Worksheetsபொருள் கூறுதல்
Total questions: 10
Worksheet time: 5mins
அண்மையில் உலக வர்த்தக மையத்தில் மாபெரும் புத்தக விழா ஒன்று நடைபெற்றது.
(1) இன்று (3) சமீபத்தில்
(2) சேய்மையில் (4) தற்போது
இன்று
சமீபத்தில்
சேய்மையில்
தற்போது
அடுத்த ஆண்டு தேர்வில் முதல் மாணவனாக வர வேண்டும் என்று தந்தை மகனிடம்
ஆணித்தரமாகக் கூறினார்.
(1) உறுதியாக (3) அறிவுரையாக
(2) ஆத்திரமாக (4) மகிழ்ச்சியாக
உறுதியாக
ஆத்திரமாக
அறிவுரையாக
மகிழ்ச்சியாக
தொலைக்காட்சியில் கூறப்பட்ட வானிலை அறிக்கைகள் துல்லியமாக இருந்தன.
(1)குழப்பமாக (3) தவறாக
(2)சரியாக (4) நெருக்கமாக
குழப்பமாக
சரியாக
தவறாக
நெருக்கமாக
சிறந்த கதையை எழுதிப் பாராட்டுப் பெற்ற அருணுக்கு ஆனந்தம் ஏற்பட்டது.
(1) மகிழ்ச்சி (3) ஆணவம்
(2) கவலை (4) ஆர்வம்
மகிழ்ச்சி
கவலை
ஆணவம்
ஆர்வம்
ராணி தன் தாத்தாவுடன் மாலை நேரத்தில் உலாவச் சென்றாள்.
(1) ஓட (3) விளையாட
(2) பேச (4) நடக்க
ஓட
பேச
விளையாட
நடக்க
தாத்தாவும் பாட்டியும் மாலை நேரத்தில் பூங்காவில் காலார நடந்தனர்.
1. நிதானமாக 2. வேகமாக
3. அவசரமாக 4. கோபமாக
நிதானமாக
வேகமாக
அவசரமாக
கோபமாக
இளவரசன் புரவியின் மீது ஏறி மின்னல் வேகத்தில் சென்றான்.
1. யானையின் 2. குதிரையின்
3. புலியின் 4. சிங்கத்தின்
யானையின்
குதிரையின்
புலியின்
சிங்கத்தின்
தரத்தில் சிறந்த பொருள்களையே மக்கள் வாங்க விரும்புவர்.
1. விலையில் 2. விளம்பரத்தில்
3. தகுதியில் 4. அளவில்
விலையில்
விளம்பரத்தில்
தகுதியில்
அளவில்
வைகாசித் திங்களில் ஒரு நல்ல நாளில் ராதாவிற்கும் சீனுவுக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடைபெற்றது.
1. மாதத்தில் 2. சூரியனில்
3. சந்திரனில் 4. நாளில்
மாதத்தில்
சூரியனில்
சந்திரனில்
நாளில்
வேலப்பன் தன் தம்பியிடம், ‘’ஏன் என் புத்தகத்தைக் கிழித்தாய்?’’ என்று சினத்துடன் கேட்டான்.
1. வெறுப்புடன் 2. ஆர்வத்துடன்
3. கவலையுடன் 4. கோபத்துடன்
வெறுப்புடன்
ஆர்வத்துடன்
கவலையுடன்
கோபத்துடன்
