wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமைத் தொகை & மரபுத்தொடர்(படிவம்4)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

வேற்றுமைத்தொகையின் பொருளைக் குறிக்கும் இரண்டு விடையைத் தெரிவு செய்க.

a)

வேற்றுமை உருபு மறைந்துள்ள சொற்றொடர் வேற்றுமைத்தொகையாகும்

b)

எட்டு வேற்றுமை உருபையும் ஏற்று வரும்.

c)

பெயரைச் சார்ந்தே வரும் இடைச்சொற்கள் வேற்றுமைத்தொகையாகும்.

d)

2,3,4,5,6 மற்றும் 7-ஆம் வேற்றுமை உருபை ஏற்று வரும்.

2.

கீழ்க்காணும் வேற்றுமைத் தொகையில் எந்த வேற்றுமை உருபு மறைந்துள்ளது?

பள்ளி சென்றான்

a)

b)

ஆல்

c)

கு

d)

உடைய

3.

வேற்றுமை _______________ வேறொரு சொல்லும் மறைந்திருந்தால் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத்தொகை எனப்படும்.

a)

தொகையோடு

b)

தொடரோடு

c)

உருபோடு

4.

'கண்ணீர்' எத்தனையாவது வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ளது?

a)

2-ஆம் வேற்றுமை உருபு

b)

5-ஆம் வேற்றுமை உருபு

c)

7-ஆம் வேற்றுமை உருபு

d)

4-ஆம் வேற்றுமை உருபு

5.

கீழ்க்காணும் சொல்லில் மறைந்து இருக்கும் வேற்றுமை உருபு மற்றும் வேறொரு சொல்லையும் தெரிவு செய்க

தண்ணீர்ப்பாம்பு

a)

2-ஆம் வேற்றுமை உருபு, வாழும்

b)

3-ஆம் வேற்றுமை உருபு, இருக்கும்

c)

7-ஆம் வேற்றுமை உருபு, வாழும்

d)

5-ஆம் வேற்றுமை உருபு, இருக்கும்

6.

திரு.கபிலன் முனைவர் பட்டம் வரை கல்வி கற்றிருந்தாலும் __________________ என்பதற்கொப்ப மிகவும் தன்னடக்கமாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்வார்.

a)

கருணைக்கடல்

b)

தட்டிக்கொடுத்தல்

c)

சாயம் வெளுத்தல்

d)

நிறைகுடம்

7.

கீழ்க்காணும் விடைகளில் சரியாகக் கொடுக்கப்பட்டுள்ள மரபுத்தொடர் மற்றும் அதன் பொருளைத் தெரிவு செய்க.

a)

காதில் பூ வைத்தல்-உண்மை வெளிப்படுதல்

b)

தட்டிக்கொடுத்தல்-முட்டாளாக்குதல்

c)

கருணைக்கடல்- இரக்கம் மிகுந்தவர்

d)

நிறைகுடம்-உற்சாகப்படுத்துதல்

8.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

வினயா ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறவில்லை. இருப்பினும், தன் நண்பர்களிடர்களிடம் தான் வெற்றி பெற்றதாகப் பொய்யுரைத்தாள்.

a)

தட்டிக்கொடுத்தல்

b)

காதில் பூ வைத்தல்

c)

சாயம் வெளுத்தல்

d)

நிறைகுடம்

9.

வாழ்க்கையில் பல தோல்விகளைச் சந்தித்த அகிலன் மனமுடைந்து இனிமேல் தன்னால் எதுவும் சாதிக்க முடியாது என்ற எண்ணத்தில் இருந்தான். மனமுடைந்த அவனை விமல் ஆறுதல் சொல்லி ____________________________ இன்று ஒரு தொழிலதிபராக அகிலன் திகழ்கின்றான்.

a)

கருணைக்கடல்

b)

தட்டிக்கொடுத்தல்

c)

காதில் பூ வைத்தல்

d)

நிறைகுடம்

10.

பல நாட்களாக ஆசிரியர் கொடுத்த பாடங்களைச் செய்யாமல் தப்பித்து வந்த ரவின், அன்று ஆசிரியரிடம் புத்தகத்தை ஒப்படைக்கும்போது அவனின் ______________________________.

a)

தட்டிக்கொடுத்தல்

b)

காதில் பூ வைத்தல்

c)

சாயம் வெளுத்தது

d)

கருணைக் கடல்