Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஆண்டு 1 & 2

Total questions: 40

Worksheet time: 40mins

Name
Class
Date
1.

பின்வரும் ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளைத் தெர்ந்தெடுக.

உடையது விளம்பேல்

a)

கோபம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

b)

பிறருக்குச் செய்யப்படும் உதவியைத் தடுக்கக் கூடாது.

c)

நம்மிடம் உள்ள செல்வம் அல்லது கல்வியைப் பற்றிப் பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.

d)

உலக நடைமுறை அறிந்து அதன்படி நடந்து கொள்ள வேண்டும்.

2.

பின்வரும் ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளைத் தெர்ந்தெடுக.

ஐய மிட்டுண்

a)

பசியென வந்தவருக்கு உணவிட்ட பின்னரே உண்ண வேண்டும்.

b)

உழைப்பின்றி பிறர் கொடுப்பதை ஏற்றுக்கொள்வது இழிவான செயலாகும்.

c)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.

d)

முயற்சியை விட்டு விடக்கூடாது.

3.

பின்வரும் கொன்றை வேந்தனில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.

எண்ணும் எழுத்தும் …………………….. தகும்

a)

கண்ணுக்குத்

b)

கண்ணெனத்

c)

கண்ணைத்

d)

கண்களுக்குத்

4.

பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவுச் செய்க.

பிச்சையெடுக்கும் அளவுக்கு வறுமை ஏற்பட்டாலும் செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்ய வேண்டும்.

a)

ஏவா மக்கள் மூவா மருந்து

b)

ஐயம் புகினும் செய்வன செய்

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

d)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

5.

கீழ்க்காணும் திருக்குறளின் இரண்டாம் அடியை நிறைவு செய்க.

இனிய உளவாக இன்னாத கூறல்

………………………….

a)

பகவன் முதற்றே உலகு

b)

நிற்க அதற்குத் தக

c)

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று

6.

கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

அங்கும் இங்கும்

b)

ஆடல் பாடல்

c)

எழும்பும் தோலும்

7.

கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

குடு குடு

b)

திரு திரு

c)

தர தர

8.

கிழே உள்ளவற்றுள் பிழையான பொருளைக் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

கண்ணும் கருத்தும் – முழு கவனுத்துடன்

b)

ஒற்றைக் காலில் நிற்றல் – தான் வாழும் சூழலுக்கு அப்பால் இருப்பது / எதையும் அறியாதவன்

c)

செவி சாய்த்தல் – உடன் படுதல்

d)

நாக்கு நீளுதல் – வரம்பு மீறிப் பேடுதல்

9.

பின்வரும் பழமொழியில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.

முயற்சியுடையோர் …………………………..

a)

இகழ்வார்

b)

இகழ்ச்சியடையார்

c)

இகழ்ந்தார்

d)

இகழ்ச்சியடைந்தார்

10.

பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

இளவயதினர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு செயலில் துணிந்து இறங்கி விடுவர்.

a)

இளங்கன்று பயம் அறியாது

b)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

c)

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்

11.

தவறான பொருளைக் கொண்டுள்ள ஆத்திசூடியைத் தெரிவு செய்க.

a)

ஆண்மை தவறேல் – எப்பொழுதும் வீரத்துடன் இருக்க வேண்டும்

b)

இளைத்தல் இகழ்ச்சி – துடிப்புடன் இல்லாது சோர்வடைந்திருப்பது இழிவாகும்

c)

ஊண்மிக விரும்பு – உடலுக்கு நலத்தைத் தருகின்ற உணவுகளை விரும்பி உண்ண வேண்டும்

d)

ஐம்பொறி ஆட்சிகொள் – அஞ்சா நெஞ்சாத்துடன் செயற்பட வேண்டும்

12.

சூழலுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

மாமா : மாதவா, வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்றிட எந்தவொரு காரியத்தில் விடாமுயற்சி தேவை.

