wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

சிந்திக்க சில நிமிடங்கள்

Total questions: 50

Worksheet time: 27mins

Name
Class
Date
1.

தந்தை மகனுக்கு அறிவுரை வழங்கினார். இவாக்கியம்

a)

கலப்பு வாக்கியம்

b)

தனி வாக்கியம்

c)

தொடர் வாக்கியம்

d)

கூட்டு வாக்கியம்

2.

மருள் கொண்ட உள்ளத்தினர் அமைதி காணர். மருள் என்பதன் எதிர்க்கருத்துச் சொல்

a)

தருள்

b)

தெருள்

c)

அருள்

d)

இருள்

3.

கடற்காற்று உடலுக்கும் உள்ளத்திற்கும் இதமாக இருந்தது. கடற்காற்று என்பது

a)

வினத்தொகை

b)

வேற்றுமைத்தொகை

c)

பண்புத்தொகை

d)

அன்மொழித்தொகை

4.

மானின் இளையது குட்டி எனப்படுவது போல, சிங்கத்தின் இளையது....

a)

போதகம்

b)

குருளை

c)

பறள்

d)

பிள்ளை

5.

பல்லி சொல்லும் என்பது போல தேனீ

a)

இரையும்

b)

கத்தும்

c)

ரீங்காரம் செய்யும்

d)

அலறும்

6.

வாழை இளம் பிஞ்சு கச்சல் என்பது போல மாவின் இளம் பிஞ்சு

a)

நுங்கு

b)

குரும்பை

c)

மூசு

d)

வடு

7.

பிறர் நம்மை இன்னார் என்று அறியாதவாறு மாறு வேடம் பூண்டு மக்கள் மத்தியில் வசித்தல்

a)

ஆச்சிரமம்

b)

அஞ்ஞாதவாசம்

c)

புகலரண்

d)

மறைவிடம்

8.

கைக் காந்தள் என்பது

a)

உருவக அணி

b)

உவமையணி

c)

தற்குறிப்பேற்ற அணி

d)

தன்மையணி

9.

பின்வருவனவற்றுள் திரிதல் விகாரம் மட்டும் பெறுவது

a)

மரம் + வேர்

b)

கடல் + கரை

c)

செய் + நன்றி

d)

மண் + பானை

10.

பண்டு + காலம் =

a)

பண்டுகாலம்

b)

பழையகாலம்

c)

பண்டைக்காலம்

d)

பண்டையகாலம்

11.

குந்தியிருந்து நின்றால் குன்றும் மாளும் என்ற பழமொழியின் கருத்து.

a)

முயற்சி ஏணி போல் உயர்த்தும்

b)

முயற்சி திருவிணையாக்கும்

c)

முயற்சி அற்றலனின் பெருஞ் செல்வம் விரைவில் அழியும்

d)

சொகுசு வாழ்கை மகிழ்ச்சியைத் தரும்

12.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

உழவனும் எருதும் வயலை நோக்கிச் சென்றன.

b)

உழவன் எருதோடு வயலை நோக்கிச் சென்றான்.

c)

உழவனும் எருதும் வயலை நோக்கிச் சென்றார்கள்.

d)

உழவனோடு எருதும் வயலை நோக்கிச் சென்றனர்.

13.

திறமையை வெளிப்படுத்துதல் என்ணும் பொருள் தரும் மரபுத்தொடர்.

a)

கை காட்டுதல்

b)

கைகொடுத்தல்

c)

கைவைத்தல்

d)

கையறுதல்

14.

தோற்றோடல் என்னும் பொருள் தரும் மரபுத்தொடர்

a)

அடி நகர்தல்

b)

அடிப்பீடுதல்

c)

அடிபிடித்தல்

d)

அடிபிறக்கிடல்

15.

ஒன்றிலும் ஈடுபடாது இருத்தலை விளக்குவதற்கு பொறுத்தமான உவமைத்தொடர்

a)

ஓடும் புளியம் பழமும் போல

b)

குடத்துக்குள் விளக்குப் போல

c)

கிணற்றுத்தவளை போல

d)

இலை மறைகாய் போல

16.

இழிவான சூழலில் நல்லார் ஒருவர் தோன்றுதல்

a)

சுழல் காற்றில் அகப்பட்ட துரும்பு போல

b)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

c)

கிணறு வெட்ட பூதம் புறப்பட்டது போல

d)

சேற்றிலே முளைத்த செந்தாமரைப் போல

17.

ஏழ்மையிலும் செம்மையாக வாழவேண்டும்

a)

உப்பிட்டவரை உள்ளளவும் நினை

b)

குடிப்பது கூழ் கொப்பளிப்பது பன்னீர்

c)

இரக்கப் போனாலும் சிறக்கப் போ

d)

எடுப்பது பிச்சை ஏறுவது பல்லக்கு

18.

