Font size
Worksheetsஒற்றை மற்றும் சமஸ்டி
Total questions: 10
Worksheet time: 35mins
ஒற்றையாட்சி அரசாங்க முறையொன்று தொடர்பாக பொருத்தமான கூற்று
இறைமை பகிரப்படுவது இல்லை
இறைமை பிராந்திய அரசாங்கங்களுடன் பகிரப்படுகிறது
சட்டத்துறை இரண்டாவது சபையை கொண்டிருத்தல் அவசியமானதாகும்
உச்சநீதிமன்றம் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு இடையிலான பிணக்குகளை தீர்த்து வைக்கின்றது
பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரம் மட்டுப்படுத்தப்படுகிறது
இந்திய சமஷ்டி முறைக்கு பொருத்தமில்லாத கூற்று எது?
மத்திய அரசாங்கத்திற்கு மாநிலங்களை உருவாக்கவும் அவற்றின் பெயர்களை மாற்றவும் முடியும்
மத்திய அரசாங்கத்திற்கு அவசரகால நிலையின்போது ஒற்றையாட்சி அரசாங்கமாக செயற்பட முடியும்
மத்திய அரசாங்கத்திற்கு மாநிலங்களின் சட்ட மற்றும் நிர்வாக அதிகாரங்களை கட்டுப்படுத்த முடியும்
இந்திய சமஸ்டி முறைமை ஐக்கிய அமெரிக்க சமஷ்டி முறைமைக்கு ஒப்பானது
அரசியலமைப்பு ஒற்றையாட்சி மற்றும் சமஸ்டிக்குரிய பண்புகளை கொண்டுள்ளது
சமஸ்டி அரசாங்கம் தொடர்பான தவறான கூற்று யாது?
தேசிய, துணைத் தேசிய மட்டங்களை கொண்டு அரசாங்கம் கட்டமைக்கப்பட்டு இருத்தல்
மத்திக்கும் பரிதிக்கும் இடையில் இறைமை அதிகாரம் பகிரப்பட்டு இருத்தல்
சமஸ்டி முறைமைக்குச் சட்ட தளத்தை வழங்கும் எழுதப்பட்ட யாப்பின் இருப்பு
சட்டரீதியாக அல்லது அரசியல் ரீதியாக ஒன்றுக்கொன்று கீழ் படாத சமமான பங்காளிகள்
அரச அதிகாரத்தை பிரயோகிப்பதில் உயர் செயல்திறன் மிக்க தன்மை காணப்படுதல்
ஒற்றையாட்சி அரசாங்கத்தின் பிரதான பண்பு அல்லாதது
மத்திக்கும் பருதிக்கும் இடையில் அதிகார பகிர்வு முறையின் அடிப்படையில் அரச அதிகாரத்தை நடைமுறைப்படுத்தல்
மத்திய அரசாங்கத்தினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரத்தை கொண்ட உள்ளுராட்சி முறைமையொன்றின் இருப்பு
ஒற்றை குடியுரிமை முறையின் இருப்பு
அரச அதிகாரத்தை பிரயோகிப்பதில் மத்திய அரசாங்கத்தின் தனியுரிமை
சகல துணை தேசிய அரசாங்கங்கள் மீதும் மத்திய அரசாங்கத்தின் தனி முதன்மையான ஆதிக்கம்
சமஸ்டி அரசாங்கம் தொடர்பான சரியான கூற்று களின் தொகுதி
இருமட்ட அரசாங்கங்களை கொண்ட ஓர் அரசாங்க முறையாகும்
மத்திக்கும் பருதிக்கும் இடையில் நிலைக்குத்து அதிகாரப் பகிர்வின் அடிப்படையில் செயற்படும் ஓர் அரசாங்க முறைமையாகும்
சமூக பல்வகைமையை பாதுகாத்து ஒற்றுமையை அடைவதற்குள்ள ஓர் சிறந்த அரசாங்க முறைமையாக கருதப்படுகிறது
சிறிய சனத்தொகையும் குறுகிய நிலப் பரப்பையும் கொண்ட அரசுகளுக்கு அதிகம் பொருந்தும் ஓர் அரசாங்க முறைமை என கருதப்படுகிறது
1789 தாபிக்கப்பட்ட அமெரிக்க அரசியல் யாப்பினால் அரசியல் உலகுக்கு உருவாக்கப்பட்ட ஓர் அரசாங்க மாதிரி ஆகும்
