Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தெரிந்த சொல் தெரியாத பொருள் ‍(அபிராமி அந்தாதி)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

சிலை


(கருப்புச் சிலையும் மென்பாசாங்குசமும் கையில் அணியும் திரிபுர் சுந்தரி ‍ - பாடல் 2)

a)

மரம்

b)

வானம்

c)

வில்

d)

க‌ல்

2.

கரத்தல்


(பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்

காத்தவளே பின் கரந்தவளே-பாடல்13)

a)

வாங்குதல்

b)

பொங்குதல்

c)

எடுத்தல்

d)

மறைத்தல்

3.

‍பிடி


(பனிமால் இமயப் பிடியே... - பாடல் 22)

a)

பெண் யானை

b)

பாறை

c)

க‌ல்

d)

எதுவுமில்லை

4.

மணி


(மணியே மணியின் ஒளியே ‍‍‍.... -பாடல் 24)

a)

விளக்கு

b)

மாணிக்கம்

c)

நட்சத்திரம்

d)

எதுவுமில்லை

5.

ஏத்துதல்


(இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே - பாடல்25)

a)

நிறுத்துதல்

b)

பிடித்தல்

c)

வணங்குதல்

d)

ஏற்றுதல்

6.

பதம்


(பத்ம பதயுகம் சூடும்பணி எனக்கே அடைத்தனை ‍ - பாடல் 27)

a)

உயரம்

b)

பாதம்

c)

நகை

d)

இடம்

7.

புல்லுதல்


(சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமளப்பூங்கொடியே ‍‍-பாடல் 28)

a)

செல்லுதல்

b)

ஆடல்

c)

பொருந்துதல்

d)

தோன்றுதல்

8.

அமை


(அமையும் அமையுறு தோளியர்மேல் வைத்த ஆசையுமே ‍ - பாடல் 31)

a)

அமைத்தல்

b)

ஊமை

c)

அம்மை

d)

அடங்கு, மூங்கில்

9.

நேரிழை


(ஈசர் பாகத்து நேரிழையே ‍- பாடல் 32)

a)

தெய்வம்

b)

பெண்

c)

அங்கி

d)

அணிகலன்

10.

யாமளை


(களபக் குவிமுலை யாமளைக் கோமளமே - பாடல்33)

a)

அழகு

b)

இளமையான‌

c)

பெண்

d)

சிறப்பு

11.

பை


(விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் ‍- பாடல்37)

a)

கழுத்து

b)

கால்

c)

பாம்புப்படம்

d)

தலை

12.

பரிசு


(அப் பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ - பாடல்45)

a)

தன்மை

b)

செயல்

c)

வேள்வி

d)

தோற்றம்

13.

வேலை


(வேலை நிலம் ஏழும் பருவரை எட்டும் ‍ - பாடல் 47)

a)

செயல்

b)

மலை

c)

கடல்

d)

ஆகாயம்

14.

அடுத்து


(நரம்பை அடுத்து இசைவடிவாய் நின்ற நாயகியே - பாடல் 49)

a)

அடுக்கி

b)

கொண்ட‌

c)

தாண்டி

d)

எடுத்து

15.

செய்ய‌


(சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்ய பட்டும் - பாடல் 53;

மருங்கு‍ - இடை)

a)

உடைய‌

b)

செம்மையான‌

c)

வெண்ணிற‌

d)

தூய‌

16.

நாழி


(ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு, அண்டம் எல்லாம் உய்ய அறம் செய்யும் ‍ பாடல் 67)

a)

ஒரு படி

b)

காலம்

c)

மணி

d)

நிமிடம்

17.

தறி


(குன்றில் கொட்டும் தறி குறிக்கும் - பாடல் 63)

a)

வில்

b)

தடி

c)

ஆயுதம்

d)

இவை எதுவுமில்லை

18.

பொருப்பு


(பசும் பொற்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய் .. - பாடல் 66)

a)

மரம்

b)

வில்

c)

மலை

d)

இவை எதுவுமில்லை

19.

பலி


(பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பார் எங்குமே ... பாடல் 67)

a)

பிச்சை

b)

செயல்

c)

தண்ணீர்

d)

பால்

20.

குழல்


(கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே... - பாடல் 69)

a)

யாழ்

b)

கூந்தல்

c)

குழாய்

d)

பாதம்