wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PENTAKSIRAN SUMATIF PERTENGAHAN TAHUN 2021- B.TAMIL T5

Total questions: 40

Worksheet time: 1hrs 20mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பவற்றுள் குற்றியலுகரத்தைப் பற்றிய பொருத்தமான கூற்றைத் தெரிவு செய்க.


i. வல்லின உகரங்கள் சொல்லின் இறுதியில் குறுகி ஒலிக்கும்

ii. குற்றியலுகரம் தனிக்குறிலை அடுத்து வராது

iii. குற்றியலுகரம் ஆறுவகைப்படும்

iv. தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின உகரம் குற்றியலுகரமாகும்

a)

i, ii, iii

b)

ii, iii, iv

c)

i, iii, iv

d)

i, ii, iii, iv

2.

சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

அரசு, சிரசு, பரிசு - உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

b)

மனு, சேது, வீடு, காது - நெடில் தொடர்க் குற்றியலுகரம்

c)

கண்டு, எருது, நன்று - மென்தொடர்க் குற்றியலுகரம்

d)

புட்டு, பட்டு, தராசு, முட்டு - வன்தொடர்க் குற்றியலுகரம்

3.

காலியான இடத்திற்கு ஏற்ற வன்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

பஞ்சு

b)

உப்பு

c)

மிளகு

d)

மருந்து

4.

கீழ்க்காணும் சொற்களுள் இடைத்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

முரடு

b)

செய்து

c)

மூன்று

d)

பட்டு

5.

கீழ்க்காணும் வாக்கியங்களில் மென்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கனத்த மழையில் நனைந்ததால் உப்பு மூட்டை கரைந்தது.

b)

பஞ்சு ஆலையில் வேலை செய்து வந்த தொழிலாளி முதலாளியானான்.

c)

பெண்கள் முக அழகு பயிற்சியில் கலந்து கொண்டனர்.

d)

அவர் மூலிகைகளால் பெட்ரோல் உற்பத்தி முறையைச் செய்து காட்டினார்.

6.

கீழ்க்காணும் வாக்கியங்களில் வன்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

கருமை நிற வண்டு அப்பூவின் மீது அமர்ந்தது.

b)

அறிவழகன் தான் நன்றாகப் படிக்கப் போவதாக வாக்குக் கொடுத்தான்.

c)

காசு கடவுளுக்குச் சமம் என்று அளந்து கொண்டிருந்தான் அருள்.

d)

தென்றல் தென்கரையை நோக்கி மெல்ல வீசியது.

7.

கீழ்க்காணும் சொற்களில்உயிர்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

திட்டு

b)

படகு

c)

விரைவு

d)

வீசு

8.

கீழ்க்காணும் சொற்களில் நெடில்தொடர்க் குற்றியலுகரச் சொல்லைத் தெரிவு செய்க.

a)

தீவு

b)

மாசு

c)

ஏழு

d)

ராமு

9.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கருமையாக்கப்பட்டிருக்கும் சொல்லின் வகையைத் தெரிவு செய்க.


கடலிலிருந்து எடுக்கப்படும் சங்கு பல வகையாகருந்தாலும், இவற்றில் வலம்புரி சங்கே சிறப்பிடம் பெறுகிறது.

a)

வன்தொடர்க் குற்றியலுகரம்

b)

மென்தொடர்க் குற்றியலுகரம்

c)

உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

d)

இடைத்தொடர்க் குற்றியலுகரம்

10.

கீழ்க்காணும் வாக்கியங்களில் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரச் சொல்லை ஏற்றிருக்கும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மகாபாரதத்தில் சகுனியின் சூது பாண்டவர்களை வென்றது.

b)

இறைவனைத் தினமும் வணங்க வேண்டும் என்பது பெரியோர் கூற்று.

c)

இக்காலத்தில் கஃசு பணமில்லாமல் எதுவும் நடக்காது.

d)

மார்புச் சளி குழந்தைகளுக்குப் பெருந்தொல்லையாக இருக்கும்.

11.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் எவ்வகை ஆகுபெயராகும்?


இளமாறன் வீட்டுக்கு வெள்ளை அடித்தான்.


a)

தொழிலாகு பெயர்

b)

இடவாகு பெயர்

c)

பண்பாகு பெயர்

d)

பொருளாகு பெயர்

12.

கீழ்க்காண்பனவற்றுள் ஆகுபெயரைத் தெரிவு செய்க.


i கார் விளைந்தது iii இனிப்பு மிட்டாய்

ii வற்றல் விற்றான் iv பொங்கல் வைத்தார்

a)

i, ii

b)

ii, iii

c)

iii, iv

d)

i, iv

13.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் எவ்வகை ஆகுபெயர்?


சீரான உணவுப் பழக்கமில்லாத வாழ்க்கை முறையினால் நீரிழிவு நோய் தாக்கப்பட்டு சிறுநீரகம் செயலிழந்தவர்களின் எண்ணிக்கையில் மலேசியா முதலிடம் வகிக்கிறது.

a)

பொருளாகு பெயர்

b)

இடவாகு பெயர்

c)

சினையாகு பெயர்

d)

காலவாகு பெயர்

14.

தொழிலாகு பெயரை ஏற்று வந்துள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மருதன் தோட்டத்துக்குச் சென்று கத்தரி நட்டான்.

b)

அருணன் கோவிலில் பெற்ற பொங்கலை உண்டான்.

c)

பினாங்கில் நடைபெற்ற கோர விபத்தைக் கண்டு நாடே அதிர்ந்தது

15.

கீழ்க்காணும் வாக்கியம் எவ்வகை ஆகுப்பெயரைக் கொண்டுள்ளது?


யாதவன் இனிப்பு உண்டான்

a)

தொழிலாகு பெயர்

b)

பண்பாகு பெயர்

c)

பொருளாகு பெயர்

d)

சினையாகு பெயர்

16.

மேற்காணும் படம் எவ்வகை ஆகுபெயரைக் குறிக்கிறது ?

a)

இடவாகு பெயர்

b)

பண்பாகு பெயர்

c)

பொருளாகு பெயர்

d)

தொழிலாகு பெயர்

17.

மேற்காணும் படம் எவ்வகை ஆகுபெயரைக் குறிக்கிறது ?

a)

இடவாகு பெயர்

b)

பண்பாகு பெயர்

c)

பொருளாகு பெயர்

d)

தொழிலாகு பெயர்

18.

கீழ்க்காண்பவற்றுள்எது தன்வினை வாக்கியம்?

a)

தம்பி படிப் பித்தான்

b)

மாதவி நடனம் ஆடினாள்

c)

தாத்தா உண்பித்தார்

d)

கலைஞர் பாடுவித்தார்

19.

தன்வினையைக் குறிக்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

கற்றார்

b)

உண்பித்தாள்

c)

எழுதுவித்தார்

d)

செய்வித்தேன்

20.

கவிஞர் முரசு நெடுமாறன் மாணவர்களுக்குக் கவிதை எழுதும் முறையைக் கற்பித்தார்.

a)

தன்வினை

b)

பிறவினை

c)

பெயர்ச்சொல்

d)

வினையெச்சம்

21.

கீழ்க்காணும் திருக்குறளுடன் தொடர்புடைய பொருளைச் சரியாக முறைப்படுத்துக.


நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு


i பழகப் பழக இன்பத்தை அதிகரிக்கும்

ii நல்ல குணமுடையவர்களின் நட்பு

iii நூலின் சிறப்பு அதிகரிப்பதுபோல

iv படிக்கப் படிக்க ஒரு நயமான

a)

i ii iii iv

b)

iv iii ii i

c)

iii i iv ii

d)

ii iii iv i

22.

கீழ்க்காணும் விளக்கத்துக்கேற்ற சரியான செய்யுளடியை எழுதுக.


பெண்கள்பாலும் பழமும் ஊட்டி வளர்க்கும் மென்மை குணமுடைய பச்சைக்கிளியும் போராட்ட குணமுடைய வலிய பருந்தும் பகைமை

நீங்கி ஒரே கூட்டிற்குள் வாழும் நிலை உள்ளது.

a)

கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

b)

அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்

ஒரு கூட்டில் வாழ உலகு.

c)

கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது

பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்!

d)

அரங்கினுக்கு அழகு செய்ய, பயில்சிறை அரச அன்னம்

பன்மலர் பள்ளி நின்றும் துயிலெழ, தும்பி காலைச்

செவ்வழி முரல்வ சோலை.

23.

கீழ்க்காணும் விளக்கத்துக்கேற்ற சரியான செய்யுளடியை எழுதுக.


அவனுடன் நான் கொண்ட அன்பானது பூமியைவிட பெரியது; வானத்தைவிட உயர்ந்தது; கடலைவிட ஆழமானது.

a)

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே

b)

என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்

வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்;

c)

குயிலினம் வதுவை செய்ய,

கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை அயில்விழி மகளிர் ஆடும்

d)

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

24.

கீழ்க்காணும் விளக்கத்துக்கேற்ற சரியான செய்யுளடியை எழுதுக.


தன் கணவன் பொருட்டு, கடுங்கதிர் வெயிலால் நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து, நாவும் உலர்ந்துபோக வாட்டமுற்றாலும் தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத பூங்கொடி போன்றவள் இவள்.

a)

கடுங்கதிர் வெம்மையில் காதலன் தனக்கு

நடுங்குதுயர் எய்தி, நாப்புலர வாடித்,

தன்துயர் காணாத் தகைசால் பூங்கொடி;

b)

குயிலினம் வதுவை செய்ய,

கொம்பிடைக் குனிக்கும் மஞ்ஞை அயில்விழி மகளிர் ஆடும்

c)

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;

நீரினும் ஆர் அளவின்றே

d)

இன்துணை மகளிர்க்கு இன்றி யமையாக்

கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது

பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்!

25.

கீழ்க்காணும் கோடிடப்பட்டுள்ள செய்யுளடிகளுக்கேற்ற சரியான விளக்கத்தை எழுதுக.


புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்

எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தேதீரும்

a)

புத்தியுள்ளவன் பலமுள்ளவன் ஆவான். வலிமை உள்ளவனுக்குப் புத்தியில்லாவிட்டால் எந்த விதத்திலும் துன்பம் வந்தே தீரும்.

b)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன் ஆவான்.

c)

மலைச் சாரலில் உள்ள கரிய கிளைகளில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களின் தேனைக் கொண்டு தேனீக்கள் பெரிய தேனடைகளைக் கட்டும் சிறந்த நாட்டைச் சார்ந்தவன் என் தலைவன்.

d)

கணவர்க்கு இனிய துணையாக விளங்கும் பெண்களுக்கு இன்றியமையாததான கற்பைக் கடமையாக மேற்கொண்ட இவளைப் போன்ற பொலிவினையுடைய தெய்வத்தை நான் கண்டதில்லை.

26.

கீழ்க்காணும் கோடிடப்பட்டுள்ள செய்யுளடிகளுக்கேற்ற சரியான விளக்கத்தை எழுதுக.


ஆறறி வதுவே அவற்றொடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

a)

ஆறறிவு பெற்ற உயிர் என்பது உடம்பினாலும் வாயினாலும் முக்கினாலும் கண்ணாலும் செவியினாலும் மனத்தினாலும் அறியும் இயல்பு உடையது என மரபுகளை நேர்மை பெற உணர்ந்தவர்கள் நெறிப்படுத்தியுள்ளனர்.

b)

சிறப்புடைய பெருமைவிளங்கும் மாந்தரைக் கண்டு பாராட்டுதலும் இல்லை. சிறுமையுடையோராய்த் தாழ்ந்து அழிபவர்களைக் கண்டு இகழ்ந்து தூற்றுதலும் இல்லை.

c)

அவன் சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும் வகையில் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான்.

d)

தன் கணவன் பொருட்டு, கடுங்கதிர் வெயிலால் நடுங்கத்தக்க துயரத்தை அடைந்து, நாவும் உலர்ந்துபோக வாட்டமுற்றாலும் தனது வழிநடைத் துன்பத்தைச் சிறிதும் உணராத பூங்கொடி போன்றவள் இவள்.

27.

கீழ்க்காணும் கோடிடப்பட்டுள்ள செய்யுளடிகளுக்கேற்ற சரியான விளக்கத்தை எழுதுக.


சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்

தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்

a)

குளிர்ந்த நிலவு போன்ற வெண்கொற்றக் குடை நிழலில் வீற்றிருக்கின்ற நளமன்னன் மகரந்தப்பொடி சிந்துகின்ற மலர்மாலையை அணிந்தவன் ஆவான். அவன் சிறந்த அறங்கள் நிலைத்து நிற்கும் வகையில் தன் நாட்டைத் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் ஆண்டு வந்தான்.

b)

மலைச் சாரலில் உள்ள கரிய கிளைகளில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களின் தேனைக் கொண்டு தேனீக்கள் பெரிய தேனடைகளைக் கட்டும் சிறந்த நாட்டைச் சார்ந்தவன் என் தலைவன்

c)

கணவர்க்கு இனிய துணையாக விளங்கும் பெண்களுக்கு இன்றியமையாததான கற்பைக் கடமையாக மேற்கொண்ட இவளைப் போன்ற பொலிவினையுடைய தெய்வத்தை நான் கண்டதில்லை.

d)

உலகத்தில் இறத்தல் என்பது புதுமையானது அன்று, கருவில் தோன்றிய நாள் முதல் இறப்பு என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது. வாழ்க்கை இனிதென்று மகிழ்ந்ததும் இல்லை; ஒரு வெறுப்பு வந்ததும் வாழ்க்கை துன்பமானது என்று ஒதுக்குதலும் இல்லை. மின்னலினால் பெருமழை தோன்றும்.

28.

பின்வரும் வாக்கியத்தை ஏற்ற இணைமொழியைக் கொண்டு நிறைவு செய்க


_________________________________ வசிப்பவர்களுடன் நட்புப் பாராட்டி வாழ்வது சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.

a)

சீராட்டிப் பாராட்டி

b)

விருப்பு வெறுப்பு

c)

தயவு தாட்சணியம்

d)

அக்கம் பக்கம்

29.

பின்வரும் வாக்கியத்தை ஏற்ற இணைமொழியைக் கொண்டு நிறைவு செய்க.


நம் முன்னோர்கள் எக்காரியத்தையும் செய்யும் முன் ________________________ பார்த்துத் தான் செய்வார்கள்.

a)

கால நேரம்

b)

இன்ப துன்பம்

c)

அக்கம் பக்கம்

d)

விருப்பு வெறுப்பு

30.

பின்வரும் வாக்கியத்தை ஏற்ற இணைமொழியைக் கொண்டு நிறைவு செய்க.


வீட்டுப்பாடம் செய்யாத தேன்மொழி, ஆசிரியரிடம் _________________________________ சொல்லலித் தப்பிக்கப் பார்த்தாள்.

a)

சண்டை சச்சரவு

b)

தயவு தாட்சணியம்

c)

சாக்குப் போக்கு

d)

கால நேரம்

31.

பின்வரும் வாக்கியத்தை ஏற்ற இணைமொழியைக் கொண்டு நிறைவு செய்க.


என் ________________________ தெரிந்து கொள்ள நாடி சோதிடரை நாடிச் சென்றால் அவர் ஒவ்வொரு காலக் கட்டத்தையும் அறியத் தனித்தனியாக ஐம்பது ரிங்கிட்டைக் கேட்கிறார்.

a)

ஆதி அந்தம்

b)

இன்ப துன்பம்

c)

அரிய பெரிய

d)

அக்கம் பக்கம்

32.

பின்வரும் வாக்கியத்தை ஏற்ற இணைமொழியைக் கொண்டு நிறைவு செய்க.


‘கோவிட் 19’ தாக்கத்தால் நாட்டில் பலர் வேலையிழந்து அவதிபடுவதால் அரசாங்கம் அவர்களிடம் ________________________________ காட்ட வேண்டும்.

a)

தயவு தாட்சணியம்

b)

சாக்குப் போக்கு

c)

இன்ப துன்பம்

d)

விருப்பு வெறுப்பு

33.

மேற்காணும் படங்களை ஒன்று சேர்க்கவும். இதில் வெளிப்படும் இணைமொழி யாது?

a)

அக்கம் பக்கம்

b)

சாக்குப் போக்கு

c)

இன்ப துன்பம்

d)

சீராட்டிப் பாராட்டி

34.

மேற்காணும் காட்சி உணர்த்தும் இணைமொழி யாது?

a)

கால நேரம்

b)

சாக்குப் போக்கு

c)

விருப்பு வெறுப்பு

d)

சண்டை சச்சரவு

35.

மேற்காணும் காட்சி உணர்த்து உவமைத்தொடர் யாது?

a)

விழலுக்கு இறைத்த நீர் போல

b)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

c)

இருதலைக் கொள்ளி எறும்பு போல

d)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

36.

மேற்காணும் காட்சி உணர்த்தும் பழமொழி யாது?

a)

ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்.

b)

ஆடிக்கறப்பதை ஆடிக்கற பாடிக்கறப்பதைப் பாடிக்கற.

c)

அகல உழுவதினும் ஆழ உழுவது மேல்.

d)

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.

37.

கீழ்க்காணும் சூழல்களுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


கதிரவன் ஒரு மளிகைக்கடை வியாபாரி. அந்த ஊரிலேயே நாணயமான வியாபாரி என்றால் கதிரவனைத்தான் கூறுவார்கள். ஆனால், அவரோ மக்களிடையே பெயரெடுக்க பொய்யான அளவைக் காட்டும் தராசைக் கொண்டு பொருள்களைக் கட்டி விற்றுக் கொண்டிருந்தது யாருக்கும் தெரியவில்லை. ஒருநாள் அவ்வூருக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் அக்கடைக்குப் பானம் வாங்கிக் குடிக்க வந்தார். அந்நேரம் பார்த்து கதிரவனின் இளைய மகன் தவறுதலாகத் தராசைத் தட்டிவிட தராசின் உண்மை நிலவரம் வெளிப்பட்டுவிட்டது. கதிரவன் உண்மையாக நடந்து கொள்ளாததும் வெளிச்சத்துக்கு வந்தது.

a)

சாயம் வெளுத்தது

b)

காதில் பூ வைத்தல்

c)

ஒத்துப் பாடுதல்

d)

நெளிவு சுளிவு

38.

கீழ்க்காணும் சூழல்களுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


சாலையில் சென்று கொண்டிருந்த அந்த அபலைப் பெண்ணைப் பார்க்க அமுதாவுக்கு மனம் கசிந்தது. இடுப்பில் கைகுழந்தையுடனும் கையில் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு மகனையும் பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள். கையை ஏந்தியவாறு மற்றவரிடம் உணவுக்காகச் சில்லறை காசுகளைக் கேட்டு யாசகம் செய்து கொண்டிருந்தாள் அவள். இந்தக் காட்சியைக் கண்ட அமுதா உடனே அவள் மேல் பரிவு கொண்டு அவளையும் அவள் குழந்தைகளையும் அருகிலுள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்று உணவு வாங்கிக் கொடுத்தாள்.

a)

கருணைக் கடல்

b)

நிறை குடம்

c)

இனிப்புக் காட்டுதல்

d)

ஓய்வு ஒழிச்சல்

39.

கீழ்க்காணும் சூழல்களுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


உதயா தன்னுடன் கல்லூரிவிடுதி அறையில் தங்கி இருக்கும் கருணாவின் நடவடிக்கையில் சில நாள்களாகவே சில மாறுதல்களைக் கண்டான். முன்புபோல் கலகலப்பாக இல்லாமல் சோர்ந்து இருந்தான்; கேள்வி கேட்டாலும் பதில் இல்லை. அவன் பாடு என்று எண்ணி வார இறுதி விடுமுறையில் வீட்டுக்குச்சென்று திரும்பிய உதயாவுக்கு,கருணா காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சித்துத் தக்க சமயத்தில் காப்பாற்றப்பட்டு மருத்துவமையில் இருக்கும் அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. தன்னால் கருணாவின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளமுடியாமல் போயிற்றே என்று நினைத்து வருந்தினான் உதயா.

a)

கெடுவான் கேடு நினைப்பான்

b)

சைகை அறியாதவன் சற்றும் அறியான்

c)

மனக்கவலை பலக் குறைவு

d)

துணை போனாலும் பிணை போகாதே

40.

கீழ்க்காணும் சூழல்களுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


தேர்வு எழுதத் தயாராக மேசை முன் அமர்ந்தான் செழியன். ஆசிரியர் அவன் முன் தேர்வுத்தாளை வைத்தார். “ஆரம்ம்பிக்கலாம்,” என்று ஆசிரியர் கூறியதும் தேர்வுத்தாளைத் திறந்து, கேள்விகளைக் கண்ணோட்டமிட்டான். எந்தக் கேள்விக்கும் அவனுக்குப் பதில் தெரியவில்லை. எப்போதும் கைபேசியில் வீண்கதைப் பேசி காலத்தைக் கழித்த அவன்,பாடப் புத்தகத்தைத் திறந்து ஏதாவது படித்திருந்தால்தானே பதில் எழுத முடியும்!

a)

மனக்கவலை பலக் குறைவு

b)

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

c)

சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்

d)

திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை