wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழிகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

"ஆடமாட்டாதவள் ___________ கோணல் என்றாளாம்" பழமொழியை நிறைவு செய்க.

a)

மேடை

b)

கூடம்

c)

அரங்கம்

d)

சலங்கை

2.

"பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்" எனும் பொருளுக்கு ஏற்ற பழமொழியை தேர்ந்தெடுக.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

d)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

3.

"___________ பழக்கம் ___________ மட்டும்", பழமொழியை நிறைவு செய்க.

a)

தொட்டில், கட்டில்

b)

சுடுகாடு, தொட்டில்

c)

பிறக்கும், இறக்கும்

d)

தொட்டில், சுடுகாடு

4.

படத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

d)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

5.

படத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

d)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

6.

"யாருடைய உதவியும் இல்லாமல் சுயமாக அபிவர்தன் மளிகை கடையைத் திறந்து சிறப்பாக வியாபாரம் செய்து வருகிறான்." சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

d)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

7.

"ஒருவர் இளமையில் கைக்கொள்ளும் பழக்க வழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்" எனும் பொருளுக்கு ஏற்ற பழமொழியை தேர்ந்தெடுக.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

தன் கையே தனக்கு உதவி

c)

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்

d)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்

8.

"தன் கையே தனக்கு உதவி" எனும் பழமொழியின் விளக்கத்தைக் கண்டறிக.

a)

ஒவ்வொருவருக்கும் மனக்கட்டுப்பாடும் விடாமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.

b)

ஒவ்வொருவருக்கும் மனமகிழ்ச்சியும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.

c)

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் இருக்கக்கூடாது. பிறர் உதவியை எதிர்பார்த்து வாழ வேண்டும்.

d)

ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையும் சுயமுயற்சியும் வேண்டும். பிறர் உதவியை எதிர்பார்த்து வாழக்கூடாது.

9.

சரியான பொருளைக் கொண்ட பழமொழிகளைத் தேர்ந்தெடுக.

a)

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் - ஒருவர் இளமையில் கைக்கொள்ளும் பழக்க வழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் தொடரும்.

b)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும் - ஒவ்வொரு காசையும் கவனத்துடன் சேமித்து வந்தால் நாளடைவில் சிறுதொகையாகிவிடும்.

c)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான் - பல நூல்களைப் படிப்பதனால் அறிஞனாகத் திகழலாம்.

10.

"ஒழுங்காக மீள்பார்வை செய்யாத மகிலன், தேர்வில் குறைந்த புள்ளிகள் எடுத்தான். தன் தோல்விக்கு ஆசிரியர்களே காரணம் என்று தன் அப்பாவிடம் கூறினான்." சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.

a)

ஆடமாட்டாதவள் கூடம் கோணல் என்றாளாம்

b)

கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்

c)

தன் கையே தனக்கு உதவி

d)

ஒரு காசு பேணின் இரு காசு தேறும்