wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ஒலி வேறுபாடு (சரியான சொல்லைக் கண்டறி)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

ராமு தவறான தொலைபேசி__________________ அழுத்திவிட்டான்.

(என்னை / எண்ணை)

a)

என்னை

b)

எண்ணை

2.

வீணா தன் குழுவினரிடம் கலந்துரையாடி தகவல்களை அறிந்து__________________ சென்றாள். (கொல்ல / கொள்ள)

a)

கொல்ல

b)

கொள்ள

3.

திருமதி நாதன் அருமையான நிகழ்ச்சி ஒன்றை __________________ஏற்பாடு செய்திருந்தார். (காண / கான)

a)

காண

b)

கான

4.

மீனவன் வீசிய __________________ ஏராளமான மீன்கள் சிக்கின. (வலையில் / வளையில்)

a)

வலையில்

b)

வளையில்

5.

ஒரு மர்மமான உருவம் எழுப்பிய __________________ கேட்டு அனைவரும் பயந்தனர். (ஒளியை / ஒலியை)

a)

ஒளியை

b)

ஒலியை

6.

‘’அந்தப் படகில் இருக்கும் __________________ பொருட்களை நீ கண்டுபிடிக்கவேண்டும்’’ என்று போட்டியை நடத்துபவர் கூறினார். (உன் / உண்)

a)

உன்

b)

உண்

7.

விலங்குத் தோட்டத்திலிருந்து தப்பியோடிய __________________ காவலர்களால் உயிருடன் பிடிக்கப்பட்டது. (புலி / புளி)

a)

புலி

b)

புளி

8.

கப்பலில் பயணம் செய்தவர்கள் தூரத்தில் __________________ தெரிவதைப் பார்த்து மகிச்சியடைந்தார்கள். (கறை / கரை )

a)

கரை

b)

கறை

9.

__________________ நனைந்த மகளை தாயார் கண்டித்தார்.

(மலையில் / மழையில்)

a)

மலையில்

b)

மழையில்

10.

இனிப்பு கலந்த __________________ மிகவும் சுவையாக இருக்கும். (அவல் / அவள்)

a)

அவல்

b)

அவள்

11.

உலகம் மிகவும் __________________ விரிந்து காணப்படுகிறது. (பறந்து/ பரந்து)

a)

பறந்து

b)

பரந்து

12.

காவலரிடம் பிடிபட்ட திருடன் __________________ தான் ஈடுபடவில்லை என்று கூறினான். (கொல்லையில் / கொள்ளையில்)

a)

கொல்லையில்

b)

கொள்ளையில்

13.

மக்கள் விழாக்களைக் கொண்டாடும்போது அன்று போலவே என்றும் மகிழ்ச்சியாக

இருக்கவேண்டும் __________________ எண்ணத்தோடு அன்றைய நாளை இன்பமாகக்

கழிப்பார்கள். (என்னும் / எண்ணும் )

a)

என்னும்

b)

எண்ணும்

14.

ரம்யா __________________ கூண்டில் அடைக்காமல் சுதந்திரமாக விட்டாள். (கிளியை / கிலியை)

a)

கிளியை

b)

கிலியை

15.

தச்சர் __________________ மரத்தை அறுத்து அழகிய கதவைச் செய்தார். (வாலால் / வாளால்)

a)

வாலால்

b)

வாளால்