wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

PENTAKSIRAN SUMATIF PERTENGAHAN TAHUN 2021, B.TAMIL TING.3

Total questions: 40

Worksheet time: 1hrs 20mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.


மழைக்காகச் சாலையோரத்தில் இருந்த கடையில் ஒதுங்கிவிட்டு, மழை நின்றதும் சாலையில் நடக்கத் தொடங்கிபோது, வீசிய காற்று உடலைக் குளிரச் செய்தது.

a)

சிலு சிலு

b)

பர பர

c)

துரு துரு

d)

தள தள

2.

கூட்டுப்பணியின் போது ____________ என அங்கும் இங்கும் ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்த அவ்விளைஞன் திடீரென மயங்கி விழுந்தது எல்லாருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

a)

கடகட

b)

துருதுரு

c)

சிலுசிலு

d)

தளதள

3.

கீழ்க்காணும் வாக்கியங்களில் இரட்டைக்கிளவியைச் சரியாகப் பயன்படுத்தியுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

இடைவிடாது பெய்த மழையால் தளதள எனச் செழிப்பாக வளர்ந்திருந்த தக்காளிச் செடிகள் வெள்ளத்தில் மூழ்கின.

b)

அருணன் தன் பள்ளிப் பாடங்களைச் சிலுசிலு என செய்து முடித்தான்.

c)

பலமாக வீசிய காற்றால் மரத்தின் கிளை ஒன்று பரபர என முறிந்து விழுந்தது.

d)

நள்ளிரவில் யாரோ வீட்டின் கதவை துருதுரு எனத் தட்டும் ஓசை கேட்டுத் அல்லி திடுக்கிட்டு எழுந்தாள்.

4.

தாயின் அன்பிற்கு ___________________ இவ்வுலகில் வேறு எதையும் ஒப்பிட்டுக் காட்ட முடியாது எனக் கூறித் தன் உரையை முடித்தார் தாயம்மா.

a)

அடக்க ஒடுக்கமாக

b)

ஈடு இணையாக

c)

ஊண் உறக்கமாக

d)

சீரும் சிறப்புமாக

5.

இந்நாட்டில் வறுமையை ஒழித்து, பொருளாதாரத்தில் நலிவுற்றிருக்கும் மக்கள் நல்வாழ்வு பெற பாடுபடுவதே, தம் அரசாங்கத்தின் தலையாய நோக்கம் எனப் பிரதமர் சூளுரைத்தார்.

a)

ஈடு இணை

b)

ஊண் உறக்கம்

c)

அடக்க ஒடுக்கம்

d)

ஏழை எளியவர்

6.

கீழ்க்காணும் வாக்கியங்களில் இணைமொழி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நம் ஆரோக்கிய வாழ்வுக்கு ஏற்ற அளவிலான ஊண் உறக்கம் அவசியம்.

b)

தானப்பன் தம் குடும்ப பொருளாதார முன்னேற்றத்திற்காக ஊண் உறக்கம்

இன்றி உழைக்கிறார்.

c)

தெய்வத்திற்கு ஈடான ஊண் உறக்கம் அற்ற பிள்ளைகள் தீய வழிகளில் செல்லாதிருக்க அவர்களிடம் பெற்றோர் அன்பு செலுத்த வேண்டும்.

d)

ஊண் உறக்கம் இன்றி உடலை வருத்தி வேலை செய்வது பல நோய்கள் வர காரணமாக இருக்கின்றது.

7.

கீழ்க்காணும் செய்திக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


கோலாலம்பூர், மார்ச் 31:- நாட்டின் மிகப் பெரிய பணமோசடி கும்பலின் தலைவரான, டத்தோஸ்ரீ நிக்கி லியோ சீன் ஹீ, அவரது குழு உறுப்பினர்கள் ஆகியோரை வேட்டையாட அமைக்கப்பட்ட ‘ஓப்ஸ் பெலிகன் 3.0’-இன் தகவல்களை அதிகாரிகளும் காவல் துறையினர் சிலரும் கசியவிட்டதாகக் காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

-செல்லியல் மின்னிதழ்

a)

இலவு காத்த கிளி போல

b)

வேலியே பயிரை மேய்ந்தாற்போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

மலரும் மணமும் போல

8.

