WorksheetsGrade 06 Tamil by Fathima Shakeeka
Total questions: 50
Worksheet time: 13hrs 30mins
"ஏழை மக்கள் அனைவரும் வியப்பு அடைந்தனர்" எனும் தொடரில் வரும் வியப்பு என்பதன் ஒத்தகருத்துச் சொல்,
பெருமிதம்
கோபம்
ஆச்சரியம்
அகங்காரம்
"இராமன் வீரம் மிக்க செயல்களைச் செய்வதில் வல்லவன்"எனும் தொடரில் இடம்பெறும் வீரம் என்பதன் ஒத்தகருத்துச் சொல்
மறம்
அறம்
தருமம்
சண்டை
"ஈஃபண்டி ஏழை மக்களின் துன்பத்தினைத் தீர்த்து வைத்தான்"இத்தொடரில் இடம்பெறும் துன்பம் என்பதன் எதிர்க்கருத்துச் சொல்,
இடர்
இன்பம்
இன்னல்
சோகம்
"தன் நிலங்களில் அவர்களை அடிமை போல் வேலை வாங்கினான்"இங்கு அடிமை என்பதன் எதிர்க்கருத்துச் சொல்,
ஆண்டான்
ஆட்சியாளன்
அரசன்
நீதிபதி
எருது முக்காரமிடும் என்பது போல புறா,
கீச்சிடும்
சொல்லும்
அலப்பும்
குறுகுறுக்கும்
கிரந்த எழுத்துக்களை உள்ளடக்கிய தொகுதி,
அ , ஆ , இ
அ , இ , உ
ஹ , ஜ , ஷ
க் , ச் , ட்
தமிழ் நெடுங்கணக்கிலுள்ள உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை,
247
30
216
96
அறம் செய்ய விரும்பு என்றார் ஔவைப் பிராட்டியார்
இத்தொடரில் இடம்பெற வேண்டிய நிறுத்தற்குறிகள் முறையே,
அரைப்புள்ளி, முற்றுப்புள்ளி
அடைப்புக்குறி, முற்றுப்புள்ளி
மேற்கோட்குறி, முற்றுப்புள்ளி
முற்றுப்புள்ளி, வியப்புக்குறி
வாக்கியத்தில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் போது இடப்படும் குறியீடு,
அடைப்புக்குறி
வியப்புக்குறி
வினாக்குறி
மேற்கோட்குறி
60ஆவது ஆண்டு நிறைவில் கொண்டாடப்படும் விழா,
பவளவிழா
வைரவிழா
அமுதவிழா
வெள்ளிவிழா
கொப்பு, மூங்கில், சுற்றம் என்ற பல பொருள் குறிக்கும் ஒரு சொல்,
கிளை
வகுப்பு
கூட்டம்
பிரிவு
முதன் முதலில் பார்க்கும் ஒத்திகையை எவ்வாறு அழைப்பர்?
வெள்ளோட்டம்
வெள்ளுடுப்பு
அலங்காரம்
அரங்கேற்றம்
பின்வருவனவற்றில் முச்சுடராக அமைவது,
சூரியன், சந்திரன், நட்சத்திரம்
இயல், இசை, நாடகம்
சூரியன், சந்திரன், அக்கினி
தாய், தந்தை, குரு
பருந்து உயர உயரப் பறந்தது. இத்தொடரில் இடம்பெற்றுள்ள உயர உயர என்ற சொல்,
இரட்டைக்கிளவி
இணைமொழி
அடுக்குத்தொடர்
அடுக்கிடுக்குத்தொடர்
பேசப்படும் பொருளைச் சுட்டும் பெயர்,
தன்மை
முன்னிலை
படர்க்கை
பன்மை
மாணவர்கள் பாடசாலைக்குச் சென்று பாடத்தைப் படித்தனர். இவ்வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள செயப்படுபொருள்,
மாணவர்கள்
பாடத்தை
பாடசாலை
படித்தனர்
பெற்றோர் கலை விழாவை இரசித்துப் பார்த்தனர். இங்கு இடம்பெற்றுள்ள பயனிலை அடைமொழி
பார்த்தனர்
இரசித்துப்
பெற்றோர்
கலைவிழா
இருபாற் பொதுப் பெயராக அமைவது,
வைத்தியன்
ஆசிரியை
கவிஞன்
நோயாளி
அகதிகள் உண்ண உணவு, உடுக்க உடை இன்றித்........................
