wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

+2 கணக்குப்பதிவியல் (அலகு-01 - 05)

Total questions: 45

Worksheet time: 23mins

Name
Class
Date
1.

முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது

a)

நிறுமம்

b)

அரசு

c)

சிறிய அளவிலான தனி ஆள் வணிகம்

d)

பன்னாட்டு நிறுவனங்கள்

2.

நிலை அறிக்கை ஒரு

a)

வருமானம் மற்றும் செலவுகள் அறிக்கை

b)

சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை

c)

ரொக்க நடவடிக்கையின் தொகுப்பு

d)

கடன் நடவடிக்கைகளி ன் தொகுப்பு

3.

பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துக்கள்

a)

நட்டம்

b)

ரொக்கம்

c)

முதல்

d)

இலாபம்

4.

தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது

a)

தொடக்க முதல் கண்டறிய

b)

இறுதி முதல் கண்டறிய

c)

அவ்வாண்டின் இலாபம் கண்டறிய

d)

அவ்வாண்டின் நட்டம் கண்டறிய

5.

முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?

a)

இது நடவடிக்கைகளை பதிவு செய்யும் அறிவியல் தன்மையற்ற முறை

b)

ரொக்கம் மற்றும் ஆள்சார் கணக்குகளுக்கு மட்டும் ஏடுகள் பராமரிக்கப்படுகிறது

c)

இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்

d)

வரி அதிகாரிகள் ஏற்றுக் கொள்வதில்லை

6.

கடனாளிகள் தொடக்க இருப்பு ரூ.30000, பெற்ற ரொக்கம் ரூ.100000, கடன் விற்பனை ரூ.90000,கடனாளிகள் இறுதி இருப்பு?

a)

ரூ.30000

b)

ரூ.130000

c)

ரூ.40000

d)

ரூ.20000

7.

கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது

a)

மொத்தக் கடனாளிகள் கணக்கு

b)

மொத்தக் கடனீந்தோர் கணக்கு

c)

பெறுவதற்குறிய மாற்றுச்சீட்டு கணக்கு

d)

செலுத்தற்குறிய மாற்றுச்சீட்டு கணக்கு

8.

உரிமையாளரின் சொத்துகள் ரூ.85000 மற்றும் பொறுப்புகள் ரூ.21000 எனில் அவருடைய முதல் தொகை

a)

ரூ.106000

b)

ரூ.85000

c)

ரூ.21000

d)

ரூ.64000

9.

தொடக்க முதல் ரூ.10000 ,அவ்வாண்டின் எடுப்புகள் ரூ.6000, அவ்வாண்டின் இலாபம் ரூ.2000 மற்றும் கொண்டுவந்த கூடுதல் முதல் ரூ.3000 எனில் இறுதி முதல் காணவும்.

a)

ரூ.21000

b)

ரூ.11000

c)

ரூ.3000

d)

ரூ.9000

10.

கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

a)

செலுத்தற்குறிய மாற்றுச்சீட்டின் இறுதி இருப்பு

b)

செலுத்தற்குறிய மாற்றுச்சீட்டின் தொடக்க இருப்பு

c)

செலுத்தற்குறிய மாற்றுச்சீட்டுக்கு ரொக்கம் செலுத்தியது

d)

அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குறிய மாற்றுச்சீட்டு

11.

பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கு ஒர்

a)

ஆள்சார் கணக்கு

b)

பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

c)

சொத்து கணக்கு

d)

பெயரளவு கணக்கு

12.

பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கில் பதிவு செய்யப்படும் பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள்

a)

வருவாயினத் தன்மை மட்டும் உடையது

b)

முதலினத் தன்மை மட்டும் உடையது

c)

வருவாயினம் மற்றும் முதலினத் தன்மை உடையது

d)

மேற்கண்ட எதுவும் இல்லை

13.

பெறுதல்கள் மற்றும் செலுத்தல்கள் கணக்கின் இருப்பு காட்டுவது

a)

அந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டம்

b)

அந்த ஆண்டின் மொத்த ரொக்கச் செலுத்தல்கள்

c)

அந்த ஆண்டில் செலவுகளைக் காட்டிலும் மிகுதியான வருமானம்

d)

அந்நாளைய ரொக்க மற்றும் வங்கி இருப்பு

14.

