NEW
Font size
Worksheetsமரபுத்தொடர்
Total questions: 15
Worksheet time: 8mins
திலகா தவறுதலாக கீழே விழுந்ததை ராமன் மிகைப்படுத்தி ஆசிரியரிடம் கூறியது திலகாவிற்குக் கோபம் ஏற்பட்டது. ராமனின் இச்செயல் எந்த மரபுத்தொடருக்குப் பொருந்தி வருகிறது?
அள்ளி விடுதல்
அள்ளி இறைத்தல்
ஆறப் போடுதல்
சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.
தாமரை தன் முதல் சம்பளத்தைக் கொண்டு தேவையற்ற பொருள்களை வாங்கினாள். தேவைக்கு அதிகமான ஆடை ஆபரணங்களை வாங்கினாள். பின் எஞ்சிய நாள்களுக்குப் போதுமான பணம் இல்லாததால் வருத்தப்பட்டாள்
அள்ளி இறைத்தல்
அரக்கப் பரக்க
கம்பி நீட்டுதல்
கீழ்காணும் சூழல்களில் எது அள்ளி இறைத்தல் என்ற மரபுத்தொடருக்குப் பொருந்தி வரவில்லை?
குமரன் கோழிகளுக்குத் தீனியை அள்ளி இறைத்ததால் அவனது அப்பா அவனைக் கண்டித்தார்.
மாலா தேவையற்றப் பொருள்களை வாங்கி பணத்தை அள்ளி இறைத்ததால் இன்று சிரமப்படுகிறாள்.
குவளையைத் தம்பி தான் உடைத்ததாக தீபன் அம்மாவிடம் அள்ளி இறைத்தான்.
ராதா குமரனின் புத்தகத்தைத் திருடிவெட்டு அள்ளி இறைத்ததால் ஆசிரியர் அவளுக்குத் தண்டனை வழங்கினார்.
சரி
தவறு
அள்ளி விடுதல் என்பதின் பொருள் என்ன?
பிறருடைய கவனத்திலிருந்து தப்பித்துப் போய்விடுதல்
பொருட்களை எடுத்து கீழே இறைத்தல்
அளவுக்கு மேல் செலவழித்தல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்
படம் உணர்த்தும் மரபுத்தொடர் எது?
கண்ணும் கருத்தும்
அள்ளி இறைத்தல்
அள்ளி விடுதல்
செவி சாய்த்தல்
சரியான பொருளைத் தெரிவு செய்க.
ஏட்டுச் சுரைகாய்
சமைக்க உதவும்
மொரு செயலைக் காலந்தாழ்த்திச் செய்தல்
நடைமுறைக்குப் பயன் படாத அறிவு
சம்பளப் பணத்தைக் கொடுக்காது காலந்தாழ்த்திய முதலாளியின் மீது தொழிலாளிகள் கோபமுற்றனர்.
ஆறப் போடுதல்
அரக்க பரக்க
அள்ளி இறைத்தல்
செல்வனுக்கு வாகனங்களைப் பற்றி அனுபவக்கல்வி இல்லை. தான் பணிபுரியும் பட்டறையில் பழுதடைந்த வாகனங்களைச் சீர்ச் செய்ய,அவன் கற்ற கல்வி உதவவில்லை.
கம்பி நீட்டுதல்
ஏட்டுச் சுரைக்காய்
ஆறப் போடுதல்
ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல் என்ற பொருளின் மரபுத்தொடர் யாது?
அள்ளி விடுதல்
அள்ளி இறைத்தல்
சரியான விளக்கத்துடன் கொண்ட மரபுத்தொடரைத் தெரிவு செய்க.
A.அவசரக் குடுக்கை - ஒன்றை மிகைப்படுத்திக் கூறுதல்.
B.அரக்க பரக்க - அவசரமும் பதற்றமும்
C.வாரி இறைத்தல் - அளவுக்கு மேல் செலவு செய்தல்.
D.அள்ளி இறைத்தல் - விரயம் செய்தல்
இராஜா இரவு முழுவதும் தொலைக்காட்சியில் நேரம் செலவழித்துக் காலையில் தாமதமாக எழுந்ததால் ........................... தயாராகி வேலைக்குச் சென்றான்.
நாக்கு நீளுதல்
அரக்க பரக்க
அள்ளி இறைத்தல்
எடுப்பார் கைப்பிள்ளை
படத்திற்குப் பொருத்தமாகும் மரபுத்தொடர் எது?
கறிக்கு உதவாது
எட்டுச் சுரைக்காய்
எடு சுரைக்காய்
ஏட்டுச் சுரக்காய்
தன் பெற்றோர்கள் வசதி படைத்தவர்கள் என்பதற்காக கார்முகிலன் தனது கைச்செலவுக்குக் கிடைக்கும் பணத்தை _______________
அள்ளி விட்டான்
ஆறப் போட்டான்
செலவழிகவில்லை
அள்ளி இறைத்தான்
மாணவர்களாகிய நீங்கள் ஒரு காரியத்தைக் காலந்தாழ்த்திச் செய்தல் நன்மை பயக்காது. மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற மரபுத்தொடர் யாது?
காலம் பொன்னானது
கம்பி நீட்டுதல்
அள்ளி விடுதல்
ஆறப் போடுதல்
