Worksheetsபணம் (கழிவு)
Total questions: 10
Worksheet time: 5mins
பாலா 3 சட்டைகளை RM 240 க்கு வாங்கினான். அச்சட்டைகளின் கழிவு 20% ஆகும்.அப்படியானால், கழிவுக்குப் பின் அவர் வாங்கிய சட்டைகளின் விலை எவ்வளவு?
A. RM 192
B. RM 48
C. RM 298
D. RM 248
சீனப்பெருநாள் சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் 30% திரு. சோங் வாங்கிய ஒரு கால்சட்டை க்குக் கிடைத்தது. அக்கால்சட்டை க்குக் குறிப்பிட்ட விலை RM 148.50 ஆகும். அவர் அந்தக் கால்சட்டைக்குச் செலுத்திய பணம் எவ்வளவு?
A. RM 44.55
B. RM 244.50
C. RM 103.95
D. RM 203.95
ஒரு மடிக்கணினியின் விலை RM 3 200 ஆகும். 30% கழிவிற்குப் பிறகு இம்மடிக்கணினியின் விலை எவ்வளவு?
A. RM 960
B. RM 2 240
C. RM 2 420
D. RM 2 204
ஒரு புடவையின் விலை RM 550 என குறிக்கப்பட்டிருந்தது. அந்தப் புடவை விற்பனையாகததால், கடைக்காரர் 25% சிறப்புக் கழிவு வழங்கினார். அந்தப் புடவை கழிவிற்குப் பிறகு என்ன விலைக்கு விற்கப்பட்டது?
A. RM. 137.50
B. RM 687.50
C. RM 587.50
D. RM 412. 50
தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் 15% திரு. சுதன் வாங்கிய ஒரு சட்டை க்குக் கிடைத்தது. அச்சட்டை க்குக் குறிப்பிட்ட. விலை RM 250 ஆகும். அவர் அந்தச் சட்டைக்குச் செலுத்திய பணம் எவ்வளவு?
A. RM 37.50
B. RM 212.50
C. RM 221.50
D. RM 122.50
ஒரு மிதிவண்டியின் விலை RM 3 550 என குறிக்கப்பட்டிருந்தது. அந்த மிதிவண்டி விற்பனையாகததால், கடைக்காரர் 25% சிறப்புக் கழிவு வழங்கினார். அந்த மிதிவண்டி கழிவிற்குப் பிறகு என்ன விலைக்கு விற்கப்பட்டது?
A. RM. 887.50
B. RM 4 437.50
C. RM 4 347.50
D. RM 2 662.50
திருமதி. அமுதா, ஒரு கைப்பையை RM 840க்கு வாங்கினார். அந்தக் கைப்பைக்கு 30% கழிவு வழங்கப்பட்டது. அக்கைப்பையின் அசல் விலையைக் கணக்கிடுக.
A. RM 588
B. RM 252
C. RM 1 092
D. RM 1 029
திரு. சசி வாங்கிய சலவை இயந்திரத்தின் விலை RM 3 200. அந்த சலவை இயந்திரத்திரத்திற்கு 20% தள்ளுபடி கிடைத்தது. தள்ளுபடிக்குப் பிறகு அவர் கிடைத்த. விலை எவ்வளவு?
A. RM 640
B. RM 3 860
C. RM 2 560
D. RM 3 680
ஓர் உணவு மேசை RM 6 400க்கு விற்கப்பட்டது. அதனினன் கழிவு 25% ஆகும். அந்த உணவு மேசைக்குக் கிடைத்த கழிவு எவ்வளவு?
A. RM 1 600
B. RM 4 800
C. RM 6 400
D. RM. 4 600
ஒரு மோட்டார் வண்டியின் விலை RM 7 600 ஆகும். அதனின் கழிவு 25% ஆகும். அந்த மோட்டார் வண்டிக்குக் கிடைத்த கழிவு எவ்வளவு?
A. RM 1 900
B. RM 9 500
C. RM 5 700
D. RM 5 070