கீழ்க்காணும் உவமைத்தொடர் இணைகளில் சரியான பொருளைக் கொண்டுள்ள இணையைத் தெரிவு செய்க.

a)

தூண்டில்காரனுக்குத்தக்கை மேல் கண் போல -----

தன் செயலில் கவனமாக இருத்தல்

b)

இலவு காத்த கிளி போல ----- காத்திருந்து வெற்றியடைதல்

c)

ஊமை கண்ட கனாப் போல -----தெளிவாகத் தெரியாமை

d)

மலரும மணமும் போல ----- மிகவும் வாசனையாக இருத்தல்

9.

RM500-ஐ குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் சேர்த்தால் RM50,000 வரை அரசாங்க உதவித் தொகை பெறலாம் என்ற புலனத் தகவலை நம்பி பணத்தைச் செலுத்தி ஏமாந்து போனதை யாருக்கும் சொல்ல முடியாமல் தவித்தாள் புகழ்மதி.

a)

மலரும் மணமும் போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

இலவு காத்த கிளி போல

d)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

10.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


வீட்டு வேலைகளை முறையாக செய்து முடிக்காத அமுதாவை அம்மா கண்டித்தார்.

a)

உடும்புப்பிடி

b)

தலை வணங்குதல்

c)

கானல் நீர்

d)

இடித்துரைத்தல்

11.

கீழ்க்காணும் உரையாடலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

தாய் : மகனே, உனக்கு ஏற்ற பெண்ணைப் பார்த்து வந்திருக்கிறேன்!

திருமணம் செய்துகொள்.


மகன் : இல்லை அம்மா! நான் மணந்தால் மகாதேவியைத்தான் மணந்து

கொள்வேன்.


தாய் : அப்படிப் பேசாதே, மகனே! உன் எண்ணத்தை மாற்று. சம்மதம் சொல்.


மகன் : முடியாது அம்மா. நான் மணந்தால் மகாதேவியைத்தான் மணப்பேன்;

இல்லையென்றால் மரணதேவியைத் தழுவுவேன். என்னை

வற்புறுத்தாதீர்கள்!

a)

உடும்புப்பிடி

b)

கானல் நீர்

c)

ஈயாடவில்லை

d)

இடித்துரைத்தல்

12.

தன்னைப் பெற்று, வளர்த்து, படிக்க வைத்து வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு உயர்த்திய தன் பெற்றோரின் தியாகத்தை மதித்துப் போற்றினான் பாரிவேந்தன்.

a)

ஈயாடவில்லை

b)

உடும்புப் பிடி

c)

கானல் நீர்

d)

தலை வணங்குதல்

13.

அரை குறையாகத் தெரிந்ததைக் கொண்டு மின்சாரத்தில்

ஏற்பட்ட பழுதைச் சரி செய்ய முயன்ற முத்தழகன் மின்சாரம் தாக்கி மூன்று மாதம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுத்

திரும்பினான்.

a)

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

b)

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

c)

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

d)

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

14.

எந்த விதமான காரியங்களைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே கருத்தைச் செலுத்த வேண்டும்.

a)

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

b)

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

c)

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

d)

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

15.

மாணவப் பருவத்தை நன்கு பயன்படுத்தி கல்விக் கற்று

வாழ்வில் உயர வேண்டும். அதைவிடுத்து, இக்காலத்தை வீணே செலவு செய்துவிட்டுப் பிற்காலத்தில் வருந்தி ஆகப்போவது எதுவுமில்லை.

a)

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

b)

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

c)

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

d)

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

16.

