wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Unit - 1 Diversity of Living World TM

Total questions: 29

Worksheet time: 16mins

Name
Class
Date
1.
கீழ்க்கண்டவற்றுள் அதீத உப்புச் செறிவு உள்ள சூழலில் காணப்படுபவை எவை?
a)
ஆர்க்கி பாக்டீரியா
b)
யூபாக்டீரியா
c)
சயனோ பாக்டீரியா
d)
மைக்கோபாக்டீரியா
2.
சரியாக பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு
a)
ப்ராங்கியா- அல்னஸ்
b)
ரோடோஸ்பைரில்லம் - பூஞ்சைவேரி
c)
அனபீனா - நைட்ரஜன்நிலைபடுத்தி
d)
ரைசோபியம் -அல்பா அல்பா
3.
கீழ்காண்பவைகளில் எவை நன்கு வரையறுக்கப்பட்ட செல்சுவர் கொண்டிராத, தாவரங்கள் மற்றும் விலங்குகளில் நோய் தொற்றக்கூடிய, ஆக்சிஜன் இன்றி உயிர்வாழக்கூடிய உயிருள்ள சிறிய செல்களாகும்?
a)
பேசில்லஸ்
b)
சூடோமோனாஸ்
c)
 மைக்கோபிளாஸ்மா
d)
நாஸ்டாக்
4.

கீழே கொடுக்கப்பட்டுள்ள (அ முதல் உ) கூற்றுகளை படித்து சரியான கூற்றுகளைக் கொண்ட பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) மாஸ்களும், லைக்கென்களும் வெற்றுப்பாறைகளில் கூட்டமாக வாழும் முதல் உயிரினங்களாகும்.

ஆ) செலாஜினெல்லா ஒத்தவித்துத்தன்மை கொண்ட ஒரு டெரிடோஃபைட் ஆகும்.

இ) சைகஸ் பவழ வேர்கள் VAM கொண்டிருக்கின்றன.

ஈ) பிரையோஃபைட்களில் முக்கிய தாவர உடலம் கேமீட்டக தாவரங்களாகும் அதேசமயம் டெரிடோஃபைட்களில் வித்தகதாவரங்களாகும்.

உ) ஜிம்னோஸ்பெர்ம்களில் ஆண் மற்றும் பெண் கேமீட்டக தாவரங்கள் வித்தகதாவரங்களில் அமைந்துள்ள வித்தகங்களில் காணப்படுகின்றன.

a)

ஆ, இ மற்றும் உ

b)

அ, இ மற்றும் ஈ

c)

ஆ, இ மற்றும் ஈ

d)

அ, ஈ மற்றும் உ

5.
காலனி உடலம் கொண்ட பாசிக்கு எடுத்துக்காட்டு
a)
குளோரெல்லா
b)
வால்வாக்ஸ்
c)
யுலோத்ரிக்ஸ்
d)
ஸ்பைரோகைரா 
6.

R.H. விட்டாக்கர் என்பவரல் முன்மொழியப்பட்ட ஐந்து உலக வகைப்பாடு இதன் அடிப்படையில் அமையவில்லை

a)

நன்கு வரையறுக்கப்பட்ட உட்கரு கொண்டது அல்லது அற்றது

b)

இனப்பெருக்க முறை

c)

உணவூட்ட முறை

d)

சிக்கலான உடல் அமைப்பு

7.
பூஞ்சைவேரி இதற்கு எடுத்துக்காட்டாகும்
a)
பூஞ்சையின் வளர்ச்சியை கட்டுப்படுத்தக்கூடியவை
b)
 கூட்டுவாழ்வு
c)
 உயிர் எதிர்ப்பொருள்
d)
பகிர் வாழ்வு
8.
கீழ்காண்பவைகளில் எவற்றில் சுருண்ட RNA மற்றும் கேப்சோமியர்கள் காணப்படுகிறது?
a)
போலியோ வைரஸ்
b)
புகையிலை தேமல் வைரஸ்
c)
தட்டம்மை வைரஸ்
d)
ரெட்ரோ வைரஸ்
9.
வீராய்டுகள் எவ்வகையில் வைரஸ்களிலிருந்து வேறுபடுகிறது?
a)
DNA மூலக்கூறை சூழ்ந்து புரத உறை காணப்படுகிறது.
b)
DNA மூலக்கூறை சூழ்ந்து புரத உறை காணப்படவில்லை
c)
RNA மூலக்கூறை சூழ்ந்து புரத உறை காணப்படுகிறது
d)
RNA மூலக்கூறை சூழ்ந்து புரத உறை காணப்படவில்லை
10.
தவறான இணையைத் தேர்ந்தெடு
a)
பைனஸ் - இருபால் வகைத் தாவரம்
b)
சைகஸ் - ஒருபால் வகைத் தாவரம்
c)
சால்வினியா - மாற்றுவித்துத்தன்மை
d)
ஈக்விசிட்டம் - ஒத்த வித்துத்தன்மை
11.
எக்டோகார்பஸ் மற்றும் ஃபியூகஸ் வாழ்க்கை வட்டம் முறையே
a)
ஒற்றை மடிய உயிரி, இரட்டை மடிய உயிரி வாழ்க்கைவிட்டம்
b)
இரட்டை மடிய உயிரி, ஒற்றை இரட்டை மடிய உயிரி வாழ்க்கைவிட்டம்
c)
ஒற்றை இரட்டை மடிய உயிரி, இரட்டை மடிய உயிரி வாழ்க்கைவிட்டம்
d)
ஒற்றை இரட்டை மடிய உயிரி, ஒற்றை மடிய உயிரி வாழ்க்கைவிட்டம்
12.