பின்வருவனவற்றில் எது வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் பதியப்படுவதில்லை?

a)

பழைய செய்தித்தாள்கள் விற்றது

b)

செயலாளருக்கு வழங்கிய ஊதியம்

c)

சொத்து விற்பனை மீதான நட்டம்

d)

அறைகலன் விற்ற தொகை

15.

வருவாய் மற்றும் செலவினக கணக்கு தயாரிக்கப்படுவதன் மூலம் கண்டறியப்படுவது

a)

இலாபம் அல்லது நட்டம்

b)

ரொக்கம் மற்றும் வங்கி இருப்பு

c)

நிதிநிலை

d)

உபரி அல்லது பற்றாக்குறை

16.

நடப்பாண்டில் பெறவேண்டிய சந்தா இன்னும் பெறாதது

a)

ஒரு சொத்து

b)

ஒரு பொறுப்பு

c)

ஒரு செலவு

d)

தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று

17.

உயில்கொடை ஒரு

a)

முதலினச் செலவு

b)

முதலின வரவு

c)

வருவாயினச் செலவு

d)

வருவாயின வரவு

18.

ஒரு குறிப்பட்ட நோக்கத்திற்காக பெற்ற நன்கொடை

a)

வருவாயின வரவு

b)

முதலின வரவு

c)

வருவாயினச் செலவு

d)

முதலினச் செலவு

19.

ஒரு மன்றத்தில் உள்ள 500 உறுப்பினர்கள், ஆண்டு சந்தாவாக ₹ 100 செலுத்துகின்றனர் .நடப்பாண்டில் கூடியுள்ள சந்தா இன்னமும் பெறப்படாதது ₹ 200 ; முன்கூட்டிப் பெற்ற சந்தா₹ 300. வருவாய் மற்றும் செலவினக் கணக்கில் காட்டப்படவேண்டிய சந்தா தொகையினைக் கண்டறியவும்.

a)

₹ 50,000

b)

₹ 50,200

c)

₹ 49,900

d)

₹ 49,800

20.

வருவாய் மற்றும் செலவினக் கணக்கு ஒரு

a)

பெயரளவுக் கணக்கு

b)

சொத்து கணக்கு

c)

ஆள்சார் கணக்கு

d)

பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு

21.

கூட்டாண்மை ஒப்பாவணம் இல்லாத நிலையில் நிறுவனத்தின் இலாபம் கூட்டாளிகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்படுவது------------

a)

சமமான விகிதத்தில்

b)

முதல் விகிதத்தில்

c)

இரண்டும் (அ) மற்றும் (ஆ)

d)

மேற்கூறிய எதுவுமில்லை

22.

கூட்டாளிகளிடமிருந்து நிறுவனம் கடன்கள் பெற்றிருந்தால், அக்கடன்களுக்கு இந்திய கூட்டாண்மைச் சட்டம் , 1932-ன் படி வழங்கப்படும் வட்டி வீதம்---------

a)

ஆண்டுக்கு 8 %

b)

ஆண்டுக்கு 12 %

c)

ஆண்டுக்கு 5 %

d)

ஆண்டுக்கு 6 %

23.

கூட்டாளிகளுக்கிடையே கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாத போது முதல் மீது வட்டி-----------------

a)

வழங்கப்படுவதில்லை

b)

வங்கி வீதத்தில் வழங்கப்படும்

c)

ஆண்டுக்கு 5 % வழங்கப்படும்

d)

ஆண்டுக்கு 6 % வழங்கப்படும்

24.

ஒரு கூட்டாளி ஒவ்வொரு மாத நடுவிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது, அந்த எடுப்புகள் மீது கணக்கிடப்படும் வட்டிக்குரிய மாதங்கள் சராசரியாக---------------------

a)

5.5 மாதங்கள்

b)

6 மாதங்கள்

c)

12 மாதங்கள்

d)

6.5 மாதங்கள்

25.

