wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ILA Module 14, 15, 16

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

தாய் குழந்தைக்கு எத்தனை மாதம் வரை தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்?

a)

3- மாதம் வரை

b)

2-வாரம் போதுமானது

c)

4 –மாதம் வரை

d)

6 – மாதம் வரை

2.

6 மாதம் குறைவாக உள்ள குழந்தைக்கு தண்ணீர் தாகமாக இருப்பதாக தாய் எண்ணினால் எவ்வளவு தண்ணீர் கொடுக்கலாம்?

a)

புட்டி பாட்டில் அளவு தண்ணீர் கொடுக்கலாம்

b)

தேவையான அளவு காயவைத்த தண்ணீர் கொடுக்கலாம்

c)

ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீர் கொடுப்பது போதுமானது.

d)

6 – மாதம் வரை தாய்பால் தவிர வேறு எதுவும் கொடுக்க கூடாது.

3.

உலக தாய் பால் வாரம் எப்பொழுது கொண்டாடபடுகிறது?

a)

ஆகஸ்ட் மாதம் முதல் வாரம்

b)

பிப்ரவரி 2 வது வாரம்

c)

ஜனவரி மாதம் முதல் வாரம்

d)

ஏப்ரல் மாதம் முதல் வாரம்

4.

குழந்தைக்கு கூடுதல் உணவு தொடங்க எந்த மாததில் தொடங்கலாம்?

a)

3 - மாதத்தில் இருந்து

b)

6 - மாதத்தில் இருந்து

c)

ஒரு வருடத்திற்கு பிறகு

d)

குழந்தை பிறந்த உடன்.

5.

6 மாதத்திற்கு கீழ் உள்ள குழந்தைக்கு சிறியதாக உடல்நலம் பாதிப்படையும் போது என்ன செய்ய வேண்டும்?

a)

தாய்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும்

b)

மருந்து பொருட்கள் மட்டும் கொடுக்கவும்

c)

குழந்தை அடிக்கடி தாய்பால் குடிக்க விரும்பும் அதனால் அடிக்கடி தாய் பால் கொடுக்கவும்

d)

நீர் ஆகாரம் கொடுக்கலாம்

6.

நோய்வாய் பட்டிருக்கையில் குறைவான உணவை குழந்தை உண்பதற்கு காரணம்?

a)

பசியின்மை

b)

தூங்கி கொண்டே இருப்பதால்

c)

குழந்தை அழுந்து கொண்டே இருப்பதால்

d)

அனைத்தும் சரி

7.

6 மாதத்திற்க்கு மேற்பட்ட குழந்தை நோய்வாய்ப்படும் போதும், குழந்தை பசியின்மையில் இருக்கும் போதும் தாய் என்ன செய்ய வேண்டும்?

a)

நோய் உள்ள குழந்தைக்கு உணவு எதுவும் கொடுக்க கூடாது.

b)

தண்ணீர் மட்டும் கொடுப்பது சிறந்தது.

c)

குழந்தை பசியின்றி காணப்பட்டாலும் தாய் பசியை தூண்டும் உணவும், பிடித்தமான உணவும் சிறிது சிறிதாக உணவு கொடுக்கலாம்.

d)

மேற்கூறிய எதுவும் இல்லை.

8.

6 மாதத்திற்கு மேல் உள்ள நோய்வாய்பட்ட குழந்தை நோயில் இருந்து மீண்ட பின் அதிக உணவு உட்கொண்டால் என்ன செய்ய வேண்டும்

a)

அளவான உணவு மட்டும் கொடுக்கவும்

b)

நோயில் இருந்து மீண்ட குழந்தைக்கு அதிக அளவு உணவு தேவைப்படும்,எனவே ஊட்டச்சத்து நிறைந்த உணவு கொடுக்கவும்.

c)

சிறிது காலத்திற்கு திரவ உணவு மட்டுமே கொடுக்கவும்

d)

மேற்கூறிய அனைத்தும் தவறு.

9.

தாய் நோயுற்ற காலத்தில் பால் கொடுக்கலாமா?

a)

பால் கொடுப்பது குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தும்

b)

தாய்பால் கொடுக்கலாம்

c)

புட்டி பால் கொடுக்கலாம்

d)

அனைத்தும் சரி

10.

HIV - தொற்றால் பாதிக்கப்பட்ட தாய்பால் கொடுக்கலாமா?

a)

தாய் பால் தானம் கேட்கலாம்.

b)

தாய்பால் கொடுக்க கூடாது

c)

புட்டிபால் மட்டுமே கொடுக்கலாம்

d)

தாய் பால் கொடுக்கலாம்,தாய் ART – சிகிச்சை விடாமல் இருக்க வேண்டும்.

