Worksheetsஓன்பதாம் வகுப்பு - அலகுத் தேர்வு 2
Total questions: 25
Worksheet time: 25mins
மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் ________________ ஆகும்.
உணவு, உடை, உறைவிடம்
அறம், பொருள், இன்பம்
நிலம், நீர், காற்று
முதலிரண்டும் சரி
கரிகால்சோழன் காலத்தில் கட்டப்பட்ட ________________ அணை விரிவான பாசனத்திட்டமாக இருந்தது.
தௌலீஸ்வரம்
கல்லணை
முல்லை பெரியார்
மூன்றுமே தவறு
விசனம் என்னும் சொல்லின் பொருள் ______________ ஆகும்.
சிறப்பு
அழுகை
மகிழ்ச்சி
கவலை
பட்ட மரம் பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது?
நிலைபெற்ற சிலை
தமிழ் ஒளியின் கவிதைகள்
வீராயி
கண்ணப்பன் கிளிகள்
திருத்தொண்டத்தொகை நூலை எழுதிய ஆசிரியர் யார்?
மாணிக்கவாசகர்
திருநாவுக்கரசர்
சுந்தரர்
சேக்கிழார்
புறநானூறு பாடலில் இடம்பெற்றுள்ள திணை ____________ ஆகும்.
வெட்சி
வாகை
தும்பை
பொதுவியல்
நிலம் குழிந்த இடங்கள்தோறும் __________________ பெருகச் செய்தல் வேண்டும்.
அறச்சாலைகள்
நீர் நிலைகள்
உணவு தளவாடங்கள்
கல்வி கூடங்கள்
தண்ணீர் கதையின் ஆசிரியர் யார் ?
தமிழன்பன்
சமுத்திரம்
சுஜாதா
கந்தர்வன்
"எழுதுகிறார்கள்" என்பது _______________ வினை.
தன்
பிற
தனி
கூட்டு
கூட்டு வினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளை தருவது _______________ வினை ஆகும்.
முதல்
துணை
செய்
செயப்பாட்டு
துணை வினைக்கு ஒரு எடுத்துக்காட்டுத் தருக.
என்னிடம் பணம் இருக்கிறது
நீ என்னை அழ வைக்காதே
புத்தகத்தைக் கீழே போடாதே
மூன்றுமே சரி
பெரியபுராணத்தின் மற்றொரு பெயர் ______________ ஆகும்.
திருத்தொண்டர் திருவந்தாதி
திருத்தொண்டத் தொகை
திருத்தொண்டர் புராணம்
முதலிரண்டும் சரி
சூரிய வெப்பத்தாலும் உடல் உழைப்பாலும் வெப்பமடைந்த உடலைக்குளிர வைப்பது ____________ ஆகும்.
உடம்பினைத் தூய்மை செய்தல்
அழுக்கு நீக்குதல்
குளித்தல்
முதலிரண்டும் சரி
சிற்றிலக்கியமாகிய _________________ல் நீராடல் பருவம் பற்றி கூறப்பட்டுள்ளது.
பிள்ளைத்தமிழ்
மூக்கூடற் பள்ளு
தூது
பரணி
ஆணை + இடு
வினை + வினை
இடை + வினை
பெயர் + வினை
இடை + பெயர்
ஆம், போ, வை, விடு, பார், செய், முடியும்
துணை வினை
தனிவினை
செய்வினை
பிறவினை
உணவு தந்தவர் ______________ தந்தவர் ஆவர்.
உடல்
உயிர்
நீர்
மூன்றுமே தவறு
கழை - பொருள் தருக.
சோலை
எருமை
மலர்
கரும்பு
'வாளை' என்னும் சொல் குறிக்கும் பொருள்
மீன்
தவளை
தேன்
முத்து
தண்ணீர் கதையின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் ____________
ஸ்டேஷன் மாஸ்டர்
இந்திரா
டிரைவர்
அம்மா
உயர்கிறான் என்பதில் 'கிறு' என்பது ______________ இடைநிலை ஆகும்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
எதிர்மறை இடைநிலை
'உறுத்தும்' இச்சொல்லில் முதலில் வரும் "த்" பெறும் இடம்.
சந்தி
சாரியை
விகாரம்
இடைநிலை
க, இய, இயர் என்பது ___________________ விகுதி.
வினையெச்சம்
வியங்கோள் வினைமுற்று
தொழிற்பெயர்
பெயரெச்சம்
"நடந்தனன்" என்னும் சொல் நட+த்(ந்)+த்+அன்+அன் எனப் பிரியும் , இதில் முதலில் வரும் அன் பெறும் இடம் ___________________ ஆகும்.
சந்தி
சாரியை
விகாரம்
இடைநிலை
பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாற்றம் ______________
இடைநிலை
சந்தி
பகுதி
விகாரம்
