wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Grade 11 Unit 3 Unit Test INTERNET & E MAIL

Total questions: 20

Worksheet time: 17mins

Name
Class
Date
1.

சீர்மை வள இடப்படுத்திக்கு உதாரணமாக அமைவது

a)

rose@gmail.com

b)

http://www.nie.lk

c)

158.65.48.11

d)

www.doenets.lk

2.

பின்வரும் கூற்றுக்களுள் சரியானவை

a)

இணையத்திலுள்ள கணினிகளை இணங்காண்பதற்கு IP முகவரிகள் பயன்படுத்தப்படுகின்றன

b)

WWW ஆனது இணையத்திலுள்ள ஒரு சேவையாக இருக்கும் அதேவேளை இணையம் அத்தகைய சேவைகளை வழங்கும் வலையமைப்பு ஆகும்

c)

மின்னஞ்சலின் மூலம் இணைப்புகளாக அனுப்ப முடியாத வீடியோக்கள் போன்ற பெரிய கோப்புக்களை கோப்பு இடம்மாற்றச் செம்மைநடப்பு(FTP) ஊடாக வேறொரு கணினிக்கு அனுப்பலாம்

3.

ஒரு இணையத்தளத்தில் காணப்படும் இணையப் பக்கங்கள் ............................................... இனைப் பயன்படுத்தி ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தப்படுகின்றது

a)

இணைய உலாவி (Web browser)

b)

மீயிணைப்பு (Hyperlink)

c)

கோப்பு பரிமாற்ற செம்மை நடப்பு வழக்கு (FTP)

d)

மின்னஞ்சல் E mail)

4.

எந்த நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும் எந்தவொரு சாதனத்திலிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும் எந்தவொரு சாதனத்திலும் தகவல்களை சேமிக்கக் கூடிய வசதி ..............................................என அழைக்கப்படும்.

a)

கலப்பினக் கணினி

b)

முகில்கணினி

c)

,இணையம்

d)

உலகமயமாதல்

5.

பின்வருவனவற்றுள் தேடற் பொறிகளாவன

a)

Google

b)

Yahoo

c)

Safari

d)

Google Chrome

6.

குறும்பர்கள் (Hackers) எனப்படுவர்கள்

a)

கணினி பாகங்களைத் திருடுபவர்கள்

b)

எதிர் நச்சு நிரலினை (Antivirus) இனை உருவாக்குபவர்

c)

வலையமைப்பில் உள்ள கணினிகளின் வன்பொருள் மென்பொருட்களின் பலவீனங்களைக் கண்டறிந்து அவற்றினூடாகக் குறித்த பயனரின் அனுமதியின்றி அவரின் கணினியல் தரவுகளையும் தகவல்களையும் வேறொரு நபர் களவாடுதலாகும்

d)

மேற்கூறிய யாவும்

7.

URL இனை IP ஆக மாற்றும் சேவையகம் பின்வருவனவற்றுள் எது

a)

Web Server

b)

Mail Server

c)

FTP Server

d)

DNS Server

8.

http://www.google.com எனும் சீர்மைவள இடப்படுத்தியில் மேல்மட்ட ஆள்களமாக அமைவது (a)   ஆகும்

9.

பின்வருவனவற்றில் வலிதான மின்னஞ்சல் முகவரியினைத் தெரிவு செய்க

a)

ree_mac.com

b)

ree@mcc@.com

c)

rose.colombo@gmail.com

d)

rose.com

10.

தகவல் பரிமாற்றத்தின் போது ஏற்படும் வழுக்களைத் தெரிவிப்பதற்காகவும் கட்டுப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும் செம்மை நடப்பு வழக்கு

a)

HTTP

b)

TCP/ IP

c)

ICMP

d)

SMTP

11.

http://slt.lk/en/training center/courses/beng என்னும் சீரான வள இடங்காணியின்(URL) ஆள்களப்பெயர் (Domain Name)பின்வருவனவற்றுள் எதன் மூலம் காட்டப்பட்டுள்ளது.

a)

http://slt.lk/en/training center

b)

slt.lk

c)

en/training center/courses/beng

d)

beng

12.