11.

பிறந்த குழந்தை தாய்பால் குறைவாக குடிப்பதற்கு காரணம்

a)

குழந்தைக்கும் தாயின் மார்பகத்திற்கும் இடையில் உள்ள தவறான இணைப்பு.

b)

தேவையான வலிமையுடன் தாய்பால் குடிக்க இயலாததால்

c)

நோயின் போது குறைவாக அல்லது தாய்பால் அருந்துவது குறைக்கப்படுகிறது

d)

மேற்கூறிய அனைத்தும் சரி

12.

தாய் தாய்பால் கொடுப்பதில் உள்ள சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சில மார்பக தொடர்பான பிரச்சனைகள்.

a)

மார்பகத்தில் பால் குறைவாக இருப்பது

b)

மார்பக பால்கட்டி ,முலைக்காம்புகளில் புண்

c)

மேற்கூறிய அனைத்தும் சரி

d)

மேற்கூறிய அனைத்தும் தவறு

13.

குழந்தை பிறந்த உடன் தாய்பால் வழங்கப்படுவதை _______________ மூலம் உறுதி செய்யலாம்.

a)

தொலைபேசி வாயிலாக

b)

வீடுகள் பார்வையின் மூலம்

c)

அருகில் உள்ளவர்களை விசாரிக்கலாம்

d)

அனைத்தும் சரி

14.

கங்காரு முறை கவனிப்பு என்றால் என்ன?

a)

தொட்டியில் கட்டி தூங்க வைப்பது

b)

அடிக்கடி தாய் பால் கொடுக்கும் முறை

c)

தாய் குழந்தையை உடலோடு சேர்த்து கதகதப்பாக வைத்துகொள்ளும் முறை

d)

மேற்கூறிய அனைத்தும் சரி

15.

குழந்தைக்கு எவ்வளவு கால நேரத்திற்கு ஒருமுறை பால் புகட்ட வேண்டும்?

a)

1 நாளுக்கு ஒரு முறை

b)

ஒரு நாளுக்கு 3 முறை

c)

விழித்துகொண்டு இருக்கும் போது

d)

1 அல்லது 2 மணிநேரத்திற்கு ஒரு முறை

16.

6 மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு தாய்பால் தவிர குழந்தைக்கு என்னவெல்லாம் கொடுக்கலாம்?

a)

தேன் கொடுப்பது ஆரோக்கியமானது

b)

மாட்டுப்பால் கொடுக்கலாம்

c)

தண்ணீர் கொடுக்கலாம்

d)

தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்

17.

பலவீனமாக பிறந்த குழந்தை சரியாக பாலை உறிஞ்சி குடிக்க முடியவில்லை எனில் என்ன செய்யலாம்

a)

தாயின் பாலை தூய்மையான பாத்திரத்தில் சேகரித்து கொடுக்கலாம்

b)

புட்டிபால் கொடுக்கலாம்

c)

தண்ணீர் கொடுக்கலாம்

d)

அனைத்தும் சரி

18.

தாய்பால் கொடுக்கும் சமயத்தில், மார்பகம் கடினமாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்

a)

வெதுவெதுப்பான டவலை மார்பகங்கள் மீது வைக்கலாம்

b)

சூடான தண்ணீரை மார்பங்கள் மீது ஊற்றலாம்

c)

குளிர்ந்த நீரில் காட்டலாம்

d)

அனைத்தும் சரி

19.

தாய் பால் ஊட்டும்போது தாய்க்கு ஏற்படும் வலிக்கு காரணம்?

a)

தாய்பால் கட்டுவது

b)

குழந்தை அதிக அளவு பால் குடிப்பது

c)

பால் வற்றுவது

d)

அனைத்தும் சரி

20.

தாய்பால் ஊட்டுவதில் தாயானவள் ஒரு பிரச்சனையை சந்தித்தால் என்ன செய்ய வேண்டும்.

a)

வீட்டில் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்கவும்

b)

பிரச்சனையை கண்டுகொள்ளாமல் இருக்கலாம்

c)

பிரச்சனைக்காண காரணத்தை கண்டு பிடிக்கவும்,

d)

வலியை பொருத்த்து கொள்ள சொல்லவும்

21.

எத்தனை மணி நேரத்திற்கு சேகரிக்க தாய்பால் மீண்டும் பயன்படுத்தலாம்?

a)

6 மணி நேரம்

b)

8 மணி நேரம்

c)

5 மணி நேரம்

d)

12 மணி நேரம்

22.