பின்வருவனவற்றில் எது சரியற்ற இணை ?

a)

எடுப்புகள் மீது வட்டி - முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்.

b)

முதல் மீது வட்டி - முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

c)

கடன் மீது வட்டி - முதல் கணக்கில் பற்று வைக்கப்பட வேண்டும்.

d)

இலாபப பகிர்வு - முதல் கணக்கில் வரவு வைக்கப்பட வேண்டும்.

26.

கூட்டாண்மை ஒப்பந்தம் இல்லாதபோது கூட்டாளிகள் பெறத் தகுதியுடையது --------------

a)

சம்பளம்

b)

கழிவு

c)

கடன் மீது வட்டி

d)

முதல் மீது வட்டி

27.

பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்-----------

a)

கூட்டாளிகள் இலாபம் மற்றும் நட்டத்தை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

b)

கூட்டாளிகள் முதல் மீது வட்டி ஆண்டுக்கு 7% அனுமதிக்க வேண்டும்

c)

கூட்டாளிகளுக்கு சம்பளம் அல்லது ஊதியம் அனுமதிக்கப்பட மாட்டாது

d)

கூட்டாளிகளிடமிருந்து பெற்ற கடன் மீதான வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்க வேண்டும்.

28.

எடுப்பு மீது வட்டி, முதல் மீது வட்டி மற்றும் ஊதியம் கழித்தபின் உள்ள இலாபம் ரூ.10,500. கீதா என்ற கூட்டாளி கழிவுக்குப்பின் உள்ள நிகர இலாபத்தில் 5% கழிவு பெற உரியவராயின் கழிவுத் தொகையை கண்டறியவும்.

a)

ரூ. 50

b)

ரூ. 150

c)

ரூ. 550

d)

ரூ. 500

29.

பின்வரும் வாக்கியங்களில் எது சரியானது?

a)

நற்பெயர் ஒரு புலனாகாச் சொத்து

b)

நற்பெயர் ஒரு நடப்புச் சொத்து

c)

நற்பெயர் ஒரு கற்பனைச் சொத்து

d)

நற்பெயரினை வாங்க முடியாது

30.

உயர் இலாபம் பின்வரும் இரண்டிற்கும் இடையேயான வேறுபாடாகும்

a)

பயன்படுத்தப்பட்ட முதல் மற்றும் சராசரி இலாபம்

b)

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்

c)

நடப்பு ஆண்டின் இலாபம் மற்றும் சராசரி இலாபம்

d)

சராசரி இலாபம் மற்றும் சாதாரண இலாபம்

31.

ஒரே வகை நிறுவனங்களின் சராசரி இலாபவிகிதமாக கருதப்படுவது

a)

சராசரி இலாபம்

b)

இவைகளில் ஏதுமில்லை

c)

சாதாரண இலாப விகிதம்

d)

எதிர்நோக்கும் இலாப விகிதம்

32.

கீழ் வருவனவற்றில் எது சரியானது?

a)

உயர் இலாபம் = சராசரி இலாபம் X கொள்முதல் ஆண்டுகள்

b)

உயர் இலாபம் = சராசரி இலாபம் - சாதாரண இலாபம்

c)

உயர் இலாபம் = கூட்டு இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை

d)

உயர் இலாபம் = மொத்த இலாபம் / ஆண்டுகளின் எண்ணிக்கை

33.

சரியற்ற இணையினை அடையாளம் காணவும்

a)

சராசரி இலாப முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் X கொள்முதல் ஆண்டுகளின்

எண்ணிக்கை

b)

உயர் இலாப முறையில் நற்பெயர் = உயர் இலாபம் X கொள்முதல் ஆண்டுகளின்

எண்ணிக்கை

c)

ஆண்டுத்தொகை முறையில் நற்பெயர் = சராசரி இலாபம் X ஆண்டுத்தொகை காரணியின் தற்போதைய மதிப்பு

d)

கூட்டு சராசரி இலாப முறையில் நற்பெயர் = கூட்டு சராசரி இலாபம் X கொள்முதல் ஆண்டுகளின்

எண்ணிக்கை

34.

சராசரி இலாபம் ₹ 25,000 மற்றும் சாதாரண இலாபம் ₹ 15,000 ஆக இருக்கும் போது, உயர் இலாபம்

a)

₹ 25,000

b)

₹ 5,000

c)

₹ 10,000

d)

₹ 15,000

35.

