NEW
Font size
Worksheets17.8.2020
Total questions: 10
Worksheet time: 5mins
குதிரையின் _______________ அடிபட்டுவிட்டது.
அதனால், அது நொண்டி நொண்டி நடந்தது.
குளம்பில்
குழம்பில்
ஒழுக்கம் நிறைந்த மனிதனைத்தான் எல்லோரும் விரும்புவர். _________________ தவறி நடப்பவனை எல்லோரும் தூற்றுவர்.
நெறி
நெரி
முயல்கள் தோட்டத்தில்
துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தன. அப்போது, அங்கு வந்த ஓர் ஓநாயைக் கண்டு அவை _______________ கொண்டன.
ஒளிந்து
ஒழிந்து
வில்லுப்பாட்டு மக்களுக்கு நடப்பு விவகாரங்களையும் அறநெறிக் கருத்துகளையும் எடுத்து _________________ உதவுகிறது.
கூற
பாட
விமலாவும் அல்லியும் _________________ ஆடிய நடனத்துக்கு முதல் பரிசு கிடைத்தது.
சேர்ந்து
விரைந்து
தலைமையாசிரியர் மாணவர்களின் எதிர்காலக் குறிக்கோளை ஒரு தாளில் _________________ வைத்துக்கொள்ள சொன்னார்.
குறித்து
பார்த்து
உலகிலுள்ள ______________ மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்றாகும்.
பழமையான
உண்மையான
சமூக மன்றங்கள் இப்போது விளையாட்டு, கல்வி, கலை, பண்பாடு ஆகியவற்றில் ஈடுபாடு _________________ வருகின்றன.
காட்டி
காட்டிய
தியாகு ________________ நீக்கப்பட்டாலும் மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் சொந்தத் தொழில் ஒன்றை ஆரம்பித்தார்.
வேலையிலிருந்து
வேலையிடம்
மணியம் தன் மனத்தில் உள்ள ஐயப்பாடுகளை _____________________ கேட்டுத் தெளிவுபெற்றான்.
மருத்துவரிடம்
மருத்துவரால்