கருமுட்டையில் குன்றல் பகுப்பு நடைபெறுவது இதன் சிறப்பாகும்

a)

மார்கான்ஷியா

b)

ஃபியூகஸ்

c)

ஃபியூனேரியா

d)

கிளாமிடோமோனஸ்

13.
கீழ்காண்பவைகளில் எது அவைகள் உற்பத்தி செய்யும்<br />பொருளோடு சரியாக பொருந்தியுள்ளது?<br />
a)
அசிட்டோபாக்டர் அசிட்டை : உயிர் எதிர்ப்பொருட்கள்
b)
மெத்தனோபாக்டீரியம் : லாக்டிக் அமிலம்
c)
பெனிசிலியம் நொட்டேட்டம் : அசிட்டிக் அமிலம்
d)
சக்காரோமைசிஸ் செரிவிசியே : எத்தனால் 
14.

கீழ்காண்பவைகளில் எந்த பகுதி பாக்டீரிய செல்லிற்கு ஒட்டும் பண்பை தருகிறது?

a)

செல் சுவர்

b)

உட்கரு சவ்வு

c)

பிளாஸ்மா சவ்வு

d)

கிளைக்கோகேலிக்ஸ்

15.

கீழ்க்கண்டவற்றில் எது வீராய்டுகள் பற்றிய தவறான கூற்றாகும்?

a)

புரத உறை இல்லாமல் இருத்தல்

b)

வைரஸ்களை விட சிறியவை

c)

தொற்று நோயை உண்டாக்கக்கூடியவை

d)

இவற்றின் RNA அதிக மூலக்கூறு எடையைக் கொண்டது.

16.
பிரையோஃபைட்கள் மற்றும் டெரிடோஃபைட்களில் ஆண் கேமீட்டுகள் இடம்பெயர தேவையானது
a)
காற்று
b)
பூச்சிகள்
c)
பறவைகள்
d)
நீர்
17.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் எத்தனை உயிரிகள் தற்சார்பு ஊட்டம் உடையவை?லாக்டோபேசில்லஸ், நாஸ்டாக், கேரா, நைட்ரசோமோனாஸ், நைட்ரோபாக்டர், ஸ்டெப்ரோமைசஸ், சக்காரோமைசஸ், டிரிப்பனோசோமா, போர்ஃபைரா, உல்ஃபியா

a)

நான்கு

b)

ஐந்து

c)

ஆறு

d)

மூன்று

18.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் வெற்றுப் பாறைகளின் மீது காணப்படும் முன்னோடி உயிரினங்கள் எவை?
a)
லைக்கென்கள்
b)
ஈரல் தாவரங்கள்
c)
மாஸ்கள்
d)
பச்சை பாசிகள்
19.

இருபால் வகை கேரா தாவரம் கீழ்க்கண்டவாறு இருப்பிடத்தை காட்டுகிறது.

a)

ஒரே தாவரத்தில் மகரந்ததாள், சூலகமும் காணப்படுதல்

b)

ஒரே தாவரத்தில் மேற்பகுதியில் ஆந்தரீடியமும், கீழ்பகுதியில் ஊகோணியமும் காணப்படுதல்

c)

ஒரே தாவரத்தில் கீழ்பகுதியில் ஊகோணியமும் மேற்பகுதியில் ஆந்தரீடியமும் காணப்படுதல்

d)

ஒரே தாவரத்தில் ஆந்தரிடிய தாங்கியும், ஆர்க்கிகோணிய தாங்கியும் காணப்படுதல்

20.

அ முதல் உ வரை கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை படித்து பின்னர் கீழே கேட்க்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்கவும்.

அ) ஈக்விசிட்டம் பெண்கேமீட்டகதாவரமானது பெற்றோர் வித்தகத்தாவரத்தில் நிலைத்திருக்கும்.

