NEW
Font size
WorksheetsXII Tha-qiz20ii
Total questions: 10
Worksheet time: 20mins
பொருள் குழப்பமின்றி எழுதுவதற்குரிய காரணங்களுள் பொருந்துவதைத் தேர்க.
தேவையான இடங்களில் இடைவெளி விடாமல் எழுதுதல்.
நிறுத்தற் குறிகளை உரிய இடங்களில் இட்டு எழுதுதல்.
வல்லின மெய்களைத் தேவையான இடங்களில் இடாமல் எழுதுதல்.
கீழ்க்காணும் தொடர்களில் பிழையான தொடரைக் கண்டறிக.
அவன் வெண்மதியிடம் பேசினான்.
கோவலன் மதுரைக்குச் சென்றான்.
குதிரையும் யானையும் வேகமாக ஓடியது.
கீழ்வருவனவற்றுள் இரட்டைக் கிளவிச் சொல் எது?
சலசல
விம்மி விம்மி
உற்றார் உறவினர்
_______ உரிய இடங்களில் இட்டும் இடாமலும் எழுதினால் பொருள் மயக்கம் ஏற்படாது.
வல்லின மெய்களை
நிறுத்தக் குறிகளை
வேற்றுமை உருபுகளை
பின்வருவனவற்றுள் சரியான சொற்றொடரைத் தேர்க.
திருவளர்ச் செல்வன்
திருவளர் செல்வன்
திருநிறைச் செல்வன்
பின்வரும் சொற்களில் உரிச்சொல் எது?
கட் மணம்
கடிமணம்
மணி அடி
சுடராழி - இச்சொல்லைப் பிரிக்கும் முறை _________ .
சுட + ராழி
சுடர் + ஆழி
சு + டராழி
பறவை படபடவெனச் சிறகை அடித்தது - இது எவ்வகைத் தொடர்?
அடுக்குத் தொடர்
இரட்டைக் கிளவி தொடர்
இடைச்சொல் தொடர்.
கீழ்வருவனவற்றுள் முழுமையாகப் பொருள் உணர்த்தும் தொடரைத் தேர்க
காட்டில் இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் புறப்பட்டான்.
இராமனுக்குப் பணிவிடை செய்ய இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
பணிவிடை செய்ய இராமனுடன் இலக்குவனும் காட்டிற்குப் புறப்பட்டான்.
எழுதும் போதோ பேசும் போதோ தேவையான இடங்களில் இடைவெளி விடாததும், தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவதும் படிப்போர்க்கும் கேட்போருக்கும் __________ குழப்பத்தை ஏற்படுத்தும்.
பொருள்
கருத்து
நடை