வந்த மொழியே மடங்கி வேறு ஒரு பொருள் தந்து நிற்பது.

a)

சிலேடை

b)

மடக்கு

c)

மோனை

d)

எதுகை

19.

ஒரு நாளினையும் சிவந்த வாயினையும் குறிக்கும் சொல்

a)

செவ்வாய்

b)

திங்கள்

c)

புதன்

d)

வியாழன்

20.

இயற்கையாக நடைபெறும் நிகழ்ச்சியில் புலவன் தன் கற்பனைக் குறிப்பை ஏற்றிச் செல்வது

a)

ஒட்டகணி

b)

உவமைஅணி

c)

வேற்றுமை

d)

தற்குறிப்பேற்றல்

21.

அந்தக் கிழவன் பாயும் படுக்கையுமாக நீண்ட காலமாக வாழ்ந்தான், இதில் பாயும் படுக்கையும் என்பது

a)

அடுக்குத்தொடர்

b)

இரட்டைமொழி

c)

இணைமொழி

d)

இடக்கரடக்கல்

22.

ஒரு பொருளுக்கு ஒப்பாக எடுத்துச் சொல்லப்படும் மற்றொரு பொருள்

a)

எதுகை

b)

உயர்வு நவிற்சி

c)

உவமானம்

d)

சிலேடை

23.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன

a)

ஐம்பூதம்

b)

ஐந்நிலம்

c)

ஐம்புலன்

d)

ஐம்பொறி

24.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து உணர்வு.

a)

ஐம்புலன்

b)

ஐம்பொறி

c)

ஐம்பால்

d)

ஐப்பூதம்

25.

மீனா மற்றும் அமினாவின் வயதுகளின் கூட்டுத்தொகை 64 வருடங்கள் ஆகும். 7 ஆண்டுகளுக்கு முன்பு மீனாவின் வயது அமினாவின் வயதைப்போல் 9 மடங்காக இருந்தது எனின் மீனாவின் தற்போதைய வயது என்ன?

a)

32

b)

23

c)

52

d)

56

26.

யுனஷ்கோவினால் 2020ஆம் ஆண்டிற்கான உலக நூல்கள் தலைநகராக அறிவிக்கப்பட்ட நகரம் எது?

a)

நியுயோக்

b)

சிட்னி

c)

கோலாலம்பூர்

d)

தோக்கியோ

27.

கோழி முட்டையின் அடைகாத்தலின் கால அளவு எத்தனை?

a)

15

b)

21

c)

34

d)

42

28.

வலையில் மீன்கள் அகப்படும் மூலைக்கு வழங்கப்படும் பெயர்

a)

பறி

b)

மடி

c)

சுருக்கு

29.

மிகக் குறைந்த வீரர்கள் பங்குபெறும் பின்வரும் விளையாட்டு எது?

a)

காற்பந்து

b)

எல்லே

c)

வலைப்பந்து

30.

பயிர்களுக்குச் சேதம் விளைவிக்காத பிராணி எது

a)

பசு

b)

சிலந்தி

c)

கிளி

31.

அரசன் முறைக் கேடாக ஆளும் ஆட்சி

a)

கொடுங்கோல்

b)

செங்கோல்

32.

ஊதியம் பெறாமல் பலர் ஒன்றுகூடி செய்யும் வேலை

a)

சிரமதானம்

b)

கூலிவேலை

33.

40 மாணவர்கள் இருக்கும் வரிசையில் இடது புறமிருந்து 13வதாக நிற்பது கண்ணன். வலதுபுறமிருந்து 9வதாக நிற்பது வனிதா. வனிதாவின் இடபுறமிருந்து நான்காவதாக நிற்பது குமுதா எனில், கண்ணனுக்கும் குமுதாவிற்கும் இடையில் எத்தனை மாணவர்கள் உள்ளனர்.

(a)  

34.

ஒரு பெரிய பெட்டிக்குள் இரண்டு சிறிய பெட்டிகள், அந்த சிறிய பெட்டிக்குள் இரண்டு சிறிய பெட்டிகள். மொத்தம் எத்தனை பெட்டிகள்

(a)  

35.

மூன்று எண்ணிக்கைகளின் கூட்டுத்தொகை 581 ஆகும். முதல் எண்ணின் நான்கு மடங்கும் இரண்டாம் எண்ணின் ஐந்து மடங்கும் மூன்றாம் எண்ணில் ஏழு மடங்கும் சமம் எனில் முதல் எண்ணின் பெருமானம் யாது?

(a)  

36.

மனித நூலகம் எனும் எண்ணக்கரு உருவான ஐரோப்பிய நாடு

a)

டென்மார்க்

b)

அயர்லாந்து

c)

ஜேர்மனி

d)

ரஷ்யா

37.

