NEW
Font size
Worksheetsமொழியணிகள் (Set 3)
Total questions: 10
Worksheet time: 5mins
சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்
ஒப்புரவொழுகு
ஈகைத்திறன்
ஏற்பதிகழ்ச்சி
ஒற்றுமை வலிமையாம்
உறவினரோடு கூடி வாழ்வதே சிறப்பாகும்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
வானத்தில் நட்சத்திரங்கள் ------------ என மின்னுகின்றன.
பளீர் பளீர்
பள பள
தக தக
மினு மினு
எந்த வேலை சொன்னாலும் உடனே செய்யாமல் காலம் தாழ்த்திச் செய்யும் மகளை அம்மா திட்டினார்.
திட்ட வட்டம்
ஆறப் போடுதல்
தட்டிக் கழித்தல்
கடுக்காய் கொடுத்தல்
திறமைசாலி தன் ஆற்றலால் அற்பப் பொருளையும் கொண்டு ஒரு காரியத்தைச் சாதித்துக் கொள்வான்.
சுடர் விளக்காயினும் தூண்டுகோல் தேவை
மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?
வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
புத்திமான் பலவான்
உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
இகழ்வாரை நோவது எவன்
உள்ளத்து ளெல்லாம் உளன்
என்னுடைய ரேனும் இலர்
தோன்றலின் தோன்றாமை நன்று
கீழ்க்காண்பனவற்றுள் எது புதிய ஆத்திசூடி அல்ல?
ஓய்தல் ஒழி
அச்சம் தவிர்
ஊண்மிக விரும்பு
ஓதுவதொழியேல்
அம்மா, மாமா வீட்டிற்கு அழைத்துப் போவதாகச் சொன்னவுடன் கயல்விழி --------வென வீட்டு வேலைகளைச் செய்து முடித்தாள்.
குடு குடு
மள மள
மட மட
தட தட
திரு. ஹரிஸ் துன்பம் என்று யார் கேட்டாலும் கருணையுடன் உடனே உதவி செய்து விடுவார்.
ஈடு கட்டுதல்
கை கூடுதல்
ஈவிரக்கம்
செவி சாய்த்தல்
ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை ------------ -------------- வேர்வீழ்க் கும்மே
இருநிலம் பிளக்க
நீர்க்குட் பாசிபோல்
பிச்சை புகினும்
நன்றி சிறிதெனினும்
