wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி படிவம் 3

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பாடவேளையின்போது _________ வென பேசிக் கொண்டிருந்த மாணவர்களை ஆசிரியர் கண்டித்தார்.

a)

சட சட

b)

தொண தொண

c)

கிடு கிடு

d)

விறு விறு

2.

வீட்டிற்கு வந்த விருந்தினரை கீதா ____________ மலர வரவேற்றாள்.

a)

உயர்வு தாழ்வு

b)

தங்கு தடை

c)

அகமும் புறமும்

d)

கள்ளங்கபடு

3.

தோட்டத்தில் ________ இருந்த பூச்செடிகளுக்குத் தாத்தா நீர் பாய்ச்சினார்

a)

நாணிக் கோணி

b)

அகமும் புறமும்

c)

சட்டத் திட்டம்

d)

வாடி வதங்கி

4.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் புதுமணத் தம்பதிகளை _________ இணைப்பிரியாமல் வாழவேண்டுமென வாழ்த்தினர்.

a)

பசுமரத்தாணிப் போல

b)

அழகுக்கு அழகு செய்வது போல

c)

மணியும் ஒலியும் போல

d)

இலைமறை காய் போல

5.

தேர்வுக்கு ________ படித்த அமுதன் இறுதியில் சிறந்த தேர்ச்சி பெறாமல் வருந்தினான்.

a)

கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல

b)

உள்ளங்கை நெல்லிக் கனி போல

c)

அழகுக்கு அழகுச் செய்வது போல

d)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

6.

தலைமுறை தலைமுறையாகக் காக்கப்பட்டு வந்த பண்பாட்டு மரபுகளை நாம் என்றும் போற்ற வேண்டும்.

a)

வாழையடி வாழை

b)

தோள் கொடுத்தல்

c)

உச்சி குளிர்தல்

d)

வீடு வாசல்

7.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

________ எனக்கேட்ட தாய்

a)

கற்றோன்

b)

பார்ப்போன்

c)

சான்றோன்

d)

சான்றோம்

8.

மலை உச்சியில் வீசியக் காற்று _______________________ என இருந்தது

a)

சிலு சிலு

b)

பர பர

c)

துரு துரு

d)

தள தள

9.

வேலைக்குச் செல்லும் அவசரத்தில் மேனகா தன் வேலைகள் அனைத்தையும் ________________ என செய்யத் தொடங்கினாள்.

a)

சிலு சிலு

b)

பர பர

c)

தள தள்

d)

கல கல

10.

குழந்தைகள் என்றாலே ________________________வென அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பது இயல்பான ஒரு செயலாகும்.

a)

துரு துரு

b)

தள தள

c)

பர பர

d)

சிலு சிலு

11.

வெளி நாடு சென்று படிக்க வேண்டும் என்ற பாலனின் கனவு, அவனது தந்தையின் திடீர் மரணத்தினால் ____________________ ஆனது.

a)

உடும்புப் பிடி

b)

ஈயாடவில்லை

c)

கானல் நீர்

d)

இடித்துரைத்தல்

12.

காட்டில் உள்ள கனி வகைகளை கொண்டு வந்த குகனின் அன்பிற்கு இராமன் _____________________________.

a)

ஈயாடினான்

b)

உடும்புப் பிடித்தான்

c)

இடித்துரைத்தான்

d)

தலை வணங்கினான்.

13.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

________________________________________

a)

இழுக்க முடையார்வாய்ச் சொல்

b)

வழுக்க முடையார்வாய்ச் சொல்

c)

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

d)

அழுக்க முடையார்வாய்ச் சொல்

14.

தோட்டத்தில் வாழை மரம் _____________________ என செழிப்பாக வளர்ந்து காணப்படுகின்றன.

a)

தள தள

b)

பர பர

c)

சிலு சிலு

15.

பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தாலும்

வெள்ளையர்களை எதிர்க்கும் தனது கொள்கையில் _______________________________ இருந்தவர்

பாரதியார் ஆவார்.

a)

ஈயாடவில்லை

b)

உடும்புப் பிடி

c)

இடித்துரைத்தல்

d)

கானல் நீர்