கீழ்க்காணும் திருக்குறளில் கருமையாக்கப்பட்டுள்ள சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


இழுக்கல் உடையூழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

a)

உடைமை

b)

நன்னடத்தை

c)

வழுக்குநிலம்

d)

அறிவுரை

17.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


மாறன் நல்லமுறையில் கூறிய அரிய கருத்துகளைக் கேட்டு அதன்படி அவ்வூர் மக்கள் துலங்கினர்.

a)

இழுக்கல் உடையூழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.

b)

விரைந்து தொழில்கேட்டும் ஞாலம் நிரந்தினிது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

c)

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்.

d)

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக் கேட்ட தாய்.

18.

கீழ்க்காணும் திருக்குறளின் விடுப்பட்ட அடியைத் தெரிவு செய்க.


சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

______________________________________________

a)

மிகைநாடி மிக்க கொளல்

b)

தன்னையே கொல்லும் சினம்

c)

சொல்லிய வண்ணம் செயல்

d)

இழுக்கா இயன்றது அறம்

19.

கீழ்க்காணும் செய்யுளின் முதல் இரு அடிகளைத் தெரிவு செய்க.


____________________________________________________


___________________________________________________

உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்

பெருமைபெறும் நினது புகழ் பேச வேண்டும் பொய்மை

பேசா திருக்க வேண்டும்.

a)

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே யென்று எண்ண வேண்டும்

b)

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடயமுன் நிற்க வேண்டும்.

c)

வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே

தானே சிறியார் தொடர்பு வேண்டும்

d)

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்

20.

கொடுக்கப்பட்டுள்ள செய்யுளடிகளுக்கு மிகப் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.


உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று

பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்.

a)

மனதில் ஒன்றும் வெளியில் ஒன்றுமாகப் பேசுவோரின் தொடர்பு எனக்குக் கிடைக்காதவாறு அருள் புரிய வேண்டும்.

b)

உன் பெருமை மிக்க புகழையே என்றும் நான் பேசுபவனாக இருக்க வேண்டும்.

c)

ஒரே மனநிலையுடன் உனது திருவடிகளை என்றும் நினைக்கின்ற நல்லவர்களின் நட்பு எனக்குக் கிடைக்க அருள் புரிய வேண்டும்.

d)

நான் என்றும் பொய் பேசாதவனாக இருக்க வேண்டும்.

21.

கீழ்க்காணும் வாக்கியங்களில் சரியான எதிர்மறைவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

என் தங்கை செடி நடுவாள்.

b)

என் தங்கை செடி நடாள்.

c)

என் தங்கை செடி நட்டாள்.

22.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் அகச்சுட்டுச் சொற்களைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க.

a)

அப்பையன்

b)

இவள்

c)

இந்நாடு

d)

அவ்வூர்

23.

பின்வரும் வாக்கியங்களில் காரணப்பெயர் இடம் பெற்றுள்ள வாக்கியம் எது?

a)

வானூர்தியின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அஃது அவசரமாகத் தரையிறங்கியது.

b)

மண் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த விஜயன் தங்கப் புதையலைக் கண்டெடுத்தான்.

c)

நீண்ட நாள்கள் மழை பெய்யாததால் கடும் வறட்சியினால் அவ்வூர் மக்கள் நீரின்றித் தவிக்கின்றனர்.

d)

சோற்றில் கல் இருந்ததால் அவ்வாடிக்கையாளர் நேரே அவ்வுணவகத்தின் உரிமையாளரிடம் சென்று முறையிட்டார்.

24.

கீழ்க்காண்பனவற்றுள் குன்றிய வினை வாக்கியங்களைத் தெரிவு செய்க.


I. குதிரை வேகமாக ஓடியது.


II. ஞாயிறுதோறும் மாலதி வீட்டைக் கழுவிச் சுத்தம் செய்வாள்.


III. நான் களைப்புற்றதால் படுக்கையில் படுத்தேன்.


IV. இரவு முழுவதும் என் அறையின் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

a)

I, II, III

b)

I, III, IV

c)

I, II, IV

d)

II, III, IV

25.