கங்காரு பராமரிப்பு பொருள்

a)

குழந்தையை ஒரு போர்வைக்குள் சுற்றி வைப்பதன் மூலம் குழந்தையை கதகதப்பாக வைத்திருங்கள்

b)

தாயின் உடல் சூட்டில் குழந்தையை கவனித்துக் கொள்ளலாம்.

c)

வீட்டில் அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்

d)

மேல் கூறிய அனைத்தும்

23.

நீங்கள் தாய்ப்பால் ஊட்டும் பல பலகீனமான குழந்தைகளை கவனித்துக் கொள்ள என்ன பரிந்துரைக்க வேண்டும்?

a)

வீட்டில் அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்

b)

மிகவும் பலகீனமான குழந்தைகளுக்கு மருத்துவரின் மேற்பார்வை தேவை என்பதால் அவர்கள் மருத்துவமனையில் சேர வேண்டும்.

c)

குழந்தையை உற்சாகமா வைத்து கொள்ள வேண்டும்

d)

குழந்தையின் தாய் ஆரோக்யமாக இருக்க வேண்டும்

24.

புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை எப்போதும் வெதுவெதுப்பாக ஏன் இருக்க வேண்டும்?

a)

குழந்தையின் உடல் மிகுந்த உற்சாகத்தை இழக்கிறது.

b)

குழந்தையின் உடல் வேகமாக வளர்ந்து கொண்டே போகிறது.

c)

குழந்தை எப்போதும் உறங்கி கொன்டே இருக்கும்.

d)

குழந்தை எப்போதும் அழுது கொன்டே இருக்கும்.

25.

பலகீனமான குழந்தையை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது?

a)

அடிக்கடி வீடுகள் பார்வை மூலம்

b)

குழந்தையின் பெற்றோர்களே தானாக வந்து கூறுவதன் மூலம்

c)

உறவினர்கள் கூறுவதன் மூலம்

d)

அருகில் உள்ளவர்கள் கூறுவதன் மூலம்

26.

உங்கள் பக்கத்து வீட்டில் ஒரு பலகீனமான பச்சிளம் குழந்தை பிறக்கிறது என்று நீங்கள் அறிந்தால் என்ன செய்வீர்கள்?

a)

அந்த குழந்தையை பார்க்க அக்குழந்தையின் வீட்டிற்கு செல்லுதல்

b)

அடிக்கடி வீட்டில் வருகைதர மற்றும் கங்காரு தாய் பராமரிப்பு பற்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்

c)

தங்களுக்கு தெரிந்த மருத்துவ குறிப்புகளை கூறுவது

d)

மேல் கூறிய அனைத்தும்

27.

இது உறுதி செய்வது உங்கள் பொறுப்பு

a)

ஓரளவிற்கு பலகீனமான பச்சிளம் குழந்தைகளை கவனித்துக் கொள்வதை பற்றி நீங்கள் குடும்பத்திற்கு சொல்கிறீர்கள்.

b)

அவர்கள் ஆபத்து இல்லாதிருந்தால் பலகீனமான பச்சிளம் குழந்தைகளை காண நீங்கள் வீட்டுக்கு செல்கிறீர்கள்

c)

ஆரோக்ய குழந்தையை மருத்துவ பரிந்துரை செய்வது

d)

பழகினமான குழந்தையை தங்கள் இடத்திற்கு வரவழைப்பது

28.

பின் வருபவர்களில் யார் குழந்தைக்கு கங்காரு கவனிப்பை கொடுக்க முடியும்

a)

அம்மா

b)

அப்பா

c)

அத்தை

d)

குடும்பத்தின் எந்த உறுப்பினரும்.

29.

கங்காரு தாய் பராமரிப்பு எவ்வளவு காலம் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்?

a)

தாய் விரும்பும் வரை

b)

குழந்தைகள் 2.5 கிலோ எடை கூடும் வரை

c)

குழந்தை நன்றாக விளையாடும் வரை

d)

குழந்தை உறங்கும் வரை

30.

சேகரிக்க பட்ட பாலை 2-பாலை 2-3 மணி நேரத்திற்கு பிறகும் குடிக்க வில்லை எனில் என்ன செய்ய வேண்டும்

a)

கண்டிப்பாக பால் கொடுக்க சொல்லவும்

b)

6 மணிநேரம் பிறகு முயற்சிக்கவும்

c)

ANM உதவுயுடன் SNCU-க்கு பரிந்துரைக்கவும்

d)

அனைத்தும் தவறு