சித்திரை புத்தாண்டிற்காக 5 நண்பர்கள் குறுஞ்செய்தி வாழ்த்துகளைப் பகிர்ந்துக் கொண்டனர். இங்கு இடம்பெற்ற குறுந்தகவல்கள் எத்தனை?

a)

16

b)

20

c)

6

38.

மனிதன் ஒருவன் படம் ஒன்றைக்காட்டிப் பின்வறுமாறு கூறினான், "எனக்கு சகோதரனோ, சகோதரியோ இல்லை. இருந்தபோதும் இப்படத்தில் இருப்பவரின் தந்தை எனது தந்தையாரின் புதல்வர் ஆவார்." இம்மனிதன் யாருடைய படத்தைக் காட்டினார்?

a)

தனது தந்தை

b)

தனது

c)

தனது மகனின்

39.

400 அரைவாசியின் அரைவாசியுடன் 5இன் இருமடங்கை கூட்டினால் கிடைக்கும் விடை.

(a)  

40.

தந்தையார் மாம்பழத்தையும் அன்னாசிப்பழத்தையும் விரும்பவதுபோல தோடம்பழத்தை விரும்புவது இல்லை. தாயார் தோடம்பழத்தையும் மாம்பழத்தையும் விரும்புகின்ற போதிலும் அன்னாசிபழத்தை விரும்புவதில்லை. நான் விளாம்பழத்தையும் மாம்பழத்தையும் விரும்புகின்றேன். நாம் மூவரும் விரும்பும் பழம் எது?

a)

விளாம்பழம்

b)

தோடம்பழம்

c)

மாம்பழம்

41.

கமலின் தங்கை சங்கீதா ஆவாள். சங்கீதாவிற்கு 3 சகோதரர்கள் 2 சகோதரிகள் இருக்கின்றனர். கமலுக்கு இருக்கும் சகோதரர்களின் எண்ணிக்கையும் சகோதரிகளின் எண்ணிக்கையும் எத்தனை

a)

சகோதரர்கள் 2 , சகோதரிகள் 2

b)

சகோதரர்கள் 2 , சகோதரிகள்

c)

சகோதரர்கள் 3 , சகோதரிகள் 3

42.

1 தொடக்கம் 30 வரையுள்ள இலக்கங்களின் கூட்டுத்தொகையாது

a)

455

b)

465

c)

475

d)

565

43.

1) 10க்கு குறைவாக ஓர் இலக்க எண்ணை எழுதுக

2) அதனை இரண்டு மடங்காக்குக.

3) அதனிலிருந்து இரண்டை கழிக்குக

4) கழித்த பின் மூன்றினால் பெருக்குக.

5) அதனை ஆறினால் வகுக்குக.

இப்போது விடை முதலில் நீங்கள் எழுதிய

a)

இலக்கத்திற்குச் சமம்

b)

இலக்கத்தைவிட ஒன்று அதிகம்

c)

இலக்கத்தைவிட ஒன்று குறைவு

44.

முயல் ஆமை

a)

தந்தி கடிதம்

b)

பொய் உண்மை

c)

இலக்கம் எழுத்து

d)

தற்பெருமை அடக்கம்

45.

மழை வெள்ளம்

a)

வரட்சி பஞ்சம்

b)

அலை சுனாமி

c)

ஓட்டம் வரட்சி

d)

காடு காட்டுத்தீ

46.

கறையான் புற்று

a)

கவிஞன் பேனா

b)

எழுத்தாளர் நூல்

c)

வைத்தியர் நோயாளி

d)

முகாமையாளர் ஊழியர்

47.

பரிசு தண்டனை

a)

விரயம் சிக்கனம்

b)

வருமானம் செலவு

c)

பாராட்டு குற்றச்சாட்டு

d)

ஓய்வு ஓய்வின்மை

48.

ஒரு கடிகாரம் சனிக்கிழமை காலை 8 மணிக்கு சரி செய்யப்பட்டது, அதன் பின்னர் அது ஒவ்வொரு மணித்தியாலமும் 5 நிமிடங்கள் பிந்தி செல்லும்மாயின் அது மீண்டும் எப்போது சரியான நேரத்தைக் கண்பிக்கும்?

a)

புதன் காலை 8.00 மணிக்கு

b)

வியாழன் காலை 8.00 மணிக்கு

c)

வெள்ளி காலை 8.00 மணிக்கு

d)

சனி காலை 8.00 மணிக்கு

49.

2021ஆம் ஆண்டின் உலகில் வாழ்வதற்கு மிகவும் ஏற்ற நகரங்கள் குறித்த அறிக்கையின்படி, முதலிடத்தில் உள்ள நகரம்

a)

ஓக்லாந்து

b)

டோக்கியோ

c)

நியுயோர்க்

d)

சிட்னி

50.

உலக அளவில் ராணுவ தளவாடங்கள் அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு எது?

a)

பிரான்ஸ்

b)

சவுதி அரேபியா

c)

சீனா

d)

இந்தியா