IP முகவரி பற்றிய சரியான கூற்று / கூற்றுக்கள்

a)

IP முகவரி என்பது இணையத்தில் இருக்கின்ற எல்லாக் கணினிகளையும் அடையாளங்காணப் பயன்படுத்தப்படுகின்றது

b)

ஒரே IP முகவரி இணையத்திற்குள் பல கணினிகளுக்கும் இருக்கும்

c)

IP முகவரியானது தசமப்புள்ளிகளினால் வேறாக்கப்பட்ட 0-255 வரையான நான்கு பெறுமானங்களால் உருவாக்கப்பட்டது

d)

IP முகவரியானது இணையச் சேவை வழங்குனரினால் வழங்கப்படும்

13.

பிழையான IP முகவரி யாது?

a)

170.64.89.25

b)

255.255.255.1

c)

18.255.255.1

d)

225.256.200.20

14.

தரவிறக்கம் (DOWNLOAD ) என்பதற்கு மிகப் பொருத்தமானது

a)

சேவைப் பயனரின் கணினியலுள்ள தகவல்களை சேவைத் தருனரிற்கு வழங்குதல்

b)

சேவைத் தருனரின் கணினியலுள்ள தகவல்களை சேவைப் பயனரிற்கு வழங்குதல்

c)

சேவைப் பயனர் ,சேவைத் தருனர் கணினிகளுக்கிடையிலான இருவழிப் பரிமாற்றம்

d)

சேவைப் பயனர் ,சேவைத் தருனர் கணினிகளுக்கிடையிலான தொடர்பாடல்

15.

அனுப்புவதற்கு தட்டச்சு செய்துகொண்டிருந்த மின்னஞ்சல் முகவரியானது நிறைவு பெறும் முன்னே மறைந்துவிட்டது. இது இருக்கக் கூடிய இடம்

a)

Draft

b)

Spam

c)

Outbox

d)

Trash

16.

மேகக் கணினியில் காணப்படும் நன்மைகளாவன

a)

மென்பொருட்களை இலகுவாக இற்றைப்படுத்திக் கொள்ளல்

b)

மென்பொருளுக்கான செலவு குறைவாகும்

c)

பராமரிப்பு சிக்கல்கள் குறைவாகக் காணப்படும்

d)

தொடரான இணையத் தொடர்பு இருக்க வேண்டும்

17.

இரு மாணவர்கள் தமது பாடசாலையில் உள்ள இரு கணினிகளைப் பயன்படுத்தி ஒரே வலைக்கடப்பிடத்தை (Website) அடைகின்றனர்.அவ்விரு கணினிகளிலும் எவ்வேறுபாடு இருக்க வேண்டும்.

a)

வலைமேலோடிகள்(Web browsers)

b)

IP முகவரிகள்

c)

இணைய சேவை வழங்குனர்கள் (ISP)

d)

பணிசெயல் முறைமைகள்(Operating System)

18.

தொலை அணுகுகை தொடர்பாக பின்வரும் கூற்றுக்களுள் சரியானவை

a)

சேவையகக் கணினியிலுள்ள மென்பொருட்களை சேவைப்பயனரின் கணினிக்கு நிறுவுதல்

b)

சேவைப் பயனரின் கணினியிலுள்ள வழுக்களை நிவர்த்தி செய்தல்

c)

இணையத்தில் தொலைவில் இணைந்துள்ள கணினியினை தொலைவில் இருந்தவாரு கட்டுப்படுத்தலாம்

19.

BCC இல் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள் TO இல் காணப்படும் மின்னஞ்சலுக்குரிய நபர்களுக்கு காட்சிப்படுத்தப்படும்

a)

சரி

b)

பிழை

20.

CC இல் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிகள்BCC இல் காணப்படும் மின்னஞ்சலுக்குரிய நபர்களுக்கு காட்சிப்படுத்தப்படும்

a)

சரி

b)

பிழை