மாதவா : நிச்சயமாக மாமா. விடாமுயற்சியுடன் செயல்பட்டு நான் வாழ்க்கையில் வெற்றியடைவேன்.

a)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

b)

ஐயம் புகினும் செய்வன செய்

c)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

d)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

13.

பின்வரும் கொன்றை வேந்தனில் விடுப்பட்ட சொற்றொடரைத் தெரிவு செய்க.

……………………………….. மூவா மருந்து

a)

ஏவா மக்கள்

b)

எண்ணும் எழுத்தும்

c)

ஆலயம் தொழுவது

d)

ஏவா உணவு

14.

திருக்குறளுக்கு ஏற்ற சரியான பொருளைத் தெரிவு செய்க.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையவர் கல்லா தவர்

a)

கற்றவர்கள் கண்ணுடையவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படும்.

b)

கற்றவர்கள் புண்ணுடையவர்கள் எனச் சொல்லத் தகுதியுடையவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது கண்கள் எனக் கருதப்படும்.

c)

கற்றவர்கள் கண்ணுடையவர்கள் எனச் சொல்லத் தகுதியற்றவர்கள். கல்லாதவர்கள் முகத்தில் இருப்பது புண்கள் எனக் கருதப்படும்.

15.

கீழ்க்காணும் திருக்குறளின் இரண்டாம் அடியை நிறைவு செய்க.

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்

…………………………………….

a)

நற்றாள் தொழாஅர் எனின்

b)

நாவினாற் சுட்ட வடு

c)

உயிரினும் ஒம்பப் படும்

d)

அன்றே மறப்பது நன்று

16.

கீழே உள்ளவற்றுள் பிழையான பொருளைக் கொண்ட இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

அல்லும் பகலும் - இரவும் பகலும் / எப்பொழுதும்

b)

தாயும் சேயும் – அன்னையும் குழந்தையும்

c)

நன்மை தீமை – நாலாப் பக்கம்

d)

எலும்பும் தோலுமாய் – மிகவும் மெலிந்து

17.

கீழ்க்காணும் படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.

a)

கல கல

b)

கிலு கிலு

c)

சல சல

d)

குடு குடு

18.

கீழ்க்காணும் சூழலுக்குப் பொருந்தும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

அகிலன் தனது தேர்வில் அனைத்துப் பாடங்களில் ஏக்களைப் பெறுவதற்கு, …………….. ஆக பயின்றான்.

a)

முழு மூச்சு

b)

ஓட்டை வாய்

c)

அவசரக் குடுக்கை

d)

தெள்ளத் தெளிதல்

19.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

அப்பா : இரகு பள்ளியிலிருந்து கொண்டு வரும் மீதப் பணத்தை அன்றாடம் உனது உண்டியலில் சேர்த்து வை. அதுவே நாளடைவில் பெரியத் தொகையாகும்.

இரகு : சரி அப்பா. அப்படியே செய்கிறேன்.

a)

அன்பான நண்பனை ஆபத்தில் அறி

b)

சிறு துளி பெரு வெள்ளம்

c)

இளமைக் கல்வி சிலையில் எழுத்து

20.

பின்வரும் பழமொழியில் விடுப்பட்ட சொல்லைத் தெரிவு செய்க.

…………………….. பயிர் முளையிலே தெரியும்.

a)

விளையும்

b)

விளையா

c)

விளைந்த

21.

உயிர் குறில் எழுத்துகள் யாவை ?

a)

அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ

b)

அ,இ,உ,எ,ஒ

c)

ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ

d)

அ,இ,உ,எ,ஐ,ஒ,ஔ

22.

உயிர்மெய் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை என்ன?

a)

217

b)

216

c)

12

d)

18

23.

பின்வரும் படம் காட்டும் பால் வகை யாது?

a)

பலவின்பால்

b)

பலர்பால்

c)

ஆண்பால்

d)

பெண்பால்

24.

கீழ்க்காணும் வாக்கியம் காட்டும் காலத்தைத் தெரிவு செய்க.

மதன் வீட்டைக் கட்டினார்.

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

25.

