Worksheetsதமிழ்மொழி ஆண்டு 6 அரையாண்டு தேர்வு
Total questions: 30
Worksheet time: 15mins
கீழ்க்காண்பனவற்றுள் எது ஆத்திசூடி அல்ல?
மேடு பள்ளம்
இளைத்தல் இகழ்ச்சி
அச்சம் தவிர்
ஏறுபோல் நட
அள்ளி இறைத்தல் எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?
பொய் சொல்லுதல்
ஏமாற்றுதல்
முழு முயற்சி
அளவுக்கு மேல் செலவழித்தல்
பொருத்தமான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
குமரன் ; யாரோ கதவைத் ____________ வென்று தட்டுகிறார்களே ?
குணா ; அவசரப்பட்டுத் திறந்து விடாதீர்கள் !
பளார் பளார்
தட தட
மட மட
கிடு கிடு
கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளை நிறைவு செய்க
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
______________________________
இழுக்கா இயன்றது அறம்
தெய்வத்துள் வைக்கப் படும்
உயிரினும் ஓம்பப் படும்.
இகழ்வாரை நோவது எவன்
பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.
"இனிமையாகப் பாடத் தெரிந்தும் கண்ணன் தன் திறமையை இவ்வளவு நாளும் வெளிபடுத்தாமல் இருந்து விட்டானே!" என்று அமுதா மனம் வருந்தினாள்.
சிலை மேல் எழுத்துப் போல
இலைமறை காய் போல
குன்றின் மேலிட்ட விளக்கு போல
பசுத்தோல் போர்த்திய புலி போல
கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
நாம் வாழும் இடத்து மக்களின் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப அவர்களோடு இணைந்து வாழ வேண்டும்.
அழுத பிள்ளை பால் குடிக்கும்
ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு
சுத்தம் சுகம் தரும்
ஊருடன் கூடி வாழ்
கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
சொல்லாமல் குறிப்பறிந்து செயல்படும் பிள்ளைகள் பெற்றோருக்கு நீண்ட ஆயுளைத் தரும் அமிர்தம் போல் ஆவர்.
ஏவா மக்கள் மூவா மருந்து
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
கீழ்க்கண்ட விளக்கத்தைத் தாங்கி வரும் மூதுரையின் செய்யுளடியைத் தெரிவு செய்க.
இவ்வுலகில் வாழும் நல்லவர் ஒருவருக்காகப் பெய்யும் மழை அனைத்து உயிரினங்களுக்கும் பாகுபாடின்றி நன்மை அளிக்கிறது.
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல் வேண்டும்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை
அடக்க முடையா ரறிவிலரென் றெண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா மடைத்தலையில்
கல்வியின் அவசியமும் கல்விக்குச் சிறப்பும்
மேற்கண்ட தலைப்பில் நீ உரையாற்ற வேண்டும். தலைப்புக்கு ஏற்ற வெற்றி வேற்கைகளைத் தெரிவு செய்க.
i.கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே
ii.செல்வர்க் கழகு செழுங்கிளை தாங்குதல்
iii கல்விக் கழகு கசடற மொழிதல்
iv.பெருமையும் சிறுமையும் தான்தர வருமே
I, II
I, II, III
I, III
I, II, III, IV
உலக நீதிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
அஞ்சாமற் றனிவழியே போக வேண்டாம்
அறம் செய்ய ஒரு போதும் மறக்கக்கூடாது
தீய செயல்கள் செய்பவரோடு நட்பு கொள்ளுதல் கூடாது
மனம் செல்லும் வழியெல்லாம் செல்ல வேண்டாம்
பயம் இல்லாமல் தனியாகப் பயணம் செய்யக்கூடாது.
கீழ்க்கண்ட சொற்களில் இடையின எழுத்துகளைக் கொண்டு தொடங்கும் சொற்களைத் தெரிவு செய்க.
I
வழலை
II
கப்பம்
III
நகப்பூச்சு
IV
வியாழன்
I, II
I, IV
I, III
II, III
கீழ்க்கண்ட வாக்கியங்களில் கட்டளை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
நீ எங்கே செல்கிறாய்?
ஐயோ! வலிக்கிறதே!
அப்பா புற்களைக் கத்தியால் வெட்டினார்.
அங்கே செல்லாதே!
சரியான வினையடை வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அன்பரசி உயரமான கோபுரத்தைக் கண்டு மகிழ்ந்தாள்.
நவின் பாடம் செய்யாததால் அப்பா கடுமையாகத் திட்டினார்.
முருகன் ஆழமான ஏரியில் மீன் பிடித்தான்.
திருமதி பவானி அழகான ஆண் குழந்தையை ஈன்றெடுத்தார்.
பிழையான வேற்றுமை உருபு கொண்ட வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
கவிதா குமாரிடமிருந்து காசோலையைப் பெற்றாள்.
