wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

KESUSASTERAAN TAMIL

Total questions: 40

Worksheet time: 1hrs 19mins

Name
Class
Date
1.

பாகம் 1: கவிதை

1. இக்கவிதையின் சரியான பாடுபொருள் மற்றும் மையக்கருவைக் தேர்ந்தெடுக்கவும்.

a)

பாடுபொருள் - சமுதாய முன்னேற்றம்

மையக்கரு -தொழில் வளம் பெருக்கித் துலங்க ஊக்குவித்தல்

b)

பாடுபொருள் - தன்னிலை விளக்கம்

மையக்கரு - தன் நல்லியல்புகளை எடுத்துரைத்தல்

c)

பாடுபொருள் - சமுதாயம்

மையக்கரு - தமிழ்ச் சமூகத்தின் அவலம்

d)

பாடுபொருள் - தமிழினம்

மையக்கரு - தமிழினத்தின் அர்ப்பணிப்பைப் போற்றுதல்

2.

2. இக்கவிதைக் கண்ணிகளில் காணப்படும் 3 அணி நயங்கள் யாவை?

a)

உயர்வு நவிற்சி அணி

b)

பின்வருநிலை அணி

c)

உருவக அணி

d)

சிலேடை அணி

3.

இக்கவிதையில் அமிழ்தினை என்பதன் பொருள் யாது?

a)

இனிப்பு

b)

தமிழ்மொழி

c)

தித்திப்பு

d)

பிறமொழி

4.

இவ்வடிகளில் தமிழினம் ஏன் பெரும்பேறு பெற்றவர்களாகக் கருதப்படுகின்றனர்?

a)

தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதனால்

b)

தமிழ்மொழிச் செம்மொழி என்பதனால்

c)

தமிழ்மொழி சிறந்த மொழியாதலால்

d)

தமிழ்மொழி ஆட்சிமொழி என்பதனால்

5.

இவற்றுள் சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

ரப்பரும் தமிழரும் - முனைவர் முரசு நெடுமாறன்

b)

கல்வி - சா. ஆ. அன்பானந்தன்

c)

தமிழரின் தற்கால நிலைமை - சுப்பிரமணிய பாரதி

d)

பத்திரிக்கை - தமிழ்மணி எல்லோன்

6.

இவ்வடிகளில் கூரியனுக்கும் விண்மீனுக்கும் உள்ள தொடர்பு யாது?

a)

சூரியன் விண்மீன்களை உருவாக்குகிறது

b)

விண்மீன்கள் சூரியனுக்கு ஒளி கொடுக்கின்றன

c)

சூரியன் விண்மீன்களைக் காக்கின்றது

d)

சூரியன் விண்மீன்களுக்கு ஒளி கொடுக்கிறது

7.

இவ்வடிகளில் வானத் திரையின் பொத்தலென என்பதன் பொருள் யாது?

a)

வானம் எனும் திரையில் ஏற்பட்ட ஓட்டை

b)

வானம் எனும் திரையில் ஏற்பட்ட அழுக்கு

c)

வானம் எனும் திரையில் காணப்படும் நிலவு

d)

வானம் எனும் திரையில் மின்னும் சூரியன்

8.

சீர்களில் சொல்லாலும் பொருளாலும் முரண்பட்டு வருவது ________________ ஆகும்.

a)

சந்தம்

b)

இயைபு

c)

முரண் தொடை

d)

மோனை

9.

சீர்களில், முதல் எழுத்து ஓசையால் ஒன்றிவருவதே _____________ ஆகும்

a)

சந்தம்

b)

இயைபு

c)

எதுகை

d)

மோனை

10.

முதலில் உவமையும் அடுத்து உவமைப்படு பொருளும் வருவது ________________ அணி ஆகும்.

a)

உருவகம்

b)

உவமை

c)

முரண்

d)

மடக்கு

11.

முந்தைய சொல் பின்னும் வருவது _________________ ஆகும். மீண்டும் வரும் சொல், அதே பொருளிலோ அல்லது வேறு பொருளிலோ வரலாம்; ஆனால் சொல்லின் வடிவம் மாறாது.

a)

பின்வருநிலை அணி

b)

திரிபு அணி

c)

மடக்கு அணி

d)

ஐய அணி

12.

பாகம் 2 : நாடகம்


கீழ்க்காண்பனவற்றுள் எது கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் துணைக்கருப்பொருள் அல்ல

a)

உழவுத்தொழில் போற்றுதற்குரியது

b)

தீர விசாரித்து முடிவெடுத்தலே சிறப்பு

c)

ஆணவமே வெற்றிப்பெறத் துணைப்புரியும்

d)

சுதந்திர உணர்வு சாதனைக்கு வழிவகுக்கும்

13.

கவிச்சக்கரவர்த்தி நாடக ஆசிரியர் ஈடுபட்டத் துறைகள் மூன்றனைக் கண்டறிக.

a)

கல்வித்துறை

b)

பத்திரிக்கைத்துறை

c)

பாடல்துறை

d)

இலக்கியத்துறை

14.

கதைப்பாத்திரங்களே கதையைக் கூறிக் கதையை நகர்த்துதல் என்பது என்ன உத்தி?

a)

கதைகூறல் உத்தி

b)

முன்னோக்கு உத்தி

c)

பின்னோக்கு உத்தி

d)

நிரட்சி உத்தி

15.

மேற்காணும் சூழலில் வெளிப்படும் மொழிநடை யாது?

a)

வருணனை

b)

சந்தநடை

c)

காதல் மொழி

d)

இலக்கிய நடை

16.

இச்சூழலில் வெளிப்படும் கம்பரின் மூன்று பண்புநலன்கள் யாவை?

a)

ஆழ்ந்த தமிழறிவு கொண்டவர்

b)

துணிச்சல் மிக்கவர்

c)

அறியாமையைச் சுட்டிக்காட்டுபவர்

d)

தற்பெருமைக் கொண்டவர்

17.

இச்சூழல் இடம்பெற்ற இடப்பின்னணி யாது?

a)

திருவெண்ணெய் நல்லூர்

b)

பாண்டிய நாடு

c)

சடையப்பர் வீடு

d)

சோழன் அரசவை

18.

தமிழ் தங்கள் அளவோடு நின்றுவிடவில்லை” என்பதன் சூழலுக்கேற்ற பொருள் யாது?

a)

தமிழ்மொழி ஓட்டக்கூத்தர் அறிந்த அரண்மனை வழக்கோடு நிறைவு பெற்றுவிடுவதில்லை.

b)

தமிழ்மொழி அரண்மனை வழக்கோடு நின்றுவிடவில்லை

c)

தமிழ்மொழி சோழன் அறிந்த அளவோடு நின்றுவிடவில்லை

d)

தமிழ்மொழி கம்பர் அறிந்த அளவோடு நின்றுவிடவில்லை

19.

கீழ்க்காணபனவற்றுள் எது கம்பரின் பண்புநலன் அல்ல?

a)

தானே புகழைத் தேடிச்செல்பவர்

b)

மரபுகளை மீறுபவர்

c)

போரை வெறுப்பவர்

d)

செய்நன்றி மறவாதவர்

20.

கவிச்சக்கரவர்த்தி நாடக ஆசிரியரின் இயற்பெயர் யாது?

a)

கு. அழகுச்சாமி

b)

கு. அழகிரிசாமி

c)

கு. அழகிரி

d)

கு. அன்புச்சாமி

21.

கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் புலவர்கள் மூவரைக் குறிப்பிடுக.

a)

சோழன்

b)

ஒட்டக்கூத்தர்

c)

குணவீரப் பண்டிதர்

d)

கம்பர்

22.

கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் காலப்பின்னணி யாது?

a)

13-ஆம் நூற்றாண்டு

b)

பாண்டியன் ஆட்சிக்காலம்

c)

10-ஆம் நூற்றாண்டு

d)

மூவேந்தர் ஆட்சிக்காலம்

23.

கவிச்சக்கரவர்த்தி நாடகத்தில் ஆள்வோர் சமுதாயத்தைச் சார்ந்த இருவரைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

அரசன்

b)

நடனக் கலைஞர்கள்

c)

அந்தணர்

d)

அரசவைப் புலவர்கள்

24.

கவிச்சக்கரவர்த்தி நாடகம் என்ன நோக்குநிலையில் அமைந்துள்ளது?

a)

தன்மை நோக்குநிலை

b)

புறநோக்குநிலை

c)

அரண்மனை நோக்குநிலை

d)

ஆசிரியர் நோக்குநிலை

25.

கவிச்சக்கரவர்த்தி நாடகத்தில் ஒட்டக்கூத்தரின் வழி வெளிப்படும் படிப்பினை யாது?

a)

உழவுத்தொழிலைப் போற்ற வேண்டும்

b)

சான்றோரைப் போற்ற வேண்டும்

c)

தோல்வியை ஏற்கும் மனநிலை வேண்டும்

d)

துன்பத்தில் உள்ளவருக்கு உதவ வேண்டும்

26.

கம்பர் குறித்த சரியான இரண்டு கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

சோழனின் அரசவைப் புலவர்

b)

திருவழுந்தூர் காளிக்கோயில் பூசாரியான ஆதித்தரின் மகன்

c)

திருவென்ணேய் நல்லூர் கொடு நெஞ்சரான சடையப்ப வள்ளலின் ஆதரவில் வளர்கிறார்

d)

கூத்தர் மீது தவறான எண்ணம் கொண்டவர்.

27.

அகல் விளக்கு நாவலாசிரியர் மு. வரதராசன் பெற்ற விருது யாது?

a)

பாரத் ரத்னா விருது

b)

தமிழ்த்தென்றல் திரு. வி.க. விருது

c)

பேரறிஞர் அண்ணா விருது

d)

இந்திய ஜனாதிபதியின் சாகித்திய அகாடெமி விருது

28.

அகல் விளக்கு நாவலில், மூடநம்பிக்கை வாழ்க்கையைச் சீரழிக்கும் என்பதற்குச் சான்றாக விளங்கியவர் யார்?

a)

சாமண்ணா

b)

மாலன்

c)

சாந்தலிங்கம்

d)

சந்திரன்

29.

மேற்காணும் கூற்று உணர்த்தும் உத்தி யாது?

a)

கடித உத்தி

b)

கதை கூறல் உத்தி

c)

உரையாடல்

d)

நனவோடை

30.

மேற்காணும் கூற்று எவ்வகை மொழிநடை?

a)

பேச்சு மொழி

b)

மொழியணிகள்

c)

வருணனை

d)

இலக்கிய நடை

31.

மேற்காணும் சூழல், கதைப்பின்னலில் எந்தப்பகுதி?

a)

உச்சம்

b)

சிக்கல்

c)

முடிவு

d)

வளர்ச்சி

32.

இப்படிப்பினைக்குப் பொருத்தமான கதைமாந்தர்கள் யாவர்?

a)

வேலய்யன், கயற்கண்ணி

b)

வேலய்யன், பாக்கிய அம்மையார்

c)

சந்திரன், வள்ளி

d)

சந்திரன், இமாவதி

33.

கீழ்க்காண்பனவற்றுள் எது அகல் விளக்கு நாவலின் உச்சம்?

a)

வேலய்யன் சந்திரனுக்குத் தன் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறான்

b)

தொழுநோயாளியான சந்திரனைக் கண்டு வேலய்யன் மனம் கலங்குகிறான்

c)

இமாவதி மீது கொண்ட காதல் நிறைவேறாததால் கல்லூரியை விட்டுத் தலைமறவான சந்திரனை வேலய்யன் தேடுகிறான்

d)

நோய் முற்றி சந்திரன் இறக்கிறான்; தன் நண்பனின் வேண்டுகோளுக்கு இணங்கி வேல்ய்யன் இறுதிக் காரியங்களை நிறைவேற்றுகிறான்

34.

இச்சூழலில் வெளிப்படும் வேலய்யனின் தந்தையாரின் பண்புநலன் யாது?

a)

மகனின் கல்வியில் அக்கறை காட்டுபவர்

b)

மகனின் உணர்வைப் புரிந்து கொள்ளாதவர்

c)

மகனின் மீது வெறுப்புக் கொண்டவர்

d)

மகனின் நடவடிக்கைகளை அறியாதவர்

35.

இச்சூழலில் வெளிப்படும் உத்தி யாது?

a)

நனவோடை

b)

கடித உத்தி

c)

உரையாடல்

d)

கதை கூறல்

36.

‘நீ இந்தக் கதியாக இருக்கிறாய்’ என்பதன் சூழலுக்குகேற்ற பொருள் யாது?

a)

வேலய்யன் கல்வியில் பின்தங்கி இருக்கிறான்

b)

வேலய்யன் படிப்பில் அக்கறை காட்டாமல் விளையாட்டுத்தனமாக இருக்கிறான்

c)

வேலய்யன் பெற்றோர் பேச்சைக் கேட்காமல் விளையாட்டுத்தனமாக இருக்கிறான்

d)

வேலய்யன் சந்திரனைப்போல் சிறந்து விளங்காமல் இருக்கிறான்

37.

அகல் விளக்கு நாவலின் கருப்பொருள் யாது?

a)

நல்லெண்ணமும் மனக்கட்டுப்பாடும் நல்வாழ்வுக்கு அடித்தளம்

b)

நல்லெண்ணமும் நல்லொழுக்கமும் நல்வாழ்வுக்கு அடித்தளம்

c)

நல்லொழுக்கமும் மனக்கட்டுப்பாடும் வெற்றிக்கு அடித்தளம்

d)

நல்லொழுக்கமும் மனக்கட்டுப்பாடும் நவ்வாழ்வுக்கு அடித்தளம்

38.

அகல் விளக்கு நாவலின் எதிர்மறைக் கதைப்பாத்திரம் யார்?

a)

சந்திரன்

b)

வள்ளி

c)

இமாவதி

d)

எதிர்மறைக் கதைப்பாத்திரம் இல்லை

39.

சந்திரன் பிறந்த ஊர் எது?

a)

வாலாசாப்பேட்டை

b)

பெருங்காஞ்சி

c)

வேலூர்

d)

சென்னை

40.

அகல் விளக்கு நாவலில் வாழ்க்கையில் பொறுமை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை வேண்டும் எனும் படிப்பினையை உணர்த்தும் இரு கதைப்பாத்திரங்கள் யாவர்?

a)

வேலய்யன்

b)

பாக்கிய அம்மையார்

c)

மணிமேகலை

d)

கயற்கண்ணி