ஆ) ஜிங்கோவின் ஆண் கேமீட்டக தாவரம் தற்சார்பு அற்றது.

இ) ஜிங்கோ , பாலிடிரைக்கத்தின் வித்தகத் தாவரத்தைவிட ரிக்சியாவின் வித்தகத் தாவரம் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது.

ஈ) வால்வாக்ஸின் பாலினப்பெருக்கம் ஒத்தகேமீட்களின் இணைவு வகையைச் சார்ந்தது.

உ) ஸ்லைம் மோல்டுகளின் வித்துகள் செல் சுவரற்றவை.

மேலே கூறப்பட்டுள்ளவைகளில் எத்தனை கூற்றுகள் சரியானவை?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஒன்று

21.

பெரும்பாலான பூஞ்சைகளின் செல் சுவரில் காணக்கூடிய முக்கியமானதொரு பகுதிப்பொருள்

a)

கைட்டின்

b)

பெப்டிடோகிளைக்கான்

c)

செல்லுலோஸ்

d)

ஹெமிசெல்லுலோஸ்

22.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் தவறானது எது?

a)

சயனோ பாக்டீயங்கள் நீலப் பசும்பாசிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

b)

தங்க நிறப்பாசிகள் டெஸ்மிடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன

c)

யூபாக்டீயாக்கள் போலியான பாக்டீரியங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன

d)

பைக்கோமைசீட்ஸ் பாசிப் பூஞ்சைகள் என்றும் அழைக்கப்படுகிறது

23.

பின்வரும் எந்த இணைகளின்மூன்றிலும்கசையிழைகளைக் கொண்ட ஆண்கேமீட்கள் காணப்படுகின்றன?

a)

ரிக்சியா, டிரையாப்டெரிஸ், சைகஸ்

b)

ஆந்தோசெராஸ், ஃபியூனேரியா, ஸ்பைரோகைரா

c)

சைக்னிமா, சாப்ரோலெகினியா, ஹைட்ரில்லா

d)

ஃபியூகஸ், மார்சீலியா, கலோட்ராபிஸ்

24.

வெளிப்புற ஃபுளோயம்சூழ் சைபனோஸ்டீல் இதில் காணப்படுகிறது.

a)

அடியாண்டம் மற்றும் குக்கர்பிட்டேசி

b)

ஆஸ்முண்டா மற்றும் ஈக்விசிட்டம்

c)

மார்சிலியா மற்றும் பாட்டிரிக்கியம்

d)

மார்சிலியா மற்றும் பாட்டிரிக்கியம்

25.

மெலோய்டோகைனி இன்கோஜினிடாவால் தாக்கப்படும் புகையிலைத் தாவரத்தின் பகுதி எது?

a)

மலர்

b)

இலை

c)

தண்டு

d)

வேர்

26.

சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்

a)

ஜிம்னோஸ்பெர்ம்கள் ஒத்தவித்துத்தன்மை மற்றும் மாற்று வித்துத்தன்மை கொண்டவை.

b)

சால்வினியா, ஜிங்கோ மற்றும் பைனஸ் அனைத்தும் ஜிம்னோஸ்பெர்ம்கள்

c)

செக்கோயா உயரமான மரங்களில் ஒன்று

d)

ஜிம்னோஸ்பெர்ம்களின் இலைகள் அதீத சூழ்நிலைக்கான தகவமைப்பை பெற்றிருக்கவில்லை

27.

ஜிம்னோஸ்பெர்ம்களின் இலைகள் அதீத சூழ்நிலைக்கான தகவமைப்பை பெற்றிருக்கவில்லை

a)

வித்து உருவாக்கம்

b)

மொட்டுவிடுதல்

c)

உடல இனக்கலப்பு

d)

அப்போமிக்ஸிஸ்

28.
கிரைசோஃபைட்கள், யூக்ளினாய்டுகள், டைனோஃபிளாச<br />ஜெல்லேட்டுகள் மற்றும் ஸ்லைம் மோல்டுகள் இவை அனைத்தும் உள்ளடங்கிய பெரும்பிரிவு<br />
a)
விலங்குகள்
b)
மொனிரா
c)
புரோட்டிஸ்டா 
d)
பூஞ்சைகள் 
29.

அசைபோடும் விலங்குகளின் சாணத்திலிருந்து உயிரிவளி உற்பத்தி செய்யப் பயன்படும் முன்னோடி தொல்லுட்கரு உயிரிகள்

a)

ஹாலோஃபைல்ஸ்

b)

தெர்மோஅசிடோஃபைல்ஸ்

c)

மெத்தனோஜென்ஸ்

d)

யூபாக்டீரியா