Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Module 14,15,16 Pre - Evaluation

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

1. 6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தை நோய்வாய்பட்ட போது தாய் என்ன செய்ய வேண்டும்?

a)

குழந்தையை ஊக்கப்படுத்தி சிறிதளவாவது உணவு உண்ணச் செய்ய வேண்டும்

b)

பசியைத் தூண்டக் கூடிய குழந்தை விரும்பும் உணவை கொடுக்க வேண்டும்

c)

குழந்தையின் தேவைக்கேற்ப தாய்ப்பால் கொடுக்க வேண்டும்

d)

இவை அனைத்தும்

2.

2.குள்ளத்தன்மைக்கு மிக முக்கியமான காரணம்

a)

சரியான நேரத்தில் கூடுதல் உணவு வழங்காதிருத்தல்

b)

அடிக்கடி நோய்வாய்ப்படுதல்

c)

நோய்வாய்ப்பட்ட போதும் அதன் பிறகும் குறைந்த உணவே சாப்பிடுதல்

d)

இவை அனைத்தும்

3.

3.நோய் குணமான பின் உடல் இழந்த சக்தியை மீண்டும் பெற அதிக உணவு தேவைப்படும்

a)

தவறு

b)

சரி

4.

4. கீழ்கண்டவற்றுள் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள பிரச்சனை அல்லாதது எது?

a)

மார்பகக் காம்புகளில் புண்

b)

மார்பக பால் கட்டிகள்

c)

உள்வாங்கிய முலைக்காம்பு

d)

இரவு நேரங்களில் தாய்ப்பால் ஊட்டுதல்

5.

5.தாய் வசதியாக அமர்ந்தோ அல்லது படுத்தோ தாய்ப்பால் தரவில்லை என்றாலும் குழந்தையால் நீண்டநேரம் பால் குடிக்க முடியும்

a)

சரி

b)

தவறு

6.

6.ஆரோக்கியமான பச்சிளம் குழந்தையால் தாய்ப்பால் குடிக்க இயலாததற்கான காரணங்கள்

a)

தாய் வசதியாக அமர்ந்து அல்லது படுத்து தாய்ப்பால் தராதது

b)

குழந்தையை தாய்ப்பால் குடிக்க வசதியாக பிடித்துக் கொள்ளாதது

c)

குழந்தையின் தலை பின்னோக்கி சாய்வாக இல்லாதது

d)

மார்பகத்தில் உள்ள கருமை நிற பகுதி முழுவதும் குழந்தையின் வாயில் இல்லாதது

e)

தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தை தூங்கி விடுவது

7.

7.சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை பாதுகாத்தல்

a)

சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் உள்ள கிண்ணத்தை உடனடியாக மூடி வைக்க வேண்டும்

b)

பாலை குளிர்ந்த சுகாதாரமான உலர்ந்த இடத்தில் வைக்கவேண்டும்

c)

குழந்தைக்கு சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை கொடுக்கும் முன் ஒருபோதும் சூடாக்க கூடாது

d)

சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை 6 மணி நேரத்திற்கு மேலாக வைத்திருக்கக்கூடாது

e)

இவை அனைத்தும்

8.

8.மார்பக பால் கட்டிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?

a)

மார்பகங்கள் வீக்கம் ஆகவும் தொடும்போது வலியுடன் இருக்கும்

b)

தாய்க்கு காய்ச்சலாக இருக்கும்

c)

தாயால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாது

d)

தாய்ப்பால் குடிக்காத குழந்தை பசி மற்றும் எரிச்சலுடன் காணப்படும்

9.

9.கீழ்காணும் கங்காரு தாய் அரவணைப்பு முறையின் முக்கிய படிகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்

a)

குழந்தையின் ஆடையை நீக்கிவிட்டு தோலோடு தோல் சேர்த்து அரவணைத்து பாதுகாக்க வேண்டும்

b)

தலைக்கு தொப்பி மற்றும் காலுறை அனுவித்து வெதுவெதுப்பாக வைக்கவேண்டும்

c)

குழந்தையின் தாய் மட்டுமே இம் முறையை பயன்படுத்த வேண்டும்

d)

பச்சிளம் குழந்தையை வசதியான நிலைகளில் பிடிக்க வேண்டும்

10.

10.கங்காரு தாய் பராமரிப்பில் குழந்தைக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?

a)

வெதுவெதுப்பை அளிக்கிறது

b)

நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது

c)

அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க உதவுகிறது

d)

குழந்தைக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக கண்டறிய முடிகிறது

11.

11.இதில் எது சரியான பாலூட்டும் நிலை?

a)
b)
c)
d)
e)

இவை அனைத்தும்