wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வகுப்பு 9- இலக்கணம் இயல் 1

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பயன் நிலைத்திருக்கும் இடம் ______ .

a)

பயனிலை

b)

எழுவாய்

c)

செயப்படுபொருள்

d)

அனைத்தும்

2.

சொன்னவன் முருகன்- இத்தொடரில் இடம் பெற்றுள்ளது _______ பயனிலை.

a)

பெயர் பயனிலை

b)

வினாப் பயனிலை

c)

வினைப்பயனிலை

d)

எதுவுமில்லை

3.

பயனிலை,எழுவாய்,செயப்படுபொருள் - என்ற வரிசையில் அமைந்த தொடரைக் கண்டறி.

a)

நான் பாடத்தைப் படித்தேன்.

b)

பாடத்தை நான் படித்தேன்.

c)

படித்தேன் நான் பாடத்தை.

d)

நான் படித்தேன் பாடத்தை.

4.

விரைந்து ஓடினான் - இத்தொடரில் ______வகை அடை பயின்று வந்துள்ளது.

a)

சொல்லடை

b)

பெயரடை

c)

வினையடை

d)

எழுவாய் அடை

5.

செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை __________ .

a)

செய்வினை

b)

செயப்பாட்டுவினை

c)

தன்வினை

d)

பிறவினை

6.

எழுவாய் ஒரு வினையைச் செய்தால் ________ .

a)

தன்வினை

b)

பிறவினை

c)

செய்வினை

d)

கூட்டுவினை

7.

எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது _________ எனப்படும்.

a)

தன்வினை

b)

பிறவினை

c)

செய்வினை

d)

கூட்டுவினை

8.

சொல்லின் முதலில் நின்று பகாபதமாக அமைவது ______.

a)

பகுதி

b)

விகுதி

c)

சந்தி

d)

சாரியை

9.

பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டுவது ________ எனப்படும்.

a)

சந்தி

b)

சாரியை

c)

இடைநிலை

d)

விகாரம்

10.

முருகன் தேர்வெழுதவில்லை - எவ்வகைத் தொடர்?

a)

செய்வினைத் தொடர்

b)

செயப்பாட்டுவினைத் தொடர்

c)

உடன்பாட்டுவினைத் தொடர்

d)

எதிர்மறைவினைத் தொடர்

11.

விரைந்தோடு - எவ்வகைத்தொடர்

a)

செய்தித் தொடர்

b)

கட்டளைத்தொடர்

c)

வினாத்தொடர்

d)

தன்வினைத் தொடர்

12.

" பறந்தது " இச்சொல்லிலுள்ள விகுதி _______.

a)

ஆண்பால் வினைமுற்று விகுதி

b)

பெண்பால் வினைமுற்று விகுதி

c)

ஒன்றன்பால் வினைமுற்று விகுதி

d)

பலவின்பால் வினைமுற்று விகுதி

13.

தொழிற்பெயர் விகுதிகளைக் கண்டறி.

a)

அன்,ஆன்

b)

இ,உ

c)

க,இய

d)

தல்,அல்

14.

ஆண்பால் விகுதிகளைக் கண்டறி.

a)

அன்,ஆன்

b)

அர்,ஆர்

c)

அல்,ஆள்

d)

அ,ஆ

15.

தோன்றா எழுவாய்க்குச் சான்று தருக.

a)

பறந்தது

b)

காகம்

c)

கனகாம்பரம்

d)

நடந்த