Font size
Worksheetsதமிழ்மொழி
Total questions: 10
Worksheet time: 8mins
கவிதைப் போட்டியில் பங்கு பெற்ற நிமலன் பிழையில்லாமலும் ,தங்குதடையின்றியும் (a) வென கவிதையை ஒப்புவித்து முதல் பரிசை வென்றான்.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பல வீடுகளும் கட்டடங்களும் (a) வென ஆட்டம் கண்டன.
(a) வென குளிரில் நடுங்கிய நாய்க்குட்டியைத் தூக்கித் துணியால் துவட்டிவிட்டான் கரிகாலன்.
நீண்ட நேரம் பயிற்சி செய்த குமரனின் உடல் வியர்வையால் (a) வென்று இருந்ததால் விரைவாகக் குளிக்கச் சென்றான்.
இரவில் வெள்ளை நிறச் சேலையில் வந்த பாட்டியைப் பார்த்து ஆவியென நினைத்து (a) வென நடுங்கிய மாலனைக் கண்டு அனைவரும் சிரித்தனர்.
திருவிழா முடிந்து மஞ்சள் நீராடியதால் ஆலய தரை முழுவதும் (a) வென்று இருந்தது.
உலகக்கிண்ண காற்பந்தாட்டத்தைக் காணவேண்டும் என்பதற்காக அகிலன் (a) வென ஆசிரியர் கொடுத்த வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டு தொலைக்காட்சியின் முன் அமர்ந்தான்.
(a) வென விலைவாசி ஏற்றம் கண்டதால் பல ஏழை மக்கள் பொருட்கள் வாங்க பணமின்றித் தவித்தனர்.
கடும் பனியில் மாட்டிக் கொண்ட அறிவழகிக்குக் குளிர் அதிகமானதால் அவள் உடல் (a) வென நடுங்கியது.
வெங்காயத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் அதன் விலை (a) வென உயர்ந்தது.