பின்வருவனவற்றுள் நான்காம் வேற்றுமை உருபு ஏற்று வந்துள்ள வாக்கியம் எது?

a)

திருக்குறளுக்கு உரை எழுதிய உரையாசிரியர்களுள் டாக்டர் மு. வரதராசனின் விளக்கம் எளிமையானதாகும்.

b)

சோழ மன்னன் கம்பனையும் ஒட்டக்கூத்தரையும் அழைத்து இராமாயணத்தைத் தமிழில் எழுதுமாறு பணித்தார்.

c)

மாதவியின் அழகில் மயங்கிய கோவலன் அவள் மீது மையல் கொண்டான். எவ

d)

எவரெஸ்ட் மலை ஏறி வெற்றியோடு திரும்பிய மகேந்திரனை நாடே வரவேற்றது.

26.

கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுக்கு மிகப் பொருத்தமான வாக்கிய வகை யாது?

நீடுழி வாழ்க!

a)

செய்தி வாக்கியம்

b)

உணர்ச்சி வாக்கியம்

c)

விழைவு வாக்கியம்

27.

பின்வரும் வாக்கியங்களில் இடுகுறிப்பெயர் ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

பிறந்த மண்ணை நேசிப்பது அனைவரின் கடமையாகும்.

b)

பயணிகளை ஏற்றிச் சென்ற சுற்றுலாப் பேருந்து விபத்துக்குள்ளாணது.

c)

குழந்தை அணிந்திருந்த வளையல்கள் கழன்று விழுந்தன.

d)

கணினி இன்று எல்லாத்துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

28.

பின்வருவனவற்றுள் எது சரியாக வலிமிகுந்துள்ளது?

a)

சென்று + கண்டான்= சென்றுக் கண்டான்

b)

மேலிருந்து + பார்த்தான் = மேலிருந்துப் பார்த்தான் நாடு

c)

நாடு + பிடித்தான் = நாடுப்பிடித்தான்

d)

இனி + கொடு = இனிக்கொடு

29.

பின்வரும் வாக்கியத்திற்கு ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க.


கந்தனுக்குப் பணக்கஷ்டம்_______________ . அவன் தன் அண்ணனிடம் கடன் கேட்டான். __________________ அவன் முயற்சி கைகூடவில்லை.

a)

எனினும் - ஆகவே

b)

ஆகவே - ஆகையால்

c)

ஆனால்- எனினும்

d)

ஆகையால் - எனினும்

30.

கீழ்க்காணும் சொற்றொடர் வலிமிகுவதற்கான இலக்கண விதி யாது?


காணச் சென்றான்

a)

பெயரெச்சத்தின் பின் வலிமிகாது.

b)

அகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகும்.

c)

இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வலிமிகும்.

31.

சேர்த்தெழுதுக.


மரம் + சாய்ந்தது

a)

மரச்சாய்ந்தது

b)

மரங்சாய்ந்தது

c)

மரஞ்சாய்ந்தது

d)

மரம் சாய்ந்தது

32.

பிரித்து எழுதுக.


சிற்றூர்

a)

சிறு + ஊர்

b)

சிறிய + ஊர்

c)

சிறியது + ஊர்

d)

சிறுமை + ஊர்

33.

கீழ்க்காணும் டாக்டர் மு.வரதராசனாரின் கூற்று உணர்த்த வரும் முக்கியக் கருத்து யாது?


தடுமாற்றமான மனப்பான்மை உள்ளவர்கள்

சினிமாக்களாலும் கதைகளாலும் எளிதில் கெட்டுப் போவார்கள்.

-டாக்டர் மு.வரதராசனார்

a)

சினிமா நம்மை தீய வழிக்கு இட்டுச் செல்கிறது.

b)

மன தடுமாற்றம் உள்ளவர்களே சினிமாக்களைப் பார்ப்பர்.

c)

வாழ்க்கையில் வெற்றி பெற மன உறுதி வேண்டும்.

34.

கீழ்க்காணும் விளம்பரத்தின் நோக்கம் யாது?