பின்வருவனவற்றுள் எஃது இரட்டிப்பு எழுத்துக் கொண்டுள்ளது?

a)

பம்பரம்

b)

பக்கம்

c)

வண்டல்

d)

சொந்தம்

26.

பின்வருவனவற்றுள் எது ஒரே பொருள் தரும் சரியான இணை?

a)

நூல் – புத்தகம்

b)

ஆதவன் – நிலா

c)

பணம் – உடல்

d)

மிருகம் – மனிதன்

27.

கீழ்க்காணும் வாக்கியங்களில் கட்டளை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

வரிசையில் நில்!

b)

நாட்டில் புகைமூட்டம் பெரும் சிக்கலாக உள்ளது.

c)

தயவு செய்து சுவரில் கிறுக்காதீர்!

d)

எப்பொழுது தேர்வு நடைபெறும்?

28.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் வேண்டுகோள் வாக்கியம் எது?

a)

தயவு செய்து பென்சிலைத் தாருங்கள்.

b)

உன் பெயர் என்ன?

c)

நேற்று மழை பெய்தது.

d)

நான் கடைக்குச் சென்றேன்.

29.

கொடுக்கப்பட்ட சொற்களில் அஃறிணையைக் குறிக்கும் சொல் எது?

a)

தேவர்

b)

அகிலன்

c)

யானை

d)

இறைவன்

30.

கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுக.

விண்வெளி வீரர்கள் பயிற்சியில் ………………………

a)

ஈடுப்பட்டனர்

b)

ஈடுப்பட்டது

c)

ஈடுபடும்

31.

கொடுக்கப்பட்ட எழுத்துகள் எவ்வகை எழுத்துகளாகும்?

அ,இ,உ

a)

வினாவெழுத்து

b)

சுட்டெழுத்து

c)

இனவெழுத்து

32.

கொடுக்கப்பட்ட சொல்லில் எவ்வகை வினாவெழுத்து மறைந்துள்ளது?

சரிதானே?

a)

ஒ

b)

எ

c)

ஏ

d)

ஆ

33.

சரியான ஒருமை பன்மை இணையைத் தேர்ந்தெடுக.

a)

வாரம் – வாரம்கள்

b)

கிண்ணம் – கிண்ணங்கள்

c)

கல் – கட்கள்

d)

பல் – பல்கள்

34.

சரியான காலத்தைக் காட்டும் வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

இறந்தகாலம் – அமுதன் கோவிலுக்குச் செல்வான்.

b)

நிகழ்காலம் – செல்வி கதை வாசிக்கிறாள்.

c)

எதிர்காலம் – அம்மா மதிய உணவு சமைப்பார்.

35.

நெடிய வகையுடைய சொல்லைத் தெரிவு செய்க.

a)

ஐந்து

b)

அணில்

c)

எருமை

d)

கடல்

36.

கொடுக்கப்பட்டவற்றுள் எது தவறான இணை?

a)

படித்தேன் – தன்மை

b)

சென்றான் – முன்னிலை

c)

படித்தார் – படர்க்கை

37.

சரியான எழுத்துக்கூட்டு கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.

a)

தெண்றல்

b)

தென்ரல்

c)

தென்றல்

38.

தவறான வினைமுற்றைக் காட்டும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மாதவி நடனம் ஆடினார்கள்.

b)

குயில் கூவுகிறது.

c)

மீனவர்கள் மீன்களைப் பிடித்தார்கள்.

d)

மாடுகள் புல் மேய்ந்தன.

39.

வாக்கியத்திற்கு ஏற்ற சரியான வினைமுற்றைத் தெரிவு செய்க.

குமுதா கடைக்குச் ……………………..

a)

சென்றாள்

b)

சென்றார்கள்

c)

சென்று

d)

சென்றான்

40.

சரியான சொற்றொடரைத் தேர்ந்தெடுக.

a)

ஓர் எலி

b)

ஒரு எரும்பு

c)

ஓர் வாகனம்

d)

ஒரு உரல்