wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

விடுபட்ட இடத்தை நிறைவு செய்.


பதறாத __________________ சிதறாது.

a)

வேலை

b)

செயல்

c)

காரியம்

2.

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை.

மேற்காணும் பழமொழியில் கோடிடப்பட்டுள்ள சொல் எதனைக் குறிக்கிறது?

a)

ஊக்கம்

b)

நெருப்பு

c)

உற்சாகம்

d)

விளக்கு

3.

உற்றார் உறவினர்கள் நிறைய பேர் இருந்தும் கேசவன் தன் பெரிய வீட்டில் தனியாகத்தான் இருக்கிறான்.


சூழலுக்கேற்ற பழமொழி என்ன?

a)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக வேண்டுமா?

b)

தனிமரம் தோப்பாகாது

c)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

4.

கண்ணாடியை உடைத்தது தம்பி எனத் தெரிந்தும் அவனைச் சரியாக கவனிக்காததால் அம்மா சிவாவைத் திட்டினார்.

a)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்

b)

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

c)

அவனன்றி ஓரணுவும் அசையாது.

5.

'உடல் நலத்தைப் பார்த்துக் கொள். ______________________________ என்பதை மறவாதே!' என்று ஆசிரியர் அறிவுறுத்தினார்.

a)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

b)

சுவரை வைத்துதான் சித்திரம் வரைய முடியும்

c)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

6.

புகழ்பெற்ற காற்பந்து வீரர் லியொனல் மெஸ்ஸியின் மகனும் காற்பந்து விளையாடுவதில் திறமையானவர்.

a)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக வேண்டுமா?

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

c)

அவனன்றி ஓரணுவும் அசையாது

7.

உலகில் உள்ள அனைத்தும் இறைவனின் பேறாற்றலினாலெயே இயங்குகின்றன.


பொருளுக்கேற்ற பழமொழி யாது?

a)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

b)

அவனன்றி ஓரணுவும் அசையாது

c)

தனிமரம் தோப்பாகாது.

8.

ஓட்டப்பந்தயத்தில் முதல் பரிசு பெறவேண்டும் என்ற எண்ணங்கொண்ட முத்து தடைகள் பல கடந்து தனது இலட்சியத்தை அடைந்தான்.

a)

முன் வைத்த காலை பின் வைக்காதே

b)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை

c)

தனிமரம் தோப்பாகாது

9.

ஏழை சிறுவன் என பாராமல் தனது தத்துப் பிள்ளையாக்கி வளர்த்த சிங்காரத்தின் சொத்துகள் அனைத்தையும் சூதாட்டத்தில் இழந்தான் பழனி.

a)

அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?

b)

தனிமரம் தோப்பாகாது

c)

எய்தவன் இருக்க அம்பை நோவானேன்

10.

சுற்றுலா செல்ல அப்பாவிடம் அனுமதி பெற்றுத் தருமாறு அம்மாவிடம் கூறினான் மதியழகன்.

a)

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்

b)

தனிமரம் தோப்பாகாது

c)

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை