wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எண்களும் தொடர்வரிசைகளும்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

“வடிவியலின் தந்தை ” என அழைக்கப்படுபவர் யார் ?

a)

பிதாகரஸ்

b)

ஸ்ரீநிவாச இராமானுஜன்

c)

யூக்ளிட்

d)

கார்ல் பிரடெரிக் காஸ்

2.

ஒரு மிகை முழுவை 4 ஆல் வகுக்கும் போது
கிடை க்கும் மீதிகள் எவை ?

a)

0,1,2,3,4

b)

0,1,2

c)

-3,-2,-1,0,1,2,3

d)

0,1,2,3 

3.

 a=17 , b=5a=17\ ,\ b=5  எனில்   a=bq+ra=bq+r  என்பதை நிறைவு செய்யும்  qq  
மற்றும்  rr -ஐக்  காண்க.

a)

2,3

b)

3,2

c)

3,4

d)

4,3

4.

5 ஆல் வகுக்கும் போது மீதி 3 -ஐத் தர க்கூடிய அனைத்து மிகை முழுக்கள்?

a)

3,8,13,18,23,...

b)

2,7,12,17,22...

c)

3,5,7,9,11,...

d)

5,10,15,20,25,...

5.

1 என்ப து?

a)

பாகு எண்

b)

பகா எண்

c)

பகு எண்ணும் அல்ல பகா எண்ணும் அல்ல

d)

இரட்டை எண்

6.

ஒவ்வொரு

பகு எண்ணையும் தனித்த பகா எண்களின்

அடுக்குகளின் பெருக்கற்பலனாக எழுத இயலும். இதனையே அடிப்படை எண்ணியல் தேற்றம் என அழைக்கிறோம்.

a)

சரி

b)

தவறு

7.

ஒருவர் சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்ல இரயிலில் புறப்படுகிறார்.

அவர் தனது பயணத்தைப் புதன்கிழமை 23.30 மணிக்குத் தொடங்குகிறார். எந்தவிதத் தாமதமுமின்றி

இரயில் செல்வதாகக் கொண்டால் மொத்தப் பயண நேரம் 30 மணி நேரம் ஆகும். அவர் எப்பொழுது

டெல்லியைச் சென்றடைவார்?

a)

அவர் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு டெல்லி சென்றடைவார்.

b)

அவர் வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு டெல்லி சென்றடைவார்.

c)

அவர் வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு டெல்லி சென்றடைவார்.

d)

அவர் வெள்ளிக்கிழமை காலை 7.30 மணிக்கு டெல்லி சென்றடைவார்.

8.

கலா மற்றும் லதா இருவரும் நண்பர்கள். ”இன்று எனது பிறந்தநாள்”

எனக் கலா கூறினாள். லதாவிடம், ”உனது பிறந்தநாளை எப்போது நீ கொண்டாடினாய் ?” எனக்கேட்டாள். அதற்கு லதா ”இன்று திங்கள்கிழமை , நான் என்னுடைய பிறந்த நாளை 18

நாட்களுக்கு முன் கொண்டாடினேன்”, எனப் பதிலளித்தாள். லதாவின் பிறந்தநாள் எந்தக்

கிழமையில் வந்திருக்கும்?

a)

லதா தனது பிறந்தநாளைப் செவ்வாய்க் கிழமை கொண்டாடியிருப்பாள்.

b)

லதா தனது பிறந்தநாளைப் புதன்கிழமை கொண்டாடியிருப்பாள்.

c)

லதா தனது பிறந்தநாளைப் வியாழக்கிழமை கொண்டாடியிருப்பாள்.

d)

லதா தனது பிறந்தநாளைப் சனிக்கிழமை கொண்டாடியிருப்பாள்.

9.

முற்பகல் 8 மணிக்கு 100 மணி நேரத்திற்குப் பிறகு நேரம் என்ன?

a)

முற்பகல் 11 மணி

b)

முற்பகல் 12 மணி

c)

பிற்பகல் 11 மணி

d)

பிற்பகல் 12 மணி

10.

இன்று செவ்வாய்க்கிழமை , என்னுடைய மாமா 30 நாட்களுக்குப் பிறகு வருவதாகக்

கூறியுள்ளார். என்னுடைய மாமா எந்தக் கிழமையில் வருவார்?

a)

செவ்வாய்

b)

புதன்

c)

வியாழன்

d)

வெள்ளி