NEW
Font size
Worksheetsவரலாறு(மலேசியர்கள்)
Total questions: 10
Worksheet time: 3mins
சரவாக் இசைக் கருவியாம்
சஞ்சலம் நீங்கிடச் செய்யுமாம்
நரம்புகள் எழுப்பும் நாதத்திலே
நல் இசை அதையும் தந்திடுமாம்.
வீணை
சாப்பே
சொம்போத்தோன்
ரெபாப்
மனம் விரும்பும் கதையாம்
மகிழ்வு தரும் கதையாம்
கனவு காணும் இளைஞனின்
கருத்து நிறைந்த கதையாம்.
புத்ரி சந்துபோங்
மூக்குத் திரும்பிய டோயான்
யானையைக் கண்ட ஆறு குருடர்கள்
மாட் ஜெனின் பகற்கனவு
3.தமிழ் இசைக் கருவியாம்
தகிட திமி தாளமாம்
அமிர்தம் போன்ற இசையினை
அள்ளித் தரும் மேளமாம்.
வீணை
தாகு
தபேலா
கெடொம்பாக்
4.வாய் மொழியாய் கதைகளை
வாஞ்சையுடன் சொல்லிடும்
வல்லமை தான் கொண்டவர்
வகையறிந்த வித்தகர்.
பங்லிபூர் லாரா
தாத்தா
பெற்றோர்
பாட்டி
5.பழங்குடி மக்களின் பண்பாட்டை
பறைசாற்று மொரு நடனம்
செத்தோங் மூங்கில் இசையுடன்
சிறப்பாய் ஆடிடும் நடனம்.
இனாங்
ஙாஜாட்
சேவாங்
மாக்யோங்
6.சுரங்கள் ஏழு மீட்டிட
சுந்தர கானம் பிறக்குமாம்
மரத்தில் கட்டிய நரம்புகளும்
மங்கலத் தமிழிசை தந்திடுமாம்.
தாகு
கட்டைக் குழல்
செருலீங்
வீணை
7.உழவர் உள்ளக் களிப்பை
உணரச் செய்யும் நடனம்
உலகப் பாரம்பரிய எனும்
உன்னத நிலைபெற்ற நடனம்.
பரத நாட்டியம்
பங்ரா
சேவாங்
இனாங்
8.அரசர் விரும்பும் இசையாம்
அதிகாரப் பூர்வ இசையாம்
அரண்மனை நிகழ்வுகளில்
அரங்கேறும் இசைக் கருவியாம்.
கட்டைக் குழல்
கோங்
கொம்பாங்
கெடொம்பாக்
9.வெள்ளைக் கறுப்புக் காய்களை
வியூகம் அமைத்து நகர்த்தியே
பலகை மீது விளையாடும்
பாரம்பரிய மிகு விளையாட்டு.
கல்லாங்காய்
வெய்சி
பல்லாங்குழி
சியாங்சி
10.மரத்தில் செய்யும் கருவியாம்
மயக்கும் தோல் இசைக்கருவியாம்
சீனர் இராணுவம் பயன்படுத்திய
சிறப்புமிகு தாளக் கருவியாம்.
போ
கோங்
தாகு
தபேலா
