Font size
Worksheetsஇயல் ஒன்று குற்றியலுகரம் குற்றியலிகரம்
Total questions: 30
Worksheet time: 11mins
பின்வருவனவற்றுள் எது குற்றியலுகரம் அல்ல?
அரசு
நடு
நாடு
வீடு
குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?
5
4
8
6
கீழ்க்காண்பனவற்றுள் எது மென்தொடர்க்குற்றியலுகரம்?
நெருப்பு
எழுது
கழுத்து
நண்டு
கீழ்க்காண்பனவற்றுள் எது உயிர்த்தொடர்க்குற்றியலுகரம்?
ஐந்நூறு
ஆறு
பத்து
இது
மென்தொடர்க்குற்றியலுகரச் சொற்களைத் தெரிவு செய்க.
i மருந்து
ii துரத்து
iii ஊது
iv கொழுந்து
v சாந்து
i, ii, iii, iv, v
ii, iii
i, iv, v
i, ii, iv, v
இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
பிரித்தி மலர் பறித்துத் தலையில் சூடினாள்.
ஆற்றைக் கடந்து சென்றால் ஊர் எல்லையை அடையலாம்.
மலர்விழி மலர் கொய்து மாலை தொடுத்தாள்.
முயற்சி செய்யாமல் வெற்றி கிட்டாது.
மென்தொடர்க் குற்றியலுகரச் சொல் கொண்ட பழமொழியைத் தெரிவு செய்க.
அற்ப அறிவு ஆபத்துக்கிடம்
அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது
ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
எறும்பு ஊரக் கல்லும் தேயும்
பின்வருவனவற்றுள் எது நெடில்தொடர்க்குற்றியலுகரம் அல்ல.
ஏது
சாக்காடு
பாடு
காது
பின்வருவனவற்றுள் எங்கு வலிமிகும்?
இடைத்தொடர்க்குற்றியலுகரம்
ஆய்தத்தொடர்க்குற்றியலுகரம்
வன்தொடர்க்குற்றியலுகரம்
நெடில்தொடர்க்குற்றியலுகரம்
ஆய்த்தொடர்க்குற்றியலுகரத்தைத் தெரிவு செய்க.
நன்று
எஃகு
ஆய்தம்
எங்கு
மொழியைப் பிழையின்றி பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம்.மொழியின் சிறப்புகளை அறிய உதவுவது ______.
இலக்கியம்
இயல்
இசை
இலக்கணம்
பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது _________ அளபெடை
இசைநிறை
இன்னிசை
சொல்லிசை
செய்யுளிசை
பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது _________ அளபெடை
இசைநிறை
இன்னிசை
சொல்லிசை
செய்யுளிசை
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது_____.
சொல்
மொழி
தனிமொழி
வினையடி
ஒரு வினையைக் குறிக்கும் பெயரானது எண்,இடம்,காலம்,பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையகவோ உணர்த்தாமல் வருவது _________ எனப்படும்.
வினைமுற்று
வினையாலணையும் பெயர்
தொழிற்பெயர்
வினைத்தொகை
வேறுபட்டது எது?
நடவாமை
செல்லாமை
வாழ்க்கை
கேளாமை
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - இத்தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே______,______.
பாடிய,கேட்டவர்
பாடல்,பாடிய
கேட்டவர்,பாடிய
பாடல்,கேட்டவர்
முதனிலை திரிந்த தொழிற்பெயர் ______?
பெறு
பேறு
பெறுதல்
பெறாமை
சரியானது எது?
அம்மாஆ
கெடுப்பதூஊம்
வெக்ஃகுவார்
நசைஇ
உயிரளபெடையில் அளபெடுக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை______?
6
7
8
9
உயிரளபெடையில் அளபெடுப்பது ________ எழுத்துகள்.
நெட்டெழுத்துகள்
குற்றெழுத்துகள்
ஒற்றெழுத்துகள்
சார்பெழுத்துகள்
ஓரெழுத்து தனித்தோ பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது _________?
வேர்ச்சொல்
தனிமொழி
சொல்
அடிச்சொல்
ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது (a) எனப்படும்.
உயிரளபெடையில் உயிரெழுத்துகள் அளபெடுக்கும் இடம் _____.
மொழிமுதல்
மொழி இடை
மொழிக்கடை
மூவிடத்திலும்
ஒற்றளபெடையில் அளபெடுக்கும் சார்பெழுத்துகளின் எண்ணிக்கை ________?
10
1
8
எதுவுமில்லை
கு,சு,டு,து,பு,று தனிக்குறிலுக்குப்பின் வந்ததால் முழுமையாக ஒலிக்கும்.
உகரம் குறுகி ஒலிக்காது.
சரி
தவறு
ஆய்தத்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தேர்ந்தெடு.
பட்டம்
கண்ணாடி
எஃகு
கதவு
சரியான இணையைத் தெரிவு செய்க.
சொல் வகை
A சால்பு- பந்து இடைத்தொடர்க் குற்றியலுகரம்
B உப்பு - சங்கு மென்தொடர்க் குற்றியலுகரம்
C தூசு - காடு நெடில்தொடர்க் குற்றியலுகரம்
D இஃது - கிழடு ஆய்தத்தொடர்க்
குற்றியலுகரம்
A
B
C
D
பின்வருவனவற்றுள் சரியாக வலிமிகுந்துள்ள விடையைத் தெரிவு செய்க.
பாட்டுப் பாடினான்
கன்றுக் குடித்தது
காசுக் கொடுத்தான்
அரசுத் தடுத்தது
நெடில் தொடர் குற்றியலுகரச் சொல்லைக் குறிப்பிடுக:
பாகு
எஃகு
அரசு
