிவு செய்க.
" அந்த மகிழுந்தில் வருவதுதான் உன் தந்தையா?" என அருண் கேட்டான்.
முகுந்தன் மீன் பிடிப்பதற்காகத் தூண்டிலைக் கொண்டு சென்றான்?
காவியா ஓவியப் போட்டிக்காக நீர் வண்ணம்; தூரிகை; போன்றவற்றைக் கொண்டு சென்றாள்; வரைத்தாள்.
தேவன் தீபாவளியன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தான்: புத்தாடை அணிந்தான்: கோவிலுக்குச் சென்றான்.
பின்வரும் வாக்கியத்திற்கு ஏற்ற நிறுத்தக்குறியினைத் தெரிவு செய்க.
அவனா என்னை அழைத்தான் O
!
,
?
:
சரியான நிறுத்தற்குறியைத் தெரிவு செய்க.
"நாளை கல்வி அமைச்சர் நம் பள்ளிக்கு வருகை தரவுள்ளார், O எனத் தலைமையாசிரியர் சபைக்கூடலில் கூறினார் O
" .
; .
, ?
" !
கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் நிறுத்தற்குறிகள் பிழையாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அம்மா கடைக்குச் சென்று சீனி; உப்பு; மாவு ஆகிய பொருள்கள் வாங்கினார்.
"மாணவர்களே, பாடப்புத்தகத்தை உடனடியாக அனுப்புங்கள்" என ஆசிரியர் கூறினார்.
தமிழ் மொழி தொன்மை வாய்ந்தது; இனிமையானது; இலக்கணச் சுவையுடையது. ஆகவே தமிழ் மொழியைக் கற்றுப் பயனடைவோமாக.
கீழ்க்காணும் வாக்கியத்தில் அடையாளமிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான நிறுத்தற்குறியைத் தேர்ந்தெடுக.
திரு.அறிவழகனுக்குத் தொழிலில் நட்டம் ஏற்பட்டது. இருப்பினும், அவர் மனந்தளரவில்லை O தொடர்ந்து முயற்சித்தார் O நட்டத்திலிருந்து மீண்டு வந்து வெற்றியடைந்தார் O
. ; ;
; ; .
. . .
; : .
நிறுத்தற்குறிகள் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
" பெற்றோர்களே, நாளை வழங்கப்படவுள்ள மாணவர் நிதியுதவி தொகையை மறவாமல் வந்து பெற்றுக் கொள்ளுங்கள், என்றார் தலைமையாசிரியர்
"நமது பிரதமர் சீனாவிற்கு அதிகாரப்பூர்வப் பயணம்" மேற்கொண்டுள்ளார் என்றார் துணையமைச்சர்.
"கல்வி அமைச்சர் அவர்கள் சிறப்பு தேர்ச்சிப் பெற்ற மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டினார்," என்றார் அம்மா.
கீழ்க்காணும் வாக்கியத்தில் அடையாளமிடப்பட்ட இடத்திற்கு ஏற்ற நிறுத்தற்குறிகளைத் தெரிவு செய்க.
" நீ மட்டும் தனியாக இருக்கிறாயே O உன் அண்ணன் எங்கே? O என அப்பா கமலியிடம் கேட்டார் O
! " .
" , .
! ? ,
ஏற்ற நிறுத்தற்குறிகளைத் தெரிவு செய்க.
மலர் கொடி சந்தையில் காய்கறிகள் O பூக்கள் O பழங்கள் ஆகியவற்றை வாங்கினாள்.
, ,
, ;
; .
. .
வட்டமிட்ட இடத்திற்கு ஏற்ற நிறுத்தற்குறிகளைத் தெரிவு செய்க.
கால் இடறித் தடுமாறிய குமுதா ஐயோ O என அலறினாள் O
, .
! !
! .
பொருத்தமான நிறுத்தற்குறிகளை இடுக.
ஆஹா O இந்த இடம் எவ்வளவு அழகு O இங்கேயே இருந்துவிடலாம் போலிருக்கிறது O
! ! .
! . .
, . .
! ; !
சரியான நிறுத்தற்குறிகள் உள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.
i "நீயா, இந்தக் கண்ணாடியை உடைத்தாய்!''
ii "மாமா, எனக்குப் பென்சில் வாங்கிக் கொடுங்கள்," என்றான் கண்ணதாசன்.
iii அந்தக் குருவியை விரட்டியது யார்.
iv பாலா "நான் கடைக்குச் சென்று வருகிறேன்," என்று தந்தையிடம் கூறிச் சென்றான்.
i, ii
i, ii, iv
i, iii
ii, iv
மற்றொருவரின் வாய்மொழிக் கூற்றை அப்படியே எடுத்தாளும்போது அவர் கூறிய வாக்கியத்தின் தொடக்கம், முடிவு ஆகிய இரு இடங்களிலும் இட வேண்டிய நிறுத்தக்குறிகள் யாவை?
i. காற்புள்ளி
ii. ஒன்றை மேற்கோள்குறி
iii. இரட்டை மேற்கோள் ஆரம்பக்குறி
iv. இரட்டை மேற்கோள் முடிவுக்குறி
i, ii
ii, iii
iii, iv
ii, iv
எத்தன்மைகளை வெளிப்படுத்தும் சொற்களுக்குப் பின் உணர்ச்சிக்குறி இட வேண்டும்?
i. அழுகை
ii. பெருமிதம்
iii. அச்சம்
iv பெருமகிழ்ச்சி
i, ii
iii, iv
i, ii, iii
i, ii, iii, iv
நிறுத்தக்குறிகளை விளக்கும் சரியானவற்றைத் தெரிவு செய்க.
i. வாக்கியத்தில் பொருள் முடிந்திருப்பதைக் காட்டுவது முற்றுப்புள்ளி.
ii. தொடர் வாக்கியங்களில் எழுவாய்க்குப் பின் அரைப்புள்ளி இட வேண்டும்.
iii. கோபம், வியப்புப் போன்ற தன்மைகளைக் காட்டும் சொற்களுக்குப் பின் முற்காற்புள்ளி இட வேண்டும்.
iv. பெயர்ச்சொற்களைத் தனித் தனியாகப் பிரிக்கும் போது காற்புள்ளி இட வேண்டும்.
i, ii, iii
i, iii
ii, iv
i, iv
ஓ........ நீர்தான் வீரப்பாண்டிய கட்டபொம்மனோ........
, .
! ?
? .
! .