மலேசிய வானொலியின் அன்பான நேயர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு, 'உள்நாட்டுப் பழங்கள் உண்போம்' எனும் பரப்புரையும் விழாவும் எதிர்வரும் ஜூன் மாதம் விமரிசையாக நடைபெற உள்ளன. உள்நாட்டுப் பழங்கள் நம் மண்ணில் விளைந்தவை; புத்தம் புதியவை அதிகச் சத்து நிறைந்தவை; விலை மலிவானவை எனப் பல நன்மைகள் உள்ளன. 'உள்நாட்டுப் பழங்கள் உண்போம்' விழாவுக்கு வாருங்கள்.

a)

உள் நாட்டுப் பழங்களின் விற்பனையை அதிகரிப்பது.

b)

வெளி நாட்டுப் பழங்களின் இறக்குமதியைக் குறைப்பது.

c)

உடல் நலனைப் பேணுவதில் உள் நாட்டுப் பழங்களின் சிறப்புகளை எடுத்துரைப்பது.

35.

கீழ்க்காணும் பனுவலை வாசித்து, பாராட்டைப் பற்றிய தவறான கூற்றைத் தேர்ந்த்தெடு ?


பாராட்டுகள் ஒரு மனிதனை மகிழ்ச்சிப்படுத்தும். அவனுள் வெற்றிக் களிப்பை உண்டாக்கும்; ஊக்கப்படுத்தும். தான் இன்னும் சிறப்பாக இயங்கவேண்டும் எனும் உத்வேகத்தை அளிக்கும். அவன் செய்யும் பணியின்பால் ஓர் ஈர்ப்பை உண்டாக்கும். ஆகவே. நல்லதை மனமுவந்து பாராட்டுங்கள்.

a)

வெற்றிக் களிப்பை ஏற்படுத்தும்.

b)

நல்ல பண்பை வளர்க்கும்.

c)

செய்யும் தொழிலில் ஆர்வத்தை ஏற்படுத்தும்.

36.

இக்விதையின் கருப்பொருள் யாது?


ஆயிரம்பேர் ஒன்றாகக் கூடித் தேரை

அசைத்திழுக்கும் போதேதான் வலிமை சேரும்! ஆயிரமாய்ச் சேர்ந்தால்தான் வலிமை சேரும்!

அஞ்சாமல் பலதொழிலும் செய்ய லாமே!

a)

கூட்டுறவு

b)

வலிமை

c)

அஞ்சாமை

37.

பின்வரும் நாளிதழ்ச் செய்தியில் காணப்படும் இலக்கணப் பிழை யாது?


தமிழ் இளைஞர் மணிமன்றத்தின் மூத்த சகோதரர்களுக்கு பேரவைத் தலைவர் அழைப்பு.

a)

இரண்டாம் வேற்றுமை உருபுக்குப்பின் வலிமிகவில்லை. உ

b)

உயர்திணைப் பெயருக்குப் பின் வலிமிகுந்துள்ளது.

c)

நான்காம் வேற்றுமை உருபுக்குப்பின் வலிமிகவில்லை.

d)

பெயரெச்சத் தொடருக்குப்பின் வலிமிகுந்துள்ளது.

38.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எஃது உடன்பாட்டு வினையைக் குறிக்கும் சொல்லாகும்?

a)

தாரார்

b)

தந்தார்

c)

வாரேன்

d)

படியேன்

39.

சினைப்பெயரைக் கொண்டிருக்கும் சரியான வாக்கியம் எது?

a)

காகம் வடையுடன் மாமரத்தின் கிளையில் அமர்ந்தது.

b)

மலேசியா காடுகள் நிறைந்த வளமான நாடாகும்.

c)

தீபாவளிப் பண்டிகை ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.

d)

சுந்தரம் கடற்கரையில் பொரியல் விற்றான்.

40.

கீழ்க்காணும் சொற்களில் தன்வினைக்கு ஏற்ற பிறவினைச் சொல் அடங்கிய பொருத்தமான விடையைத் தெரிவு செய்க.

a)

கற்றான்- கற்பித்தான்

b)

வந்தான் - வந்திலன்

c)

கூவும் - கூவா

d)

வரைந்தான் - வரையப்பட்டது