சமஸ்டி அரசாங்கம் என்பது தொடர்பான பிழையான கூற்று
பிறிதொரு அதிகார வேறாக்க மாதிரியாகும்
ஒற்றுமையினதும் வேற்றுமையினதும் நன்மைகளை ஒன்றிணைப்பது ஆகும்
அதிகம் மத்திய மயப்படுத்தப்பட்ட மத்திய அரசாங்கம் உருவாகுவதற்கு வழிசமைக்கும்
பிரதேச மட்டத்தில் செறிந்துள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க உதவும்
பரப்பளவில் பெரிய அரசுகளுக்கு சாலவும் பொருந்தும்
ஒற்றையாட்சி அரசாங்கம் என்பது தொடர்பாக பிழையான கூற்று
அதிகாரமற்ற ஒரு மத்திய அரசாங்கம் உருவாகுவதற்கு வழி சமைக்கிறது
சிறிய அரசுகளுக்கு அல்லது ஒருமை தன்மையிலான பிரதேசங்களை கொண்ட அரசுகளுக்கு சாலவும் பொருந்தும்
முழு நாட்டிலும் ஒருமைத் தன்மையான சட்ட மற்றும் நிர்வாக முறைமையை பேணுவதற்கு உதவும்
அரசாங்கத்தின் வேலைகள் இருமுறை மேற்கொள்ளப்படுவதால் ஏற்படும் வீண் விரயத்தை தடுக்க உதவும்
அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலையும் பொறுப்பாதலையும் தெளிவாக இனங்காண உதவும்
ஒற்றையாட்சி அரசாங்க முறையொன்றின் பிரதான பண்புகளாவன
மத்திய அரசாங்க நிறுவனங்களில் அரசியல் ஆணையதிகாரம் ஒன்று குவிதல்
அரசியல் யாப்பின் மூலம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் உள்ளூராட்சி அரசாங்க முறை நிலவுதல்
இறைமை அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசாங்கத்தின் தனியுரிமை நிலவுதல்
மத்திய அரசாங்கத்தினால் மட்டும் தேசத்தின் நலன்கள் முன்வைக்கப்படுதல்
ஒற்றை குடியுரிமையும் சட்டமுறைமையும் நீதித் துறையும் சிவில் சேவையும் நிலவுதல்
சமஸ்டி அரசாங்கம் ஒன்றின் பிரதான பண்புகளாவன ஒன்றுக்கொன்று வேறுபட்ட இரு மட்ட அரசாங்கங்கள் நிலவுதல்
ஒன்றுக்கொன்று வேறுபட்ட இரு மட்ட அரசாங்கங்கள் நிலவுதல்
மத்திற்கும் ஓரத்திற்கும் இடையில் இறைமை பங்கீடு செய்யப்பட்டு இருத்தல்
ஓர அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்திற்கு கீழ் பட்டதாக இருத்தல்
மத்தியிலும் ஓரங்களிலும் அதிகாரங்கள் பணிகள் மற்றும் பொறுப்புகள் அடிப்படை சட்டத்தின் மூலம் பங்கிடப்பட்டு இருத்தல்
மத்திற்கும் ஓரத்திற்கும் இடையில் எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒரு சுதந்திரமான நீதித்துறை நிலவுதல்
ஒற்றையாட்சி என்பது தொடர்பாக பொருத்தமற்ற கூற்று யாது ?
ஒரு தனியான அதிகார நிலையத்தினை தளமாகக் கொண்டு அமைந்ததாகும்
தேசிய அரசியலை நோக்கமாகக் கொண்டு தேசிய ஒருமைப்பாட்டினை விருத்தி செய்வதற்கு உதவுகின்றது
ஒரு தனித்த நிர்வாக மற்றும் நீதி முறையைப் பேணுவதற்கு உதவுகின்றது
பிரதேச மூலவளங்களை தேசிய கொள்கைகளின் ஊடாக சமமாக பயன்படுத்துவதற்கு உதவுகின்றது
பன்முக சமூகங்களை உடைய பெரிய அரசுகளுக்கு அதிகம் பொருந்துகின்றது என கருதப்படுகிறது