தத்தளித்தனர்
தவித்தனர்
திக்குமுக்காடினர்
தடுமாறினர்
விடாமுயற்சியை உணர்த்தும் பழமொழி,
ஆனைக்கும் அடி சறுக்கும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்
தற்பெருமை தனக்கே கேடு
கூட்டம் பிற்பகல் இரண்டு மணிக்குத் தொடங்கியது. பிற்பகல் என்பதன் எதிர்ச்சொல்,
காலை
நண்பகல்
மாலை
முற்பகல்
கலையும் பிணையும் இணையாகச் செல்கின்றன. பிணை என்ற சொல் குறிக்கும் விலங்கு,
பெண் யானை
ஆண் யானை
பெண்மான்
பிடி
வாழையின் பிஞ்சைக் கச்சல் என்பது போல மாவின் பிஞ்சு
களை
வடு
குலை
கொத்து
ஆசிரியரின் ஆலோசனைக்கு இணங்கச் செயற்படுங்கள். இங்கு 'ஆ' என்பது,
குறில்
உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும்
நெடில்
மெய்யெழுத்து
பின்வருவனவற்றுள் அஃறிணைச் சொல் அல்லாதது
பந்து
குருவிகள்
புலவர்
கூடை
வெள்ளைப் பூனை நீண்ட வாலை ஆட்டியது. இதிலுள்ள எழுவாய்
வால்
பூனை
ஆட்டியது
ஆட்டும்
பின்வருவனவற்றுள் இரட்டைக்கிளவி அல்லாதது
அடிதடி
சிடுசிடு
கிசுகிசு
நெருநெரு
பின்வருவனவற்றுள் பன்மையை உணர்த்தும் சொல்
ஆடு
மரம்
மக்கள்
மண்வெட்டி
மாணவர்கள் ஆசிரியர்களோடு சுற்றுலா.................
சென்றார்
சென்றது
சென்றனர்
சென்றீர்கள்
நான் வீட்டில் நிண்டதால் வகுப்பறை வேலையில் ஈடுபடவில்லை. இதில் 'நிண்டதால்' என்ற சொல்லின் சரியான வடிவம்
நின்றதால்
நிண்டு
நின்றதாலை
நிண்றதால்
ஒரு தொடரில் யார், எது, எவை, யாவர் என்னும் வினாக்களுக்கு விடையாய் வரும் சொல்லே … (a) … (1 எழுவாய் / 2 பயனிலை)
எழுவாய் எப்போதும் பெயர்ச் சொல்லாகவே (a) (1 இருக்காது / 2 இருக்கும்)
ஒரு தொடரில் யாரை,எதனை, எவற்றை, எங்கு எனும் வினாக்களுக்கு விடையாக வரும் சொல்லே (a) (1 செயப்படுபொருள் / 2 எழுவாய்)
ஒரு தொடரில் அமைந்துள்ள வினைமுற்றையே (a) (1 அடைமொழி / 2 பயனிலை)
அடாது செய்பவர் (a) படுவர் (1 விடாது / 2 படாது)
மெய்யெழுத்துக்களை (a) ஆகப் பிரிக்கலாம்.( 1 மூன்று வகை / 2 நான்கு வகை )
ஒரு வாக்கியத்தில் ஒரு எழுவாயும் ஒரு பயனிலையும் காணப்படுமாயின் அது (a) ஆகும். ( 1 கூட்டுவாக்கியம் / 2 தனி வாக்கியம்)
கிளியின் (a) வளைந்து உறுதியாய் இருக்கும்.(1 அலகு / 2 அளகு)
ஒரு வாக்கியத்தின் வினைச் சொல்லின் செயற்பாட்டிற்கு உட்படும் பெயர்ச்சொல் (a) ( 1 செயப்படுபொருள் / 2 எழுவாய்)
ஒரு வாக்கியம் வினா வாக்கியமாக அமையும் போது அதற்கு இறுதியில் (a) இடல் வேண்டும். ( 1 காற்புள்ளி / 2 வினாக்குறி)
'எலியும் சேவலும்' என்ற பாடலை (a) எழுதினார்.(1 நவாலியூர் சோமசுந்தர புலவர் / 2 வித்துவான் க. வேந்தனார்)
உயிர் எழுத்துக்களினை (a) என வகைப்படுத்தலாம். ( 1 வல்லினம், மெல்லினம் / 2 குறில் , நெடில்)
மெய் எழுத்துக்கள் (a) ஆகும். (1 பதினெட்டு / 2 பன்னிரண்டு)
பெண் குரங்கை (a) என அழைப்பர். (1 கடுவன் / 2 மந்தி)
ஒன்றின் பெயரைக் குறிக்கும் சொல் (a) எனப்படும். (1 வினைச்சொல் / 2 பெயர்ச்சொல்)
கடிதம் என்ற சொல்லுக்குரிய ஒத்தகருத்துச் சொல் (a) ஆகும். (1 புத்தகம் / 2 மடல்)
முதன்முதலில் பார்க்கும் ஒத்திகை (a) என அழைக்கப்படும். (1 வெள்ளுடுப்பு / 2 ஒப்பனை)
சொற்களை தனித்தனியாகவோ அடுக்கடுக்காகவோ பிரிக்கும் போது (a) பயன்படும். (1 வியப்புக்குறி / 2 காற்புள்ளி)
கடவுள் நம்பிக்கை உள்ளவன் (a) என அழைக்கப்படுவர். (1 நாத்திகன் / 2 ஆத்திகன்)
மாணவர்கள் தங்கியிருந்து படிக்கும் இடம் (a) என அழைக்கப்படும். (1 விடுதி / 2 கல்லூரி)