2017-ல் கணக்கேட்டின்படி இலாபம் ₹ 35,000; இலாபத்தில் சேர்ந்துள்ள திரும்பத் திரும்ப நிகழா வருமானம் ₹ 1,000 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஏற்பட்ட அசாதாரண நட்டம் ₹ 2,000 எனில், சரிகட்டப்பட்ட இலாபம்

a)

₹ 36,000

b)

₹ 35,000

c)

₹ 38,000

d)

₹ 34,000

36.

ஒரு வியாபாரத்தின் மொத்த மூலதன மதிப்பு ₹ 1,00,000; சொத்துக்கள் ₹ 1,50,000 மற்றும் பொறுப்புகள் ₹ 80,000. மூலதனமாக்க முறையில் நற்பெயரின் மதிப்பு

a)

₹ 40,000

b)

₹ 70,000

c)

₹ 1,00,000

d)

₹ 30,000

37.

மறுமதிப்பீட்டு கணக்கு ஒரு

a)

சொத்து க/கு

b)

பெயரளவு க/கு

c)

ஆள்சார் க/கு

d)

ஆள்சாரா க/கு

38.

மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு உயர்வது

a)

ஆதாயம்

b)

நட்டம்

c)

செலவு

d)

இவற்றுள் எதுவுமில்லை

39.

மறுமதிப்பீட்டில் சொத்துகளின் மதிப்பு குறைவது

a)

ஆதாயம்

b)

நட்டம்

c)

செலவு

d)

இவற்றுள் எதுவுமில்லை

40.

சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் மறுமதிப்பீடு செய்யும் போது ஏற்படும் இலாபம் அல்லது நட்டம் யாருடைய முதல் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?

a)

பழைய கூட்டாளிகள்

b)

புதிய கூட்டாளி

c)

அனைத்து கூட்டாளிகள்

d)

உள்வரும் கூட்டாளிகள்

41.

கூட்டாளியின் புதிய இலாபப்பகிர்வை விட பழைய இலாபப் பகிர்வு அதிகமாக இருந்தால் அவ்வேறுபாடு அழைக்கப்படுவது

a)

முதல் விகிதம்

b)

தியாக விகிதம்

c)

ஆதாய விகிதம்

d)

இவற்றுள் எதுவுமில்லை

42.

கூட்டாளி சேர்ப்பு தொடர்பாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானதல்ல?

a)

பொதுவாக கூட்டாளிகளின் பரஸ்பர உரிமைகள் மாறும்

b)

முந்தைய ஆண்டுகளின் இலாபம் மற்றும் நட்டங்கள் பழைய கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்

c)

கூட்டாண்மை நிறுவனமானது புதிய ஒப்பந்தத்தின் கீழ் மறு கட்டமைக்கப்படும்

d)

ஏற்கனவே உள்ள ஒப்பந்தமானது முடிவுக்கு கொண்டு வரப்படாது

43.

பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.

a)

மறுமதிப்பீட்டு இலாபம்

b)

பகிர்ந்தளிக்கப்படாத இலாபம்

c)

புதிய கூட்டாளி கொண்டு வந்த நற்பெயர்

d)

முதலீட்டு மாறுபடும் நிதி

44.

ஜேம்ஸ் மற்றும் கமல் இலாப நட்டங்களை 5:3 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் சுனில் என்பவரை 1/5 இலாப பங்கிற்கு கூட்டாளியாக சேர்த்துக் கொண்டனர். தியாக விகிதத்தை கணக்கிடவும்.

a)

1:3

b)

3:1

c)

5:3

d)

1:2

45.

பாலாஜி மற்றும் கமலேஷ் கூட்டாளிகள். இலாப நட்டங்களை 2:1 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொண்டனர் . அவர்கள் யோகேஷ் என்பவரை கூட்டாண்மையில் சேர்த்துக் கொண்டனர் .பாலாஜி, கமலேஷ் மற்றும் யோகேஷின் புதிய இலாபப் பகிர்வு விகிதம் 3:1:1. பாலாஜி மற்றும் கமலேஷின் தியாக விகிதத்தைக் கணக்கிடவும்.

a)

1:3

b)

3:1

c)

2:1

d)

1:2