தமிழரசனின் தமிழாற்றல் அனைவரையும் கவர்ந்தது.
முருகம்மா சிறுவனுக்கு அறிவுரை கூறினாள்.
முகிலன் ஆற்றுக்குச் சென்று மீன்களோடு பிடித்தான்.
பின்வரும் வாக்கியங்களில் செயப்படுபொருள் கொண்டுள்ள வாக்கியங்களைத் தேர்ந்தெடு.
i.இடையன் ஆடுகளை மேய்த்தான்.
ii.மாணவர்கள் திடலில் விளையாடுகின்றனர்.
iii.கவிஞர் கண்ணதாசன் கவிதை எழுதினார்.
iv.பேருந்து இரு கடைகளை மோதியது.
I , III , IV
I , II , IV
I , II , III, IV
I , II , III
சரியான இணையைத் தெரிவு செய்க
பொருட்பெயர் : ஆசிரியர், பேருந்து, நாற்காலி
காலப்பெயர் : மாலை, சிரிப்பு, கவிதை
சினைப்பெயர் : கிளை, இலை, மரம்
தொழிற்பெயர் : மருத்துவர், ஓட்டுனர், விமானி
சரியான எண்ணுப்புணர்ச்சியைத் தெரிவு செய்க.
ஐந்து + ஐந்து = ஐந்தைந்து
பத்து + ஒன்பது = பத்தொன்பது
நான்கு + நான்கு = நன்னான்கு
ஏழு + பத்து = பதினேழு
பன்மை வாக்கியத்தைத் தெரிவு செய்க
பறவைகள் வானில் சிறகடித்துப் பறந்தது.
இளவேந்தனும் இளமாறனும் தேர்வினைச் சிறப்பாகச் செய்தனர்.
சிறுவன் நாயைக் கல்லால் அடித்தனர்.
மாடுகள் திடலில் புற்கள் மேய்ந்தது.
வன்தொடர் குற்றியலுகச் சொற்களுக்குப் பிறகு வலிமிகும் எனும் கூற்றுக்கேற்ற சொற்றொடர்களைத் தேர்ந்தெடு.
பாக்குத் தோப்பு
தீச்சட்டி
அப்படிச் சொல்
விலைக்குத் தந்தான்
சேர்த்தெழுதுக
வேத + ஆகமம் =
வேத ஆகமம்
வேதகமம்
வேதாகமம்
வேடாகமம்
கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்ட சொல் எந்த வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ளது?
பாரதி தினமும் தொழிற்சாலைக்குச் செல்வான்.
எழுவாய் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
நான்காம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
பாரதியார் __________________ புரட்சிமிக்க கவிதைகளின் வழி சமுதாயத்தில் எழுச்சியை மூட்டினார்.
தன்
தான்
தம்
தாம்
தங்குறைதீர் வுள்லார் தளர்ந்து பிறர்க்குறூஉம்
வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்
கறையிருளை நீக்கக் கருதா துலகில்
நிறையிருளை நீக்குமே நின்று
சிறியோர்
முதியோர்
கற்றோர்
மேலோர்
தமிழ்க்கல்வியின் _____________________ உணராத சிலர், அதனைப் புரக்கணித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கின்றது.
அரை குறைகளை
அருமை பெருமைகளை
நன்மை தீமைகளை
குறை நிறைகளை
மறைந்த கவிஞர் கண்ணதாசன் ___________________________ திரைப்பட பாடல்கள் இன்றும் நம் மனதில் நீங்காத இடம் பெருகின்றன.
இயற்றிய
இயற்ற
இயற்றும்
இயற்றினார்
கீழ்க்காணும் வாக்கியங்கள் சுட்டெழுத்துகள் கொண்டவை ஒன்றைத் தவிர .......
அங்கு நிற்பவர் என் மாமா.
இஃது என் தந்தையின் சட்டை.
இவன் என்னுடைய இளைய தம்பி.
கேசவன் புத்தகம் படித்தான்.
கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற ஆத்திச்சூடி யாது?
நம்மிடம் உள்ள செல்வம் அல்லது கல்வியைப் பற்றி பிறரிடம் தற்பெருமையாகக் கூறக்கூடாது.
ஆறுவது சினம்
அறம் செய விரும்பு
உடையது விளம்பேல்
இயல்வது கரவேல்
ஒருநாட் பழகினும் ________________ கேண்மை
________________ பிளக்க வேர்வீழ்க் கும்மே
மூர்க்கர், வேர்
பெரியோர், நீர்க்குட்
பெரியோர், இருநிலம்
மூர்க்கர் , இருநிலம்
ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்..
'உதவி செய்தவருக்கு, அந்த நன்றியை மறந்து தீமை செய்யக் கூடாது'
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா?
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
ஊருடன் கூடி வாழ்
விகாரப்புணர்ச்சி